Friday, February 10, 2012

என் கனவு நீதானே

http://1.bp.blogspot.com/_SsEWHn8KJt8/TTqzpnraPYI/AAAAAAAAAC4/jJ6Aes2YjJA/s1600/love-birds+%25281%2529.jpg
நான் உன்னை நினைத்து 
இருந்த காலங்களை விட 
நான் உன்னோடு கனவில் 
வாழ்ந்த காலங்கள் ஏராளம் 
என் அன்பே நீ என்று இருந்தேன் 
என் உயிரே நீ என்று எண்ணி இருந்தேன் 
என்னவனே எனக்கென்று இறைவன் 
படைத்து இருக்கிறான் உன்னை 
இப்படி எல்லாம் எண்ணி புலம்பி 
கண்ணை திறந்தேன் பார்த்தால் 
நான் கனவில் புலம்பி இருக்கின்றேன் 
என்று நினைத்ததும் எனக்கு 
என் கனவே நனவாகக் கூடாதா 
என்று ஆண்டவனை வேண்டுகிறேன்

காதல் கைக்கூ ..............

http://blog.karachicorner.com/blog-images/2011/01/love_heart_wallpaper_20.jpg
காதலித்தவளை கரம் பிடிக்க 
எண்ணினேன் அவள் என் 
கரங்களை உதறித்தள்ளி விட்டாள்......
--------------------------------------------------------------------
காதலனை நம்பினேன் 
என் பெற்றோரை நம்பவில்லை 
இப்போது ஒருவரும் இல்லாமல் 
நடுத்தெருவில் நான் .......
---------------------------------------------------------------------------
காதலித்து மனைவியாக்கி கொள்ள 
எண்ணினேன் அவளை - ஆனால்
அவள் இன்னொருவனுக்கு மனைவி 
ஆகி விட்டாள் ............
------------------------------------------------------
http://www.hdwallpapers.in/walls/one_love_heart-normal5.4.jpg
நான் தாடி வைத்தேன் , மது அருந்தினேன் 
இவை எல்லாவற்றையும் நிறுத்தினேன் 
அவளை கண்டதும் .....அவளை பார்த்ததும் 
-----------------------------------------------------------
காதலில் தோல்வி எல்லாம் 
சகஜம் என்று நண்பர்களுக்கு 
அறிவுரை வழங்கினேன் ஆனால், 
எனக்கு காதலில் தோல்வி வந்ததும் 
புரிந்தது அதன் வலி ....


Thursday, February 2, 2012

பெற்றோரின் எதிர்பார்ப்பும் , பிள்ளைகளின் போக்கும்


http://www.cindyclarklaw.com/images/parents_with_child_on_beach.jpg
பிள்ளைகளை அன்பாக , பண்புள்ளவனாக , அறிவுள்ள , புத்திசாலியாக வளர்க்க வேண்டும் என்பதே பெற்றோர் அனைவரினதும் ஆவல் , ஆசையும் கூட . ஆனாலும், சிலரிடம் வசதி வாய்ப்புகள் இருக்கிறது . பிள்ளையை படிக்க வைத்து , பட்டப்படிப்புகளுக்காக வெளிநாடு அனுப்பி படிக்க வைக்கின்றனர் சில பெற்றோர் .

இருந்தும் சில பெற்றோர் தமது வறுமையின் காரணமாக தமது பிள்ளைகளை இடையில் கல்வியை தொடர இயலாது நிறுத்துகிறார்கள் . இன்னும் சில பெற்றோர் தாம் கஷ்டப்பட்டது போல் தமது பிள்ளையும் கஷ்டப்பட கூடாது என நினைத்து கஷ்டத்தின் மத்தியில் தமது பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள் . 
http://3.bp.blogspot.com/_crXFuanz_H0/SzBr0hmqA_I/AAAAAAAAADg/SSPL6Ur1uDM/s320/parents_walking_child1.jpg
இப்படியாக பெற்றோர் தமது பிள்ளைகளை கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கி சமுதாயத்தில் ஒரு அந்தஷ்துள்ளவனாக தமது பிள்ளையும் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள் . கடைசி வரைக்கும் தம்மை கண்கலன்காது வைத்து தமது பிள்ளைகள் நம்மை பார்ப்பார்கள் என்று நினைக்கிறார்கள் . ஆனால், பெற்றோர் நினைப்பது போல் இன்று எத்தனை இடத்தில் நடக்கிறது . இல்லையே . 

