Friday, July 19, 2013

எனக்கு பிடித்த பாடல்

சிங்கம் 2 படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடித்து இருக்கிறது . வரிகளும் அருமை . விவேகாவின் வரிகளில் , சுவேதா மோகனின் குரலில், தேவி ஸ்ரீப்ரசாத் இசையில் பாடல் அழகாக இருக்கிறது . 


புரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லை
முதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லை
உனது ஞாபகம் மறையவில்லை அதை
மறைக்க என்னிடம் திறமை இல்லை
விழியில் பார்க்கிறேன் வானவில்லை
அதை விழுந்த காரணம் தோணவில்லை 
இதுபோல் இதுவரை ஆனதில்லை

புரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லை
முதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லை

காலை எழுந்தவுடன் என் கனவுகள் முடிவதில்லை
மாலை மறைந்தாலும் பள்ளிக்கூடம் மறப்பதில்லை
தோழி துணையை  விரும்பவில்லை
தோழன் நீயும் மாறவில்லை
பேச்சில் பழைய வேகம் இல்லை
பேச ஏதும் வார்த்தைகள் இல்லை

புரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லை
முதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லை

சாரல் மழையினிலே உடல் ஈரம் உணரவில்லை
சாலை மரங்களிலே இன்று ஏனோ நிழல்கள் இல்லை
கால்கள் இரண்டும் தரையில் இல்லை
காலம் நேரம் மாறவில்லை
காற்றில் எதுவும் அசையவில்லை
காதல் போல கொடுமை இல்லை.(புரியவில்லை )





என்றும் எம்மனதை விட்டு நீங்காதவர் கவிஞர் வாலி


திரைத்துறையில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக சாதிப்பது என்பது எவ்வளவு பெரிய விடயம் . அப்படி ஜொலித்தவர் கவிஞர் வாலி . என்றும் இவரது படைப்புகள் பிரகாசித்துக் கொண்டே இருக்கும் . காலத்தால் அழியாத பல பாடல்களை எமக்காக அவர் தந்து விட்டு இவ்வுலகை விட்டு பிரிந்திருக்கின்றார் . 

கவிஞர் வாலியின் இழப்பு தமிழ்த்திரை உலகுக்கு மட்டுமல்ல தமிழ் பேசும் மக்களினதும் பேர் இழப்பாகும் . வாலியை போல் ஒருவரும் இல்லை . இனியும் வாலியை போல் வருவதற்க்கு எவரும் இல்லை . அவ்வாறான மகத்தான கவிஞரை நாம் இழந்து விட்டோம் . 

எம்.ஜி.ஆர் காலம் தொட்டு இன்றைய தலைமுறை நடிகர்கள் வரை பல பாடல்களை எழுதி உள்ளார் . அன்றைய காலகட்டத்துக்கு ஏற்றாற்போல் தத்துவ பாடல்கள் முதல் இன்றைய காலகட்டத்து இளசுகள் முதல் எல்லோருக்கும் பிடித்த பாடலாசிரியர் என்றால் அது வாலியாகத்தான் இருப்பார் . தமிழ் சினிமா உலகில் வாலிப கவிஞர் என அழைக்கப்பட்ட கவிஞர் வாலி இதுவரை 15 ஆயிரம் பாடல்கள் வரை எழுதியுள்ளார். 

வாலி ஐந்துமுறை சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான மாநில அரசின் விருது பெற்றவர். சிறுகதை, கவிதை, உரைநடை என இருபதுக்கும் மேற்பட்ட புத்தங்கள் எழுதியுள்ளார். தமிழ் மேல் தீராத பற்று கொண்டிருந்த வாலிக்கு ஓவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. நன்றாகப் படம் வரையும் திறமையும் இருந்தது. 

இவர் எழுதிய பாடல்களில் மனம் விட்டு நீங்காத பாடல்களாக புதிய வானம் புதிய பூமி, ஏமாற்றாதே ஏமாறாதே, கண் போன போக்கிலே கால் போகலாமா, நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால், அம்மா என்றழைக்காத உயிர் இல்லையை, அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே இது போன்ற பாடல்கள் ஏராளம். முன்பே வா என் அன்பே வா என அவரது பாடல்கள் அனைத்தும் ஹிட் பாடல்களும் கூட .

