Friday, November 11, 2011

இக்காலத்தில் நல்ல நட்பு அமைவது கடினம்


http://3.bp.blogspot.com/_hSiaXd3Pwpc/TM7Meqt4hPI/AAAAAAAAACM/DgorVFWTkk8/s1600/friendship.jpg

நட்பு என்பது சொந்த பந்தங்களை தாண்டி ஒருவர் மீது இன்னொருவருக்கு ஏற்படும் பாசம் , அன்பு அதையும் தாண்டியது . தங்கையோடு அண்ணன் நட்போடு இருக்கலாம் . அக்காவோடு தங்கை நட்போடு இருக்கலாம் . ஆனால் ஊர் வேறு , மொழி வேறு என ஒரு சொந்தமும் இல்லாமல் வருவது நட்பு .

எத்தனைபேருக்கு ஆத்மார்த்தமான நண்பர்கள் கிடைக்கின்றார்கள் . தனது நண்பிக்காக எதையும் செய்யும் , செய்யத் துணியும் நட்பு கொண்டவர்கள் எத்தனை பேர் . அப்படி இருப்போர் அபூர்வம் . விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் தான் உள்ளனர் . 
http://www.sadmuffin.net/cherrybam/graphics/comments-friendship/friendship027.gif
நமக்கு நல்ல பெற்றோர் கிடைத்தால் நாமும் நல்லவர்களாக , சமுதாயத்தில் ஒரு நல்ல பிரஜையாக வாழ்வோம் . நல்ல நட்பு கிடைத்தால் அவன் எமது வாழ்நாள் பூராக நன்றிக்கடன் பட்டவனாகவும் , எமது நன்மை , தீமைகளுக்கு எமக்கு உறுதுணையாகவும்,  சோர்ந்து இருக்கும் போது தட்டி தூக்கி விடுபவனாகவும் , ஆபத்தில் உதவி செய்ய முன் நிட்பவனாகவும் , எமக்கு ஒரு பிரச்சனை என்றால் தீர்த்து வைக்கும் ஒருவனாகவும் , எமது கவலைகளை அவனிடம் கொட்டி தீர்த்து அதற்க்கு ஒரு தீர்வு சொல்லும் ஒரு ஆசானாகவும் இருக்கிறான் ஒரு நண்பன் .
http://1.bp.blogspot.com/-OjjSQXbiRss/Tf5ZqJZLGRI/AAAAAAAAAGc/KsIh-fNYjV0/s400/1626.jpg
சிறுவயதில் பழகிய நட்பு நாம் வாழும் வரைக்கும் தொடர்கிறது என்றால் அந்த நட்பில் ஒரு களங்கமும் இராது . அது சிறந்த நட்பு . எப்போதும் எதையும் விட்டுக் கொடுத்து , தமது கவலைகளை சொல்லி தீர்த்து இருவரும் தமது முன்னேற்றப் பாதையில் , வாழ்வில் சிறந்து விளங்குவார்கள் . ஆண்களின் நட்பு இறுதிவரை செல்கிறது . ஆனால் , பெண்களின் நட்பு அப்படி தொடர்வது குறைவு . கல்யாணம் செய்தவுடன் அந்த நட்பு சிலருக்கு தொடர்வதில்லை . 

சிலர் நாம் எப்போதும் நண்பர்கள் என அந்த நட்பை தொடர்கிறார்கள் . பெண்கள் ஒரு ஆணுக்கு நண்பியாக இருக்கும்போது அந்த நட்பு காதலாக மாறி திருமணத்தில் முடி வடிகிறது . ஆனால் , சிலரது நட்பு அப்படி இல்லை . கடைசி வரைக்கும் அவன் ஒரு நண்பனாக இருக்கிறான் . அவன் வேறு ஒருவரை திருமணம் செய்கிறான் . அவள் வேறோ ஒருவரை திருமணம் செய்கிறாள் . ஆனாலும், அவர்கள் நண்பர்களாக தமது இன்ப , துன்பங்களை பகிர்ந்து கொள்கிறார்கள் . 
http://dydara.files.wordpress.com/2010/03/i-love-my-friends.jpg
ஆனால் , எல்லா இடங்களிலும் இப்படி நடப்பதில்லை . அவளுடைய கணவன் சந்தேகப்பட்டால் அவளது வாழ்க்கையில் சண்டை, சச்சரவு வந்து இவர்களின் பழைய நட்பால் விவாகரத்து வரை செல்வதும் உண்டு . அதற்க்கு ஏற்றபடி நடந்து கொள்ள வேண்டியது அவரவர் பொறுப்பு .

நட்புக்கு எல்லை இல்லை . நல்ல நட்பால் சாதித்தவர்கள் அதிகம் . நட்பு என்ற போர்வையில் சீரளிந்தவர்களும் உண்டு . நமக்கு ஏற்ற நண்பர்களை தேர்வு செய்து அவனது பழக்கவழக்கங்கள், குணங்கள் எமக்கு பிடித்திருந்தால் அவனை எமது நண்பனாக ஏற்றுக் கொள்ளலாம் . அவன் தீய பழக்கங்களுடன் இருக்கிறான் என்றால் அவனை விலத்தி நாமும் விலகி நடப்பது நமக்கு நல்லது . 
http://1.bp.blogspot.com/-sEcw97rm5Vc/TeMM1RCEpII/AAAAAAAAGp0/imKivfY7jlI/s1600/friend_pic.jpg
வெளிப்பார்வைக்கு எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது . வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கபடாது . எல்லோருக்கும் ஒவ்வொரு காலகட்டத்தில் பல நண்பர்கள் வருவார்கள், பழகுவார்கள் . ஆனால் , அவை நிலைப்பதில்லை . சிலருக்கு சிலரது நட்பு பாடசாலை காளான்கள் முடிந்ததும் முடிவடைகிறது . சிலரது நட்பு தொடர்கிறது . 
இன்னும் சிலரது நட்பு வேலை செய்யும் இடங்களில் இருந்து ஆரம்பிக்கிறது .

5 comments:

பாலா said...

மனைவி அமைவது மட்டுமல்ல, நல்ல நட்பு அமைவது கூட இறைவனது வரம்தான்.

Anonymous said...

dear friend

அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி
அடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி (திருவருட்பா அகவல்)

திருவடி தீக்ஷை(Self realization)

இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.இது அனைவருக்கும் தேவையானது.
நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.

http://sagakalvi.blogspot.com/


Please follow

(First 2 mins audio may not be clear... sorry for that)
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo



Online Books
http://www.vallalyaar.com/?p=409


Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454

r.v.saravanan said...

நல்ல நட்பு அமைவது என்பது ஒரு வரம்

Pavi said...

உண்மைதான் . நன்றி பாலா

Pavi said...

நன்றி சரவணன்