சில பிள்ளைகள் தான் தமது பெற்ற்றோரை வைத்து பராமரிக்கிறார்கள் . பார்க்கிறார்கள் . சந்தோசமாக வைத்திருக்கிறார்கள் . சில பிள்ளைகள் வயோதிப மடங்களில் தமது பெற்றோரை கொண்டு போய் சேர்க்கிறார்கள் . உன்னால் எனக்கு தொல்லை தான் மிச்சம் என்று பேசுகிறார்கள் . அந்த தாயின் மனது எவ்வளவு பாடுபடும் . மனம் வெந்து போகும் . தமது கடைசி காலத்தை அழுகை , புலம்பலுடன் தான் இருப்பார்கள் .
http://www.yupedia.com/wp-content/uploads/2011/11/2-parenting-tips-that-will-change-your-childs-life.jpg
சில பிள்ளைகள் தமது தாய், தந்தையரை மதித்து தம்மை தமது பெற்றோர் எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கி இருப்பார்கள் . ஒரு நேரம் மட்டும் உணவு உண்டு எம்மை வளர்த்தாள் என் தாய் என தமது பழைய நினைவுகளை மீட்டி பார்ப்பார்கள் . தனது பெற்ற்றோரை சொந்த வீடு கட்டி அவர்களை கண்கலன்காது வைத்து  பார்க்க வேண்டும் . அவர்களின் தேவைகளை , ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் என்று நினைக்கிறான் . அவன் தான் பிள்ளை . பற்றுள்ளவன் . பாசமுள்ளவன், அறிவுள்ளவன் . 
http://www.purematrimony.com/blog/wp-content/uploads/2012/01/perfect_parenting-cartoon_h.gif
இன்றைய தொழில்நுட்ப வசதியால் கையில் ஒரு தொலைபேசியும் , காதில் பாட்டும் கேட்டுக் கொண்டு தெருத்தெருவாக பல இளையர்களும் , யுவதிகளும் தெருக்களில் திரிகிறார்கள் . வேலை இல்லை . யாருடனாவது காதல் வசப்பட்டு அவனுடன் ஓடி போவது , கையில் இருக்கும் பணம் செலவழிந்து முடிந்ததும்  அப்போதுதான் வீட்டு ஜாபகம் வரும் . பெற்றோர் பிள்ளையை காணவில்லை என்று பதை பதைக்கிறார்கள். பிள்ளைகள் தமது பெற்றோரின் அந்தஸ்து , கவுரவம் அனைத்தையும் குழி தோண்டி புதைக்கிறார்கள் . 

உலகம் மாறிப் போச்சு, நடை , உடை பாவனைகள் எல்லாம் மாறி போச்சு , நம் கலாசாரம் மாறிப் போச்சு . என்ன கொடுமையடா ? என்ன வாழ்க்கையடா ? என்று எல்லாம் எண்ணத் தோன்றுகிறது .