பொய்க்கால் குதிரை, சத்யா, ஹேராம், பார்த்தாலே பரவசம் உட்பட சில படங்களில் நடிகராகவும் நடித்து பாராட்டுகளைப் பெற்றுள்ளார். இப்போதைய இளையர்கள்  எந்த ரக பாடல்களை விரும்புகிறார்களோ அவர்களின் ரசனை அறிந்து பாடல்களை தருவதில் வல்லவர் வாலி . அதனால் தான் எல்லோரும் விரும்பும் , விரும்பப்படும் கவிஞர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்  கவிஞர் வாலி. 

கண்போன போக்கிலே கால் போகலாமா.. கால் போன போக்கிலே மனம் போகலாமா ? என்று பாடல்களை எல்லாம் எமக்கு தந்து விட்டு இவ்வுலகை விட்டு நீங்கி விட்டீர்கள் . எனினும் எம் போன்ற பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மனதில் என்றும் நீங்காத  இடம் பிடித்து விட்ட நீங்கள் என்றும் எம்முடன் தான் இருப்பீர்கள் . "இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.." 

Tuesday, April 23, 2013

எனக்கு பிடித்த பாடல்




விடுகதை திரைப்படத்தில் எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் . எப்போதும் கேட்க பிடித்த பாடலும் கூட . பிரகாஷ்ராஜ் , நீனா ஆகியோர் நடித்த திரைப்படம் . தேவாவின் இசையில் சித்ரா , கிருஷ்ணராஜ் ஆகியோர் இந்த பாடலை பாடி உள்ளனர் . இந்த  படம் 1997 ஆம் ஆண்டு வெளிவந்தது . பலருக்கு பிடித்த பாடலும் கூட


பெண் :இதயம் இதயம் இணைகிறதே இது ஒரு புதுக்கவிதை 
இனியும் இனியும் தொடர்ந்திடுமே தினம் தினம் ஒரு கவிதை 
இதயம் இதயம் இணைகிறதே இது ஒரு புதுக்கவிதை 
இனியும் இனியும் தொடர்ந்திடுமே தினம் தினம் ஒரு கவிதை 
பூங்காற்றே நில்லு நீ விலகியே நில்லு ..........
பூமேனி பிரிந்தால் நீ தழுவியே செல்லு ......
நான் இங்கு நலமே நலமே நலமா நலமா காற்றே சொல்லு 

ஆண் : இதயம் இதயம் இணைகிறதே இது ஒரு புதுக்கவிதை 
இனியும் இனியும் தொடர்ந்திடுமே தினம் தினம் ஒரு கவிதை 

பெண் : நெஞ்சம் மணம் நிறைந்த மஞ்சம் 
இரவுகளில் அஞ்சும் வீசி வந்து கெஞ்சும் 

ஆண் : கொஞ்சம் மயக்கம் வந்து கொஞ்சம் 
தனிமை என மிஞ்சும் உடன்படும் தஞ்சம் 

பெண் : ஓ ஓ மாலையில் மலரும் காலையில் மணக்கும் 
காயங்கள் பார்த்து தனிமையில் சிரிக்கும் 

ஆண் :பூங்காற்றே நில்லு நீ விலகியே நில்லு ......
பூமேனி பிரிந்தால் நீ தழுவியே செல்லு ......
நான் இங்கு நலமே நலமே நலமா நலமா காற்றே சொல்லு 

பெண் :இதயம் இதயம் இணைகிறதே இது ஒரு புதுக்கவிதை 
இனியும் இனியும் தொடர்ந்திடுமே தினம் தினம் ஒரு கவிதை 

