இன்று வலை உலகில் பல பெண்கள் பல பதிவுகளை இடுகின்றனர் . பலர் தமது ஆக்கங்களை இடுகின்றனர் . கவிதைகள் , சமையல் குறிப்புகள் , மருத்துவ குறிப்புகள் , உடல் ஆரோக்கியம் இன்னும் பற்பல அம்சங்கள் பலவற்றை தமது வலை உலகில் எழுதுகிறார்கள் . எல்லோருக்கும் பயன்தரும் வகையில் பல பதிவுகளை இடுகின்றனர் .
இன்னும் பலர் அன்றாட நிகழ்வுகளையும் , பல சுவையான சம்பவங்களையும் தொகுத்து தருகின்றனர் . பெண்களுக்கு நம்பிக்கை ஊட்டும் தகவல்களை தருகின்றனர் . விளையாட்டு , வெளிநாட்டு செய்திகளை கூட தொகுத்து தருகின்றனர் . பல பெண்கள் அழகு சம்பந்தமான குறிப்புகள் பலவற்றை தருகின்றனர் . பெண்களின் அழகு சம்பந்தமான பிரச்சனைகள் , தீர்வுகள் என்பவற்றுக்கு பதில் தருகிறார்கள் .
சிலர் எல்லாவகையான தகவல்களையும் தமது தளத்தில் தருகிறார்கள் . இன்னும் பல வகையான அம்சங்களை பெண்கள் எல்லோரும் தமது தளத்தில் இட வேண்டும் . பல பெண்கள் வலை உலகில் பெண்கள் தரும் சமையல் குறிப்புகளை பார்த்து பல சமையல் குறிப்புகள் பலவற்றை கற்றுக்கொண்டவர்கள் , தெரிந்து கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள் .
வலை உலகிலும் பெண்கள் பல சாதனைகளை படைக்க வேண்டும் , பல பதிவுகளை இட வேண்டும் என்று இன்றைய மகளிர் தினத்தில் நான் கூறிக்கொள்வதில் நான் பெருமிதம் அடைகின்றேன் நானும் பெண்ணென்ற படியினால் . வலை உலகில் சாதிக்கும் , சாதித்துக் கொண்டு இருக்கும் எல்லா சகோதரிகளுக்கும் எனது மகளிர் தின வாழ்த்துக்கள் .
11 comments:
நானும் வாழ்த்துகிறேன்.
அனைவருக்கும் மகளிர் தின நல் வாழ்த்துக்கள்.
மகளிர் தின நல் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்..!
"வலை உலகில் சாதிக்கும் பெண்கள்"
வாழ்த்துக்கள்.
வலை உலகில் சாதிக்குக்கும் வளைக்கரங்களுக்கு வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்.
நன்றி பாலா
நன்றி லக்ஷ்மி அம்மா
நன்றி குமார்
நன்றி ரவி
நன்றி ஈஸ்வரி உங்கள் வருகைக்கும் , கருத்துக்கும்
Post a Comment