Tuesday, January 31, 2012

வேட்டை படத்தில் எல்லோரும் விரும்பும் பாடல்


http://www.deccanchronicle.com/sites/default/files/imagecache/article_vertical/article-images/05VETTAI---ARYA-AND-MADHAVA.jpg.crop_display.jpg
பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
பத்திகிச்சு பம்பரம் டோய்
பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
என்ன செஞ்ச மந்திரம் டோய்
அடி ராசாத்தி ரோசாப்பூ என்ன சொல்ல
என் ராத்தூக்கம் தூக்கிகிட்டு போறபுள்ள
நா தில்லானா பாடுறேன் திமிராக ஆடுறேன்
என்னோட கை கோர்க்க வாடி
உன் பொல்லாத மீசையில் குத்தாம குத்துனா
செத்தானான் போவேன் போடா
பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
பத்திகிச்சு பம்பரம் டோய்
பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
என்ன செஞ்ச மந்திரம் டோய்
ஹே கோடி இடை பாத்து நா ஒடஞ்சுடேன் நேத்து
முத்தம் கித்தம் தந்து என்ன ஓட்ட வையேண்டி
வாழையடி வாழை என வாழ வை நாளை
மொத்தமாக மூட்டை கட்டி தூக்கி போயேண்டா
உன்ன அப்படியே உப்புமூட்டை துக்கிகிறேண்டி
அடி அஞ்சாறு ஆசை மட்டும் தீதுகிறேண்டி
ஒத்துக்குறேன் ஒத்துக்குறேன்
நீ ஒன்னன்னா சொல்லிதந்தா கத்துகுறேண்டா
ஹே பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
பத்திகிச்சு பம்பரம் டோய்
பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
என்ன செஞ்ச மந்திரம் டோய்
அடி ராசாத்தி ரோசாப்பூ என்ன சொல்ல
என் ராத்தூக்கம் தூக்கிகிட்டு போறபுள்ள
நா தில்லானா பாடுறேன் திமிராக ஆடுறேன்
என்னோட கை கோர்க்க வாடி
உன் பொல்லாத மீசையில் குத்தாம குத்துனா
செத்தானான் போவேன் போடா..
ஹே மஞ்ச மோகம் பாத்து நா செவந்துடேன் நேத்து
மைனாவே பச்சை கொடி காட்டு எனக்கு
ஹே விடுகதை வேணம் நீ விடும் கதை வேணாம்
என்ன வேணும் கண்ணா பாத்து சொல்லு எனக்கு
உன் பூ போட்ட பாவாடை போதும் எனக்கு
அதில் வெள்ளி விழா பன்னநாட்ட ஆசை இருக்கு
ஒத்துக்குறேன் ஒத்துக்குறேன்
நா உன்னோட பாப்பாவ பெத்துகுரேண்டா..
ஹே பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
பத்திகிச்சு பம்பரம் டோய்
பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
என்ன செஞ்ச மந்திரம் டோய்
அடி ராசாத்தி ரோசாப்பூ என்ன சொல்ல
என் ராத்தூக்கம் தூக்கிகிட்டு போறபுள்ள
நா தில்லானா பாடுறேன் திமிராக ஆடுறேன்
என்னோட கை கோர்க்க வாடி
உன் பொல்லாத மீசையில் குத்தாம குத்துனா
செத்தானான் போவேன் போடா..

என் நண்பனைப்போல யாருமச்சான்

http://api.ning.com/files/cvuBbeMD8h9XGOghOOLWSLsBogI5VcE3NSNE6C4HZhDL8azycoslUlM41WnDkSTvD0j2OzjzWSXUA*gDu2IKO8PX6HCudCt-/LoveandLightMyFriend.jpg
நட்பு என்பது உறவுகளுக்கு 
அப்பாற்பட்டது - துன்பம் ,
துயரங்கள் , சந்தோஷ 
நேரத்தில் எல்லாவற்றையும் 
பகிர்ந்து கொள்ள நட்பாக 
ஒருவனோ , ஒருத்தியோ 
தேவை ஒருவருக்கு 
வேறு உறவுகள் ஏதாவது 
ஒன்றை எதிர்பார்த்து 
தான் எமக்கு உதவி செய்வார்கள் 
ஆனால், நட்பு அப்படி இல்லை .
http://www.artista.ca/Artists/Kuck/My%20sister%20my%20FriendL.jpg
ஒரு பிரதி உபகாரத்தையும் 
பாராது தாமாவே முன்வந்து 
உதவுவார்கள் பாருங்கள் 
அதுதான் உண்மையான நட்பு 
நல்ல நண்பன் கிடைத்தவன் 
அதிஸ்டசாலி - பலசாலி 



Monday, January 23, 2012

நண்பன் படம் சூப்பரோ சூப்பர்


http://www.vijayfansclub.com/wp-content/uploads/2011/04/nanban-stills.jpg
சரிந்திருந்த தனது மார்க்கட்டை வேலாயுதம் படத்துக்குப் பின்பு நண்பன் படம் மூலம் நிமிர்த்தி உள்ளார் விஜய். தனக்கும் இப்படியான கேரக்டரில் நடிக்க முடியும் . ஜீவா , ஸ்ரீகாந்த் ஆகியோர் தமது நடிப்பை விஜய்யுடன் சேர்ந்து அபாரமாக வெளிப்படுத்தி உள்ளனர் .