ஆண் : தேகம் .....மழை  பொழியும் மேகம் 
கலைந்துவிடும் மோகம் தணியும் அந்த தாகம் 

பெண்: யாகம்  ஆசைகளின் வேகம் 
காமனது யோகம் இரண்டும் உருவாகும் 

ஆண் :ஓ ..ஓ ஊடலில் தானே தேடலின் தொல்லை 
கூடலில் தானே ஊடலின் எல்லை 

பெண் :பூங்காற்றே நில்லு நீ விலகியே நில்லு ..........
பூமேனி பிரிந்தால் நீ தழுவியே செல்லு ......
நான் இங்கு நலமே நலமே நலமா நலமா காற்றே சொல்லு 

ஆண் :இதயம் இதயம் இணைகிறதே இது ஒரு புதுக்கவிதை 
இனியும் இனியும் தொடர்ந்திடுமே தினம் தினம் ஒரு கவிதை 

Friday, March 29, 2013

ஒவ்வொருவரதும் வெற்றிகரமான வாழ்க்கைக்கு ....




நாம் யாராக இருந்தாலும் எமக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்று தான் நினைக்கின்றோம் . ஒருவருக்கு அமையும் வாழ்க்கைத்துணையாக அமைபவர் புரிந்துனர்வுள்ளவராகவும் , பண்பில் சிறந்தவராகவும் இருக்கும் பட்சத்தில் அவர்களின் வாழ்வில் வசந்தம் வீசும் .

தமக்கு வரப்போகும் துணை எப்படி இருக்க வேண்டும் என ஒவ்வொருவரும் எண்ணி இருப்பார்கள் . நடிகர்கள் மாதிரியோ , நடிகைகள் மாதிரியோ இருக்க வேண்டும் என்று நினைப்பதை விட ஒரு சுமாரான , பார்ப்பதற்க்கு அழகாக , நல்ல குணம் கொண்டமைந்தவராக  இருந்தால் போதும் என்று எண்ண வேண்டும் . 

நாம் எதிர்பார்த்தது போல் நமக்கு வாழ்க்கை துணை அமைந்து விட்டால் இறைவா . நீ இருக்கிறாய் அப்பா. எனக்கு ஒரு நல்ல வழி காட்டி விட்டாய். இந்த உலகில் நானும் ஒரு அதிஸ்டசாலி என்று எண்ணுகிறோம் . அதே நாம் எதிர்பார்த்தது அமையாவிடில் இறைவனை கோபித்துக் கொள்கின்றோம் .இது இயற்கையாய் எல்லோருக்கும் அமைவது தான். 

வாழ்க்கையில் அன்பு, அரவணைப்பு , மோதல், புரிதல் , நிம்மதி , சந்தோசம் , துக்கம் என எல்லாம் இருக்கும் . ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து வைத்து இருந்தால் சண்டை, சச்சரவு இன்றி நிம்மதியாக இருக்கலாம் . 

வாழ்வில் சந்தேகம் என்ற கொடிய நோய் இல்லாமல் இருக்க வேண்டும். சந்தேகம் என்ற ஒன்று வந்து விட்டால் தினம் தினம் நிம்மதியற்ற வாழ்வு தான். சண்டை , சச்சரவு தான். அன்றைய பிரச்னையை அன்றே இருவரும் பேசி தீர்வு காண வேண்டும் . பிரச்சனைகளை இழுத்துக் கொண்டு போக கூடாது . 

ஒருவர் மீது ஒருவர் அன்பு வைத்திருக்க வேண்டும். அதுபோல் நம்பிக்கையும் வைத்ஹ்டிருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் இருத்தல் வேண்டும் . மனதில் ஏதாவது கஷ்டங்கள் , துன்பங்கள் இருந்தால் ஒருவருக்கொருவர் அதனை கூறி மனதுக்கு ஆறுதலான விடயங்களை கூற வேண்டும் . இருவருக்கும் இடையில் நட்பு இருக்க வேண்டும் . மனம் விட்டு வெளிப்படையாக இருவரும் பேச வேண்டும். அப்போதுதான் சண்டைகள் வராது . 

ஒவ்வொருவருக்கும் ஒரு நல்ல வாழ்க்கை  கிடைத்தும் அதை அவர்கள் கொண்டு செல்லும் பாங்கில் , அவர்களது கையில் தான் உள்ளது . நம் வாழ்க்கை நமது கையில் . நாம் நடந்து கொள்ளும் பாங்கில் உள்ளது . அதை நாம் சரியாக திட்டமிட்டு செயற்படும் இடத்தில் பிரிவு , சண்டை என்பன ஏற்பட வாய்ப்பில்லை . 

