Monday, September 20, 2010

நகைச்சுவைகளை ரசிக்க வேண்டும்


எல்லோரும் சந்தோசமாக இருக்க வேண்டும் . இப்போதெல்லாம் எல்லோரும் மருந்தும் கையுமாக அலைகிறார்கள் . மனதில் அமைதி வேண்டும் , பொறுமையாக இருக்க வேண்டும், சந்தோசமாக இருக்க வேண்டும் இப்படி எல்லோரும் சொல்கிறார்கள் .

அவற்றுக்கு எல்லாம் நேரம் இல்லையே . இதுதான் பிரச்சனைகளுக்கும் காரணம் . பிரச்சனைகளை பொறுமையாக பேசி தீர்த்தாலே அந்த பிரச்சனை தீரும் . அப்படி நடப்பதில்லை . உடனே மனக்கசப்பு தான் ஏற்படுகிறது .
http://www.retirement-quotes.com/images/Retirement-Jokes-Image-Laugh-a-Little-Each-Day.jpg
நகைச்சுவைகளை ரசியுங்கள் . மற்றவர்களுடன் கதைக்கும் போதும், நண்பர்களுடனும் நகைச்சுவையாக பேசி சிரித்து சந்தோசமாக இருங்கள் . மனம் அமைதியாக இருக்க மனதில் உள்ள கவலைகளை மறக்க நகைச்சுவை படங்கள் , காட்சிகள் போன்றவற்றை பாருங்கள் .

இப்போதுதான் நகைச்சுவைகளுக்கு என்றே தனியாக ஒவ்வொரு சனல்களே இருக்கின்றன. வாய்விட்டு சிரியுங்கள் , நோய் விட்டு போகும் . கடும் கோபம் மன அழுத்தத்தை உண்டாக்கி இரத்த கொதிப்பு ஏற்படுகிறது . இப்படி இப்படியே ஒவ்வொரு நோய்களும் மாறி மாறி வருகின்றன .

நான்கு  பேருடன் சந்தோசமாக , கதைத்து , பேசுங்கள் . நாட்டு நடைமுறை , புதினங்கள் , உலக நடப்புகளை பேசி நான்கும் தெரிந்து கொள்ளுங்கள் . மனதை ஆறுதலாக வைத்திருங்கள் .
தொட்டத்துக்கு எல்லாம் கோப படாமல் அமைதியாக இருக்க பழகுங்கள் .


3 comments:

'பரிவை' சே.குமார் said...

//நான்கு பேருடன் சந்தோசமாக , கதைத்து , பேசுங்கள் . நாட்டு நடைமுறை , புதினங்கள் , உலக நடப்புகளை பேசி நான்கும் தெரிந்து கொள்ளுங்கள் . மனதை ஆறுதலாக வைத்திருங்கள் . தொட்டத்துக்கு எல்லாம் கோப படாமல் அமைதியாக இருக்க பழகுங்கள் .
//

Correct....

Vaai vittu siriththal Nooi vittup pogum illaiya?

r.v.saravanan said...

வாய் விட்டு சிரியுங்கள் நோய் விட்டு போகும் கஷ்டங்களும் மறந்து போகும் கரெக்டா பவி

Pavi said...

மிகச்சரி தான்
நன்றி சரவணன்