இந்தியில் வெளிவந்த படத்தை பார்த்தவர்கள் இந்த நண்பன் படத்தை பார்க்க வருகிறார்கள் . ஏனெனில் அந்த படம் போல் நம்ம தமிழ் நடிகர்களும் நடித்து உள்ளனரா , அந்தந்த வேடங்களுக்கு இவர்களும் பொருந்துகிறார்களா? அவர்களின் நடிப்பு நன்றாக இருந்தது . இவர்கள் இந்த படத்தில் நம்ம தமிழ் நடிகர்கள் எப்படி நடித்து உள்ளனர் என்று ஒரு கூட்டம் இந்த படத்தை பார்க்க வருகிறது .
http://chennai365.com/wp-content/uploads/movies/Nanban/Nanban-Stills-15.jpg
வேறு சிலர் இந்தியில் இந்த படத்தை பார்க்கவில்லை . அவர்களுக்கு இது புதிய கதை . வித்தியாசமான நடிப்பாக இருக்கிறது . கதையும் வித்தியாசமாக இருக்கிறது . நகைச்சுவைகளும் இருக்கின்றன . பஞ்ச வசனங்களும் இல்லை . அடிதடி , குத்து , வாள்வெட்டு என்ற ஒன்றும் இல்லை . வில்லன்களின் தொல்லையும் இல்லை . இதனால் படம் எல்லோரையும் கவர்கிறது . 
http://tamilwire.com/images/2011/12/Nanban-620x425.jpg
இன்னும் சிலர் விஜய் ரசிகர்கள் , ஜீவா ரசிகர்கள் , ஸ்ரீகாந்த் ரசிகர்கள் என்று சொல்லிக் கொண்டு படம் பார்க்க வருகிறார்கள் . இதனால் நண்பனுக்கு கூட்டம் அதிகமாக இருக்கிறது . வேற்று மொழிகளில் முன்னணி நடிகர்கள் பலர் சேர்ந்து நடிக்கும் போது நம்ம நடிகர்கள் ஏன் சேர்ந்து நடிக்கிறார்கள் இல்லை என்ற கவலையை இந்த நண்பன் படம் போக்கி இருக்கிறது . அங்கு வசூலும் ஆகிறது . போட்ட முதலுக்கு மேலாக வசூலை வாரிக் குவிக்கிறார்கள் இந்தியில் . இங்கும் முன்னணி நடிகர்கள் சேர்ந்து நடிக்கும் போது படங்களும் வசூலை பெரும் . படமும் வெற்றி பெரும் தானே .
http://g.ahan.in/tamil/Nanban120105/Nanban%20(41).jpg
ஆனால் , எதற்க்கும் சிறந்த கதையம்சம் முக்கியம் . நண்பன் படத்தில் மூன்று ஹீரோக்களுக்கும் அவர்கள் நடிப்புக்கு ஏற்ற சம உரிமை இருக்கிறது . தமது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்தும் இருக்கிறார்கள் . நல்ல திரைக்கதை இருக்கும் பட்சத்தில் நடிகர்களுக்கு சரிக்கு சமமான அந்தஸ்து இருக்கும் இடத்தில் முன்னணி நடிகர்கள் சேர்ந்து நடிக்கலாம் . 

உங்களுக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுத்து படியுங்கள் . அதில் நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் என்ற கருத்தை சொல்லி இருக்கிறது நண்பன் படம் . சங்கர் 3 இடியட்ஸ் படத்தை சிதைக்காமல் அந்த படத்தை இயக்கிய விதம் பாராட்டும்படியாக உள்ளது .
http://1.bp.blogspot.com/-WTCDMwg9o5w/TxOaxzIG_6I/AAAAAAAAEIQ/dMo2tL-Fy7k/s1600/nanban.jpg

படம் பார்க்கும் போது இது விஜய் தானா என்றும் எண்ணத்தோன்றுகிறது . எதிரிகளை துரத்தி பந்தாடுவது , பஞ்ச வசனம் பேசுவது  என்றில்லாமல் எல்லா ரசிகர்களையும் ரசிக்க வைத்துள்ளார் . விஜயின் துள்ளத மனமும் துள்ளும் படத்துக்குப் பிறகு இந்த படத்தில் விஜயை பிடித்து இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும் . படத்தில் சில காட்சிக்க சிரிப்பதோடு நின்று விடாமல் சிந்திக்கவும் செய்கின்றன . 