ஒவ்வொருவரதும் எதிர்பார்ப்புகள் நிறைவேற வேண்டும். அவர்களது வாழ்க்கையும் வெற்றிகரமாக அமைய வேண்டும்.  
 







Saturday, March 23, 2013

நாம் நினைப்பது எல்லாம் நடக்கிறதா ?


எல்லோரும் நல்லவர்களாக இருக்க வேண்டும். சந்தோசமாக இருக்க வேண்டும் . மற்றையவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். தீய , கெட்ட செயல்களை  கைவிட வேண்டும்    என்று நாம் நினைக்கிறோம் . நினைப்பது எல்லாம் நடக்கின்றதா இந்த உலகில் . 

எனக்கு ஒரு நல்ல வாழ்வு கிடைக்க வேண்டும் என்று எண்ணுகின்றோம் , நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று நினைக்கின்றோம் , நல்ல கணவனோ, மனைவியோ கிடைக்க வேண்டும், கைநிறைய சம்பளம் பெற வேண்டும், குழந்தைகள் பெற்று வாழ்வில் சந்தோசமாக இருக்க வேண்டும், அம்மா , அப்பாவை கடைசி காலம் வரை கண்கலங்காமல் பார்க்க வேண்டும் இப்படி ஒவ்வொருவரின் நினைவுகள் , கனவுகள் ஏராளம் . இவை அனைத்தும் எல்லோருக்கும் நடக்கின்றதா ? கனவுகள் நனவாகின்றனவா ?

எல்லோருக்கும் இவை அனைத்தும் நடப்பதுமில்லை . நிகழ்வதும் இல்லை . சிலருக்கு நடக்கிறது . சிலர் கிடைத்த வாழ்க்கையை ஏற்றுக் கொள்கிறார்கள் . சிலர் கிடைத்த வாழ்க்கையை வெறுக்கிறார்கள் . சிலர் எல்லாம் முடிந்தவுடன் தான் எல்லாவற்றையும் பற்றி யோசிக்கிறார்கள் . காலம் கடந்து விடும் அல்லவா ?

நாம் நினைத்தவை நிறைவேற வேண்டும்  என்றால் என்ன செய்யலாம் ? எல்லாம் நடப்பவை நடக்கட்டும் என்று இருப்பவர்களும் உண்டு. எது எனினும் அவன் செயல் . இறைவன் செயல் என்று இருப்போரும் உண்டு . 

நாம் அதற்க்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.  தோல்விப் பாதைகளை வெற்றி பாதைகளாக மாற்ற வேண்டும் . தடைக்கற்களை படிக்கற்களாக மாற்ற வேண்டும். எமது முயற்சிகளை கைவிட கூடாது . பிரச்சனைகளில் இருந்து விடு பட வேண்டும். இறை நம்பிக்கை வேண்டும். 

Saturday, March 9, 2013

பெண்ணே உனது பாதை .....


பெண்ணே அடுப்படியில் கிடக்கும் 
பெண்ணுக்கு படிப்பெதட்க்கு என்றார்கள் 
நீ இன்று  கல்வி கற்றதால் தலை 
நிமிர்ந்து நிற்கிறாய் - தைரியமாக இருக்கிறாய் .

பொறாமைப் படாதே - பொறுமையாக இரு 
கோபப்படாதே - அமைதியாக இரு 
தலைக்கனம் கொள்ளாதே - அன்பாய் இரு 
அதட்டாதே - அன்பாய் பேசு 
மேக்கப் போடு - அளவாகப் போடு 
அளவான , அழகான உடைகளை தேர்ந்தெடு 
அரைகுறை , கவர்ச்சியான ஆடைகளை 
தேர்ந்தெடாதே - தேவையற்ற பிரச்சனைகளை 
குறைத்துக் கொள்ள முயற்சி செய் 

எல்லோருடனும் அன்பாக இரு 
உனது இலட்சியப்பாதையை தேர்ந்தெடு 
அதற்கான முயற்சிகளில் இறங்கு 
உனது பாதையை நேர்வழியில் ஆக்கு 
குறுக்கு பாதையை தேர்ந்தெடாதே 
தடைகளை படிக்கற்கள் ஆக்கு 
ஏணி போல் ஏறிக்கொண்டு வெற்றிகளை 
நோக்கி முன்னேறு உனது இலட்சியங்களை 
வெற்றிகரமாக நிறைவேற்று பெண்ணே ......

