Thursday, August 8, 2013

ஆசை இருக்கலாம் , பேராசை கூடாது


 

மனிதனாய் பிறந்த எல்லோருக்கும் ஒவ்வொரு ஆசைகள் இருக்கும் . ஆசைகள் வேறுபட்டு காணப்படும் . ஒருவருக்கு கார் வாங்க பிடிக்கும், இன்னொருவருக்கு மோட்டார்சைக்கிள் வாங்க பிடிக்கும் . நமது ஆசை ஒன்று நிறைவேறி விட்டால் மனம் இன்னொரு ஆசைக்கு ஏங்கும் . அதுதான் மனிதனது சுபாவம் . 

ஆசைகள் இருக்கத்தான் வேண்டும் . அதுவே நமக்கு இயலாத , நடக்காத விடயங்களுக்காக ஆசைப்பட கூடாது . அவன் பெரிய பங்களா கட்டுகிறான் . அவனைப்போல நானும் கட்ட வேண்டும் என்று நாம் ஆசைப்பட்டால் அது நம்மால் முடியுமா ? என சற்று ஜோசிக்க வேண்டும் . அவனிடம் அவ்வளவு பணம் இருக்கிறது செலவழிக்கிறான் . நம்மால் முடியுமா ? நமக்கு ,ஏற்ற  நமது தகுதிக்கு ஏற்ற, சாத்தியமானவற்றுக்கு ஆசைப்படலாம் . நமது விரலுக்கு ஏற்ற வீக்கம் . அதுபோல தான் நாமும் வாழ பழக வேண்டும். 

பெண்களுக்கு பெண்கள் ஆசைபடுவது கூடுதலாக நகை, உடை விடயத்தில் தான் . அது பேராசையாகவும் மாறுகிறது . சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்படுகிறோம் . நாம் 5 பவுண் சங்கிலிக்கு ஆசைப்படலாமா ?இல்லை . அவள் என்ன அழகான சாறி கட்டி இருக்கிறா பாருங்க . ஐயோ அது எவ்வளவு விலையா இருக்கும் என மனம் முனுமுனுக்கும் . நாம் பார்த்து ரசிக்கலாம் . ஆனால் வீட்டுக்கு சென்று அன்றாடம் தொழில் செய்யும் ஒருவரிடம் அந்த சாறி வாங்கி தர சொன்னால் அவரால் அது முடியுமா ? சற்று பெண்கள் சிந்திக்க வேண்டும். உடனே நான் கேட்டது வாங்கி தர மாட்டீங்க என சண்டை தொடங்கி  விடுகிறது. 

கட்டிய வீட்டிலும், உடுத்தும் உடைகளிலும், வாழ்கின்ற வாழ்விலும் சரி, இருப்பதை வைத்து நாம் திருப்தி அடைவதில்லை . இல்லாத ஒன்றுக்காக ஆசைப்படுகிறோம் . அதுதான் பேராசைபடுகிறோம் . மற்றவர்களிடம் இருக்கும் , அவர்கள் வைத்திருக்கும் பொருட்கள் மீது மனம் ஆசைப்படுகிறது . ஏனையோரிடம் நாம் நம்மை ஒப்புடுகிறோம் . அவர்களது ஆடம்பரமான வாழ்க்கை எம்மையும் அதில் ஈடுபட வைக்கிறது .

நாம் எப்போதுமே நமக்கு மேல் வர்க்கத்தில் இருப்பவர்களுடன் ஒப்புடுவதை விட்டு விட்டு நமக்கு கீழே இருக்கும் வர்க்கத்தை நினைத்து பார்க்க வேண்டும் . நாம் இப்படியாவது இருக்கிறோமே . கடவுள் நம்மை அன்றாட சாப்பாட்டுக்கு , நமது தேவைகளை நிறைவேற்றும் அளவுக்கு எம்மை வைத்திருக்கிறாரே என நினைத்து கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டுமே தவிர மேல்தட்டு வர்க்கத்தினரை பார்த்து பேராசைபடவோ , பொறாமைபடவோ கூடாது . 

எனவே எமக்கு ஆசை இருக்க வேண்டும். அதுவே பேராசையாக இருக்க கூடாது . 

1 comment:

'பரிவை' சே.குமார் said...

ஆசை இருக்கலாம்... பேராசை இருக்கக்கூடாது.... உண்மைதான்... நல்ல பகிர்வு... வாழ்த்துக்கள்...