Saturday, April 24, 2010

உப்பின் குண நலன்

 http://whatscookingamerica.net/Information/Salt1.jpg
நாம் நமது சாப்பாட்டில்  தினமும் பாவிப்பது உப்பு . உப்பில்லா பண்டம் குப்பையிலே என்றார்கள் முன்னோர்கள் . ஆனால் இப்போது உப்பை பலர் குறைத்து விட்டார்கள் . பல நோய்களில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்வதற்க்காக .
http://blogs.southtownstar.com/schorsch/salt.jpg
அயோடின்...மனித வாழ்க்கைக்குத் தேவையான இயற்கை சத்து. தைராய்டு ஹார்மோன்களின் முக்கிய பகுதிப் பொருளே அயோடின். மனித உடல், மூளையின் இயல்பான  வளர்ச்சிக்கும், செயல்பாட்டிற்கும் துணையாகிறது. அயோடின் குறைந்தாலும், அதிகரித்தாலும் தொல்லைதான். மண்ணில் விளையும் உணவுப் பொருட்களிலிருந்து நமக்குத் தேவையான அயோடின் கிடைத்தாலும் மண்ணில் அயோடின் சத்து குறைவாக இருந்தால் கண்டிப்பாக உப்பின் மூலம் அயோடின் உட்கொள்ள வேண்டும்.
http://www.solarnavigator.net/geography/geography_images/salt_flats_bonneville_utah_usa.jpg
என்ன பொருள் என்றாலும் அதிகம் பயன்படுத்தினால் ஆபத்து தான் . எந்த பொருளையும் அளவோடு தான் உண்ண வேண்டும் , பாவிக்க வேண்டும் . அதே போல தான் உப்பையும் எல்லோரும் அளவோடு பயன்படுத்த வேண்டும் .

உப்பு சுவை மனிதனின் அடிப்படையான சுவைகளில் ஒன்று. பொதுவாக கடல் நீரில் இருந்து  உப்பு பெறப்படுகிறது. கடல் நீர் உப்புத்தன்மையுடையது . உப்பளங்களில் இருந்து உப்பு பெறப்படுகிறது . இயற்கையின் அரும் கொடை தான் உப்பு .
http://www.topnews.in/files/sea-salt.JPG
அதிகம் உப்பு சேர்ப்பதால் இரத்த அழுத்தம் அதிகரிப்பதோடு, வயிற்றுப் புற்றுநோயும் ஏற்படுகிறது. எல்லா உணவுகளிலும் சோடியச் சத்து உள்ளதால், குறைவான அளவு உப்பு பயன்படுத்தவும். சின்ன வயதிலிருந்தே, உப்பு குறைவாக எடுத்துக் கொள்ளும் பழக்கத்தை உருவாக்கி கொள்ள வேண்டியது அவசியம் . குறைவான உப்புள்ள உணவை சுவைக்கக் கற்றுக் கொள்ளவும்.
http://blogs.courierpostonline.com/fishhead/files/2009/04/dscn6520.jpg
பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளான அப்பளம், ஊறுகாய், சாஸ், கெச்சப், , பாலாடை, கருவாடு  போன்றவற்றில் உப்பு சேர்க்கப் பட்டிருக்கும் . அந்த பொருட்கள் கெடாமல் நீண்ட நாட்கள் உபயோகிப்பதட்க்காக உப்பு போட்டு பதப்படுத்தப்படுகின்றது .

சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் சாதாரண உப்பு அயோடின் சத்து மிகுந்தது. இது எலும்பு வளர்ச்சிக்கு உறுதுணை புரிகின்றது. சிறிது உப்பு கலந்த நீர் கால்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். உப்பு கலந்த நீரால் கண்களைக் கழுவ கண்கள் பளபளப்பாகும். கண்களுக்குக் கீழே தோன்றும் பை போன்ற வீக்கத்தைக் குறைக்கும்.
http://www.tamilvanan.com/content/wp-content/uploads/2009/03/table-salt.jpg 
அயோடின் சத்துக் குறைவால் “கழலை” எனப்படும் கழுத்தின் “முன்புற வீக்கம்”, “கழுத்துக்கழலை” அதாவது தொண்டக்கழலை என்று கூறப்படுகிறது. இந்த நோய்கள் வராமல் இருக்க உப்பை உணவுடன் பயன்படுத்துங்கள் .அயோடின் குறைபாட்டால் பெரியவர்களுக்கு வேலைத்திறன் குறைதல் மற்றும் ஆற்றல் குறைதல் போன்ற தொல்லைகள் ஏற்படுகின்றன. சாதாரண உப்புடன் மிகச் சிறிய அளவுகள் அயோடின் சத்துள்ள கூட்டுபொருள் கலந்து தயாரிப்பதே அயோடின் சத்துள்ள கூட்டுப்பொருள் கலந்து தயாரிப்பதே அயோடைஸ்ட் உப்பு. இதன் தோற்றம், மணம், சுவை அனைத்தும் சாதாரண உப்பைப் போலவே இருக்கும். சமையலின் போதும், நேரடியாக உணவுடன் கலந்தும் சாப்பிடலாம்.
http://www.smh.com.au/ffximage/2007/04/17/salt_wideweb__470x308,0.jpg 
அயோடின் உப்பை காற்றில் திறந்து வைத்தால் அயோடின் அளவு குறைந்துவிடும். காற்றுப்புகாத டப்பாவில் உப்பை அடைத்து வைக்கலாம். தூள் உப்பு தவிர கல் உப்பிலும் அயோடின் சேர்க்கப்பட்டு கடைகளில் கிடைக்கிறது. ஒரு நாளைக்கு நாம் உண்ணும் உணவில் அதிகபட்சமாக 3 முதல் 6 மடங்கு அயோடின் உப்பு சேர்த்தாலும், சிறு நீர் வடிவில் வெளியேறி விடுகிறது. அயோடின் உப்பை சாப்பிடுவதால் அலர்ஜியோ, ஒவ்வாமையோ ஏற்படுவதில்லை. அயோடின் குறைபாடு இல்லாதவர்களும் அயோடின் உப்பை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். 
http://thaobui.files.wordpress.com/2009/06/9905_05_31-chips-with-salt-and-vinegar_web.jpg 
உப்பை அளவோடு பயன்படுத்தி நோய் நொடிகளில் இருந்து விடுதலை பெறுங்கள் . மாங்காயுடன் உப்பும் , தூளும் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள் . ஆஹா என்ன ருசி . அருமையாக இருக்கும் .




11 comments:

sathishsangkavi.blogspot.com said...

பயனுள்ள தகவல்....

Ahamed irshad said...

Useful... OK OK....

ஸ்ரீராம். said...

உப்பில்லாப் பண்டம் குப்பையிலே....உப்புள்ள பண்டம் தொப்பையிலே...!!

Anonymous said...

arumaiyaana pathivu

vishnu

'பரிவை' சே.குமார் said...

பயனுள்ள தகவல்..!

S Maharajan said...

ஆஹா உப்பிலே இவ்வளவு விஷயம் இருக்கா?
பயனுள்ள தகவல் பவி

Pavi said...

நன்றி சங்கவி

Pavi said...

நன்றி அஹமது இர்ஷாத்

Pavi said...

நன்றி ஸ்ரீராம்
நீங்க சொல்வது தற்போதைய பழமொழி

Pavi said...

நன்றி விஷ்ணு

Pavi said...

நன்றி மகாராஜன்