Friday, March 8, 2013

மகளிர் தினம்




மார்ச் 8 ஆம் திகதி சர்வதேச பெண்கள் தினம் . ஒரு வீட்டின் முதுகெலும்பாக செயற்படுவதும் பெண்கள் . ஒவ்வொரு நாடுகளிலும் பெண்கள்படும் அவஸ்தைகளும் , சித்திரைவதைகளும் இப்போதெல்லாம் அதிகமாக காணப்படுகிறது .

பெண்களது பாதுகாப்பை , அவர்களின் கெளரவம் என்பவற்றை எல்லா நாடுகளும் உறுதி செய்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது இப்போதைய காலகட்டத்தில் . எல்லா பெண்களும் கல்வி கற்று இருக்க வேண்டும். அப்போது தான் குடும்பத்தை கொண்டு நடத்தக் கூடிய பக்குவம் , அறிவு என்பன ஏற்படும் . 

தாமும் வேலைக்கு போய் தமது குடும்பத்தை காக்க வேண்டும் என்று இப்போதைய பெண்கள் பலர் வேலைக்கு சென்று சம்பாதிக்கின்றனர் . கைநிறைய சம்பளமும் பெறுகிறார்கள் . ஆண்களுக்கு நிகராக வேலைக்கு சென்று பணமும் சம்பாதிக்கின்றனர் . 

பெண் என்பவள் சமுதாயத்தின் முதுகெலும்பாகவும் இருக்க வேண்டும். பெண்களுக்கு ஏற்படும் வன்முறை , கொடுமைகள் ஆகியவை நிறுத்தப் பட வேண்டும் . ஒரு தாயாக , மனைவியாக , தங்கையாக , அக்காவாக , மாமியாக , நண்பியாக பல கோணங்களில் பரிணமிக்கிறாள் பெண் . 

பிள்ளைகளை பெற்று ஒரு சிறந்த குடிமகனாக அவள் எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்குகிறாள் . ஒரு மகனின் தோழியாக , அம்மாவாக ஒரு பெண் இருக்கிறாள் . என்னுடைய ரோல் மாடல் அம்மா தான் . என் தோழி தான் என்கிறான் ஒரு ஆண்மகன் . 

ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு மனைவி , தாய் , தோழி இருக்கிறாள் . பெண்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும் . எந்த நாட்டிலும் பாதுகாப்பாக பெண்கள் இருக்க வேண்டும். கொடுமைகள் நிறுத்தப்பட வேண்டும் . 




Thursday, January 24, 2013

கற்றாழையின் மகிமையோ மகிமை



இயற்கையின் கொடைகள்   பல . அவற்றுள் ஒன்று கற்றாழை . நம் முன்னோர்கள் இயற்கை சார்ந்த பொருட்களை  வந்தனர். நாம் எல்லாம் இயற்கையை மறந்து செயற்கை பொருட்களை நாடுகின்றோம் . இயற்கை பொருட்கள் கலப்படம் அற்றவை என்பது நமக்குத் தெரியும் . 

நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை பல மருந்துதன்மை கொண்ட பொருட்கள் நன்மை அளிக்கின்றன . இலவசமாகவே காடுகளில் இம்மருந்து தன்மை கொண்ட பொருட்கள் கிடைக்கின்றன . கிராமப்புறங்களில் எடுத்துக்கொண்டால் கற்றாழை பல இடங்களில் கிடைக்கும். இயற்கையாக வளரும் கற்றாழையில் பல மருத்துவக் குணங்கள் உள்ளன.

