எல்லோரும் செருப்பு காலுக்கு போடுவது வழக்கம் . ஆண்களும் சரி , பெண்களும் சரி செருப்புகளை அணிகிறோம் . வேலைக்கு செல்பவர்கள், தலைவர்கள் எல்லோரும் சப்பாத்து அணிகிறார்கள் . ஒருவரும் வெறும் கால்களுடன் பாதைகளில் நடப்பதில்லை . நாம் மற்றவர்கள் இப்படி போடுகிறார்கள் , அப்படி போடுகிறார்கள் என்று அவர்களை பார்த்து அதை போல் வாங்க கூடாது . நமக்கு எது பொருத்தமானதாக இருக்கிறதோ அதை தான் வாங்க வேண்டும் . அவர் போடுகிறார் அந்தளவு செருப்பு நானும் அதை தான் வாங்குவேன் என்று உங்களது காலுக்கு இறுக்கமானதோ அல்லது உங்கள் காலை விட பெரிய செருப்புகளையோ அணிய கூடாது .
நமக்கு ஏற்ற அளவு , எங்களது காலுக்கு எப்படியான செருப்புகள் அழகாக இருக்கிறது , அதன் தரம் நல்லதா , நீண்ட நாட்களுக்கு பாவிக்க கூடியதாக இருக்கிறதா என முக்கியமாக பார்த்து வாங்க வேண்டும் . ஆண்களானாலும் , பெண்களானாலும் இதனை முதலில் கடைப்பிடிக்க வேண்டும் . விலை அதிகம் இருந்தாலும் நல்லதாக செருப்பு இருக்க வேண்டும் . நான்கு , ஐந்து அடி நடந்து பார்த்து எமது காலுக்கு பொருத்தமாக , சரியாக இருக்கிறதா என பார்த்து வாங்க வேண்டும் .
இப்போதெல்லாம் முன்னைய காலங்களை போல் செருப்புகளை நீண்ட நாட்களுக்கு பாவிக்க முடிவதில்லை . ஒட்டிய பசை கழன்று விடும் , தைத்த தையல் விட்டு விடும் , செருப்பு வெடித்து விடும் , ஹீல்ஸ் கழன்று விடும் இப்படி பல பிரச்சனைகள் உண்டு . செருப்புகளை டசின் கணக்கில் வைத்திருப்போரும் உள்ளனர் . தமது உடுப்புக்கு ஏற்ற கலரில் காலில் செருப்புகள் அணிவோரும் உண்டு .
பொதுவாக, எல்லா செருப்புகளுமே பார்பதற்கு அழகாக இருக்கும். செருப்புகளின் அழகை பார்க்காமல், தங்கள் உடல் அமைபுக்கு ஏற்றவாறும், அணியும் உடைக்கு ஏற்றவாறும், ஆரோக்கியத்துக்குரியதாகவும் அதை தேர்வு செய்வது அவசியம்.
செருப்பு அணியும்போது, அதற்கு பொருத்தமாக ஆடையை தேர்வு செய்வது முக்கியம். கறுப்பு அல்லது டார்க் கலர் ஆடையை அணிந்துகொண்டு, பிரவுன், சந்தன நிற செருப்புகளை அணிந்தால் பொருத்தமாக இருக்காது. அதேநேரம், கறுப்பு அல்லது டார்க் நிற செருப்பை அணிந்துகொண்டால் பொருத்தமாக இருக்கும்.
ஆடைகளில் மட்டுமே காணபட்ட எம்ராய்டரி வேலைகள் இப்போது நவீன செருப்புகளிலும் இடம்பெறுகின்றன.
இன்றைய ஹீல்ஸ் மற்றும் எம்ராய்டரி செருப்புகள் பற்றிய விவரங்களை நடிகைகளை பார்த்துதான் பலரும் தெரிந்துகொள்கிறார்கள். சினிமா காட்சிகளில் தோன்றும் நடிகைகள் விதவிதமான செருப்புகளைம், ஹீல்ஸ்களைம் அணிகின்றனர். நடிகைகளின் கால்களை அலங்கரிக்கும் இந்த அழகு செருப்புகள் தங்கள் கால்களையும் அலங்கரித்தால் எப்படி இருக்கும்? என்று எணும் இன்றைய புதுமை விரும்பி பெண்கள், அந்த குறிப்பிட்ட மாடல் செருப்புகளை விரும்பிய கலரில் தேர்வு செய்து அணிந்து மகிழ்கிறார்கள். இன்றைய பெண்கள் பெரும்பாலும் பிளாட் (தட்டை வடிவம்) மற்றும் பாயின்ட்டட் வகை (ஹீல்ஸ் போன்ற மெல்லிய வடிவம்) காலணிகளையே அதிகம் தேர்வு செய்கிறார்கள். இவைதவிர, ஸ்டெலட் டோஸ், மழைக்காலங்களில் கால்களுக்கு பாதுகாப்பு தரும் லாங் பூட்ஸ், லேக்அப் ஷூ மற்றும் பூட்ஸ், ரெடைல் லெதர், ஓபன் டை ஷூ… என்று பல வகைகளில் தயாராகும் காலணிகள் இன்றைய மாடர்ன் மங்கையரின் அழகு கால்களை அலங்கரிக்கின்றன
ஹீல்ஸ் அணியும்போது சில விஷயங்களை கட்டாயம் பின்பற்றியே ஆக வேண்டும். ஹீல்சை அணிந்துகொண்டு எக்காரணம் கொண்டும் ஓடக்கூடாது. வேகமாகவும் நடக்கக்கூடாது. மீறி நடந்தால் நீங்கள் கீழே விழுந்து விடுவீர்கள். மழைக்காலங்களில் ஹீல்ஸ் அணிவதை தவிர்த்துவிட வேண்டும். அந்த நேரங்களில் ஹீல்ஸ் அசவுகரியத்தையே ஏற்படுத்தும். இந்த வகை செருப்புகளை தனியாக ஒரு பாக்ஸில் வைத்து பராமரிக்க வேண்டும். மற்ற செருப்புகளுடன் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், ஹீல்ஸ் பொலிவை இழந்துவிடும். அதன் ஆயுளும் குறைந்துவிடும். ஹீல்சின் பளபளப்பு குறைவதாகத் தெரிந்தால், அவ்வப்போது பாலீஷ் போட்டுக்கொள்ள வேண்டும்.
உங்களுக்கு பிடித்த , மனம் கவர்ந்த செருப்புகளை அணிந்து நீங்களும் அழகாக இருங்கள் . பண்டிகை காலங்களில் பல விதம்விதமான , அழகான செருப்புகள் கடைகளில் கிடைக்கும் . பார்த்து பிடித்திருந்தால் வாங்கி அணியுங்கள் .
4 comments:
Cheppals vilakkamum padangalum arumai.
arumaiyaana pakirvu.......
thanu
நன்றி குமார்
நன்றி தனு
Post a Comment