சத்யன் கலக்கி இருக்கிறார் . அவர் பேசும் மேடைபேச்சில் ஒரு சிரிப்பொலி தான் . ஹரிஷின் இசையில் பாடல்கள் எல்லோர் மனதையும் கொள்ளை கொள்கிறது . இம்முறை பொங்கலுக்கு வெளிவந்து நண்பன் வசூல் வேட்டையில் இறங்கி வசூல் மலை பொழிகிறது . விஜய் ரசிகர்கள் மட்டும் இந்த படத்தை பார்க்கவில்லை . எல்லா ரசிகர்களும் இந்த படத்தை பார்க்க வருகிறார்கள் . எல்லோருக்கும் படம் பிடித்து இருக்கிறது .
http://www.deccanchronicle.com/sites/default/files/imagecache/article_horizontal/article-images/24NANBAN2.jpg.crop_display.jpg
இந்த வருடம் தொடக்கத்தில் வெளிவந்து சக்கைபோடு போட்டுக் கொண்டு இருக்கிறது நண்பன் . இப்படியான நல்ல படங்களுக்கு வரவேற்பு எப்பவும் ரசிகர்களிடத்தில் இருக்கும் . 
 

நண்பன் அதிரடி - சரவெடி- வசூல்மழை 


எல்லோரினதும் ஆசைகள் நிறைவேறுகின்றதா ?


http://basicindia.typepad.com/.a/6a00d8341bfed353ef0147e300ec3a970b-320wi
நாம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசைகள் இருக்கின்றன . சிலரது ஆசைகள் நிறைவேறுகிறது . சிலரது ஆசைகள் நிறைவேறாமல் போகிறது . இந்த உலகில் ஆசைகள் இல்லாத மனிதரே இல்லை .

ஒன்றில் வீடு , காணி, பணம் , நகை , சொத்து என ஆசைகள் நீண்டு கொண்டு செல்கின்றன . ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான ஆசைகள் இருக்கும் . கூடுதலாக பணம் , சொத்து , நகை போன்றவற்றில் பெண்களுக்கு நாட்டம் இருக்கும் . 
http://1.bp.blogspot.com/-1NddvxRQeR4/TndgSBMrB6I/AAAAAAAAAJo/3ddYnMdFdBI/s1600/67.jpg
நான் டாக்டர் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் . அது நிறைவேறியதா ? சிலருக்கு அந்த ஆசை நிறைவேறுகிறது . கடுமையாக படித்து , கஷ்டப்பட்டு தமது கனவை நனவாக்குகிறார்கள் . சிலர் இது நடக்காது என்று தெரிந்தும் அவற்றுக்கு ஆசைப்படுவார்கள் . ஏழ்மையில் படித்து , கஷ்டப்படுபவன் நல்ல நிலையை அடைகிறான் . 

நகை, பணம், சொத்து என ஆசை பேராசையாக மாறுகிறது . இதனால் , அவன் இந்த சொத்துக்களை அனுபவிக்காமலே மரணித்து விடுகிறான் . இவன் திருடிக் கொண்டு போவானோ , அவன் திருடிக் கொண்டு போவானோ என தினம் தினம் நிம்மதி இல்லாமல் செத்து பிழைக்கிறான் . ஆனால், தனக்கு தேவையானதை , தன சம்பாத்தியத்தில் உழைத்து முன்னேறுபவன் சந்தோசமாக வாழ்க்கையை களிக்கிறான் .

நமக்கு ஆசைகள் இருக்க வேண்டும் . அதுவே பேராசையாக இருக்க கூடாது . சிலர் தமது பிள்ளைகளை கல்யாணம் செய்து பேரப்பிள்ளையை நான் இருப்பதற்க்கு முன்பு காண வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் . அது சிலருக்கு அந்த ஆசை நிறைவேறுகிறது . சிலர் அந்த ஆசை நிறைவேருவதட்க்கு முன்பு மரணம் அடைந்து விடுகிறார்கள் . நமது சமூகத்தில் நடக்கும் விடயங்களில் இதுவும் ஒன்று .
http://jlatun.files.wordpress.com/2011/01/silence.jpg
ஆசை நூறுவகை . ஒன்று இரண்டு அல்ல . ஆசைப்பட வேண்டும் . அந்த ஆசை நிறைவேறக்கூடியதாக இருக்கவும