கற்றாழை ஆனது மருந்துப் பொருளாகவும் , அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுகிறது . பச்சை நிறத்தில் காணப்படும் கற்றாழை  முட்களுடன் காணப்படும் .  இது ஒரு கசப்புத் தன்மையைக் கொண்டதால் கூடுதல் பலன் அளிக்கும் இயற்கை மருந்துப்பொருளாக உள்ளது. இந்தக் கற்றாழையின் மூலம்  பல நோய்கள் குணமடைகின்றன . 

நீடித்த மலச்சிக்கலை போக்கவும் , வாய்வுத் தொல்லையை நீக்கவும் , வயிற்றின் சூட்டை தடுக்கவும் , தீராத வயிற்று  புண்ணை நீக்கவும் கற்றாழை பயன்படுகிறது . சோற்றுக் கற்றாழையில் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் அனைத்தும் உள்ளன. இதை ஒரு சர்வரோக நிவாரணி என்றுகூட அழைக்கலாம். உடலுக்குத் தேவையான நோய் எதிர்க்கும் ஆற்றலை கற்றாழை வழங்குகிறது.

எப்பொழுதும் வாடாத வகையைச் சார்ந்த இத்தாவரம் வெப்பமான பகுதிகளில் வயல் வரப்புகளிலும் உயரமான பகுதிகளில் வேலிகளிலும் வளரக் கூடியது . பல பருவங்கள் வாழக்கூடியது. சதைப்பற்றுள்ள நீர்ச்சத்து  மிக்க குறுச்செடி. இலைகள் அடுக்கடுக்காக ரோஜா இதழ்கள் போன்று அமைந்திருக்கும்.

சோற்றுக் கற்றாழை , கன்னி , குமரி , தாழை என்று பல பெயர்களில் கற்றாழையை  அழைப்பர் . இலை மற்றும் வேர், இலையில் உள்ள சதைப்பற்றான ஜெல். ஒடித்தால் வரும் மஞ்சள் நிற திரவம் வரும். தளிர்பச்சை,இளம்பச்சை,கரும்பச்சை எனப் பலவிதமாக உள்ள சோற்றுக்கற்றாழை முதிர்நதவற்றில்தான் மருத்துவத்தன்மை மிகுந்து காணப்படுகின்றன.

 முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.  கற்றாழையில் சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை ,பேய்க் கற்றாழை, கருங் கற்றாழை ,செங்கற்றாழை, எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது.

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி , முகம் பளிச்சிடவும் கற்றாழையில் உள்ள  ஜெல் போன்ற திரவம் பயன்படுகிறது . முகத்துக்கு பூசும் கிரீம்கள் , நகத்துக்கு பூசும் நகப்பூச்சு போன்றன இந்த கற்றாழையில் இருந்து தான் பெறப்படுகிறது .நம்மில் சிலர்   வீடுகளிலும் கற்றாழை  வளர்க்கிறார்கள் .  நம்மில் பலருக்கு கற்றாழையின் மகிமை தெரிவதில்லை . தெரியாதவர்கள் கற்றாழையின் மகிமைகளை அறிந்து கொள்வோம் .







Friday, January 11, 2013

தமிழர் பண்பாடு சொல்லும் தைப்பொங்கல்



நமது பண்பாடு, கலாசாரம் என்பவற்றை பாரம்பரியமாகவே கட்டி காப்பவர்கள் தமிழர்கள் . பண்டிகைகள், விழாக்கள் , சடங்குகள் எல்லாம் அன்றில் இருந்து இன்று வரை பின்பற்றி வருகிறார்கள் . தைமாதத்தில் வரும் தைப் பொங்கல் விசேசமானது . புதிய வருடத்தை இனிப்பாக , சந்தோசமாக வரவேற்பார்கள் தமிழர்கள் . 

விவசாயிகள் காலை சேற்றில் மிதித்தால் தான் நாம் சோற்றில் கை வைக்கலாம் . விவசாயிகளுக்கு நன்றி செலுத்த வேண்டும் . அதே போல் நாம் எமக்கு ஒளி  கொடுக்கும் , உலக மக்கள் எல்லோருக்கும் ஒழி கொடுக்கும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் நாளும் இந்த தைத்திருநாள் தான். 

