Saturday, August 6, 2011

சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய்கள்

http://images.mylot.com/userImages/images/postphotos/1543691.jpg


நான் அன்றாட சமையலில் பலவித எண்ணெய் வகைகளை பயன்படுத்துகிறோம் .  எண்ணெய் இல்லாத சமையலை நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு நம் சமையல் முறையில் அசைக்கமுடியாத இடம் பிடித்திருக்கிறது எண்ணெய். நாம் பயன்படுத்துகிற எண்ணெய்க்கும் இதய நலனுக்கும் மிக நெருக்கமான தொடர்பு இருக்கிறது.
http://foodstoreng.biz/image/data/img-cooking_oil.jpg
நாம் எல்லோரும் எண்ணெய் வகைகளை பயன்படுத்த காரணம் நாம் சாப்பிடுகின்ற உணவுக்கு அவை சுவையையும் , நறுமணத்தையும் கூட்டுகிறது . எண்ணெய் உடல் ஆரோக்கியத்தின் எதிரி. அதிக எண்ணெய்யை உட்கொண்டால், உடலில் கொழுப்புச் சத்து அதிகரித்து ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படும். இது இதயத்திற்கு ஆபத்து. உணவு கட்டுப்பாடு என்றாலே அது எண்ணெய்யிலிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும்.
http://www.bombayharbor.com/productImage/0765457001287047149/For_Sell_Vegetable_Oil.jpg
எண்ணெய் ஒரு கொழுப்பு செறிந்த உணவு, சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் சுத்தீகரிக்கப்பட்ட தாவிரத்திலிருந்து கிடைக்கும் கொழுப்பு. சாதாரண சீதோஷ்ண நிலையில் திரவமாக இருக்கும். தேங்காய் எண்ணெய், பாமாயில் இவை திரவ நிலையை விட திட நிலையில் உறைந்திருக்கும்.

நம்மில் பலர் எண்ணைகளை சேமித்து வைத்து பாவிக்கிறார்கள் . அது கூடாது .  சமைக்கும் போது எவ்வளவு குறைவாக முடியுமோ அவ்வளவு குறைவான எண்ணெய்யை பயன்படுத்துங்கள். ஒரு முறை உபயோகித்த பின் மறுமுறை அந்த சுட்ட எண்ணெய்யை உபயோகிக்காதீர்கள். அதை சேமித்து வைத்து மறுபடியும் சூடாக்கினால் ஹைட்ரஜன் சேர்ந்து டிரான்ஸ் ஃபேட் ஆக மாறும்
http://images.mylot.com/userImages/images/postphotos/2289860.jpg
சூரியகாந்தி எண்ணெய் , ஒலிவ் எண்ணெய் , தேங்காய் எண்ணெய் , மரக்கறி எண்ணெய் என இப்போது பலவிதமான எண்ணெய் வகைகள் கடைகளில் கிடைக்கின்றன . எவற்றை ஆயினும் அளவோடு பயன்படுத்த வேண்டும் .








 

5 comments:

'பரிவை' சே.குமார் said...

Nalla pakirvu pavi.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பகிர்வுக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

எல்லோருக்குமே பயன்படும் பதிவு.

Pavi said...

நன்றி சௌந்தர்

Pavi said...

நன்றி லக்ஷ்மி அம்மா