தைத்திருநாள் இல்லமெல்லாம் தளிர்த்திடும் தைப்பொங்கல் . இத்தனை நாள் காத்திருந்தோம் இனிய தமிழ் பொங்கல் என்று நாம் எல்லோரும் சந்தோசமாக வரவேற்க காத்திருப்போம் . பழையன  கழிந்து , புதியன போகுதல் வேண்டும் . துன்பங்கள் நீங்கி இன்பங்கள் உண்டாக வேண்டும் . புதிய பானையில் புது அரிசி இட்டு , கரும்பு கட்டி , சர்க்கரை இட்டு பொங்கும் பொங்கலோ பொங்கல் . 

சூரியன் இல்லையென்றால் இவ்வுலகமே இல்லை . இதனால் தான் நாம் தைத்திருநாள் அன்று பொங்கலை  சூரியனுக்கு படைத்து விட்டு அதன் பின்பு நாம் உண்கின்றோம் . தைப்பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது . உழவுத்தொழிலுக்கு  உதவியாக இருக்கும் கால்நடைகளுக்காக கொண்டாடப்படுகிறது . 

தைபிறந்தால்  வழி பிறக்கும் என்பது நம் முன்னோரின் கூற்று . எல்லோருக்கும் ஒரு நல்ல வழி பிறக்க வேண்டும் என்று உழவர்களும் , நாம் எல்லோரும் நம்பிக்கை கொள்ளும் நாளும் இதுதான் . மனதில் உவகை உண்டாகி இனிப்பாக பொங்கல் உண்ணும் நாளும் இதுவே . 

எமது பண்பாடுகளில்  விருந்தோம்பல் மிகவும் முக்கியமானது . பசித்தோருக்கு உணவு கொடுப்பதிலும் , தானங்களில் சிறந்த அன்னதானம் கொடுப்பதிலும் நாம் எங்கும் , எப்போதும் பின்னிப்பதில்லை . கோவில் திருவிழாக் காலங்களிலும் , பண்டிகைகள் போன்ற விசேச தினங்களிலும் மற்றவர்களுக்கு கொடுத்து உண்பதில் எப்போதும் தமிழர்கள் பின்னிப்பதில்லை . 

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகர்க்கு” என்பது வள்ளுவன் வாக்கு அந்த வாக்கிற்கு ஏற்ப நமக்கு ஒருவர் செய்த உதவியை மறக்காது பிரதியுபகாரம் செய்தல் வேண்டும் .விவசாயிகளுக்கு பயிர்ச்  செய்கைக்கு சூரிய ஒளி அவசியமாகும் அந்த ஒளியை வாரி வழங்குவது சூரியன் . எனவே நாம் சூரியனுக்கு எமது  நன்றியை செலுத்தும் விதமாக சூரியனை வழிபட்டு பொங்கலிட்டு பூசை செய்து தைத்திருநாளை தமிழர்கள் கொண்டாடுவது வழக்கம். அன்று தொடக்கம் இன்று வரை தமிழர்கள் தைத்த்ருநாளை சிறப்பாக கொண்டாடுகின்றனர் . 

இந்த தைத்திருநாளை சந்தோசமாக வரவேற்று புத்தாடை அணிந்து சூரியனுக்கு நன்றி செலுத்தி , அதேபோல் விவசாயிகளுக்கும் நன்றி செலுத்தி தைமகளை புன்னகையுடன் வரவேற்போம் . இந்த ஆண்டு சிறப்பான , சந்தோசம் தரும் ஆண்டாக அமைய வேண்டும் என உவகையுடன் வரவேற்போம் தைமகளை . .........


Thursday, January 10, 2013

அடம்பிடித்தல் ...................



இப்போதெல்லாம் அடம்பிடிக்கும் பழக்கம் எல்லோருக்கும் இருக்கிறது . சிறு குழந்தை தான் அடம்பிடிக்கிறது . சரி அவன் கேட்டதை செய்யுங்கள் என்று விட்டு விடுகிறோம் . பெரியவர்கள் அடம் பிடித்தால் என்ன செய்வது ?.இப்போது பெரியவர்களும் அடம்பிடித்து தான் தமது தேவைகளை நிறைவேற்றுகிறார்கள் .

ஒவ்வொரு விசயமும் அடம்பிடித்து தான் நினைத்ததை சாதித்து கொள்கிறார்கள் . சின்ன பிள்ளைகள் அடம்பிடிக்கும் போது  இனிமேல் இப்படி செய்ய வேண்டும், சரி கோபப்படாமல் குழந்தைக்கு விளங்கும் படி எடுத்துச் சொல்ல வேண்டும் . குழந்தையை அடிக்காமல் அன்பால் அவர்கள் செய்யும் பிழைகளை சுட்டிக் காட்ட வேண்டும் . 

இந்த பொம்மை வேண்டும் . வாங்கி தந்தால் தான் வீட்டுக்கு வருவேன் என குழந்தை அடம்பிடித்து எப்படியும் அப்பா வாங்கி கொடுத்து விடுவார் . பிள்ளை தனக்கு எது வேணும் என்று தோன்றுகிறதோ அதெல்லாம் கேட்டு அடம்பிடித்து வாங்கி விடும். குழந்தைக்கு அன்பையும் , அறிவையும் கொடுப்பது அவர்களது அம்மாவும், அப்பாவும் . கூடவே அவன் வாழும் சுற்று சூழலும் தான் .

பெரியவர்கள் ஆனதும் சில வீடுகளில் பார்த்தீர்கள் என்றால் பையன் அடம்பிடிப்பான் எனக்கு இந்த புது ஸ்டைல் ஜீன்ஸ் , சேட்  தான் வேணும் . அந்த ஹீரோ போட்ட அதே கலர் தான் வேணும் என்று நிப்பான் . அந்தப் பொண்ணு இந்த கலர் சுடிதார் தான் வேணும் , அதே விலை கூடிய சுடிதார் தான் வேணும் என கடையில் நின்று தமது பெற்றோரிடம் சண்டை பிடிப்பார்கள் . தமது குடும்பத்து நிலைமை என்ன என்பது பற்றி பையனோ, பெண்ணோ சிந்திப்பதில்லை .

பெற்றோர் தமது கையில் உள்ள பணத்துக்கு ஏற்ப தமது பிள்ளைகளுக்கு உடுப்புகளை வாங்கி கொடுப்போம் என்று கடைக்கு வந்து இருப்பர் . ஆனால் , பிள்ளைகள் கேட்கும் உடுப்புகளை வாங்கி கொடுக்க அந்த பெற்ற்ரோரிடம் அவ்வளவு பணம் இல்லை . ஐயோ கடவுளே இவ்வளவு காசு கொடுத்து இந்த உடுப்பை வாங்கவா வேணும் என அந்த பிள்ளைகளை பார்த்து கேட்டால் மற்றவர்கள் மாதிரி நாங்களும் இந்த உடுப்பு தான் போடா வேண்டும் என்று அடம்பிடிப்பார்கள் .

தாயும், தந்தையும் மனம் கூனி நிப்பார்கள் . எமது கஷ்டத்தை எமது பிள்ளைகள் புரிந்து கொள்கிறார்கள் இல்லையே என்று நினைத்து கொள்வதும் உண்டு. அதைவிட இப்போதெல்லாம் தமக்கு இந்த பொண்ணு தான் வேணும். இவளைத்தான் நான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று அடம்பிடித்து பெற்றோரின் சம்மதத்துடன் நடக்கும் திருமணங்களும் ஏராளம் . பொண்ணுகளும் அப்படித்தான் . 

இதில் சில திருமணங்கள் சந்தோஷகரமானதாக அமைகிறது . சில திருமணங்கள் மனக்கசப்புகள் வேறு பிரச்சனைகளால் துன்பகரமானதாக அமைவதும் உண்டு . அடம்பிடித்தல் என்பது இப்போது எல்லோருக்கும் இருக்கிறது குழந்தைகளுக்கும் சரி , பெரியவர்களுக்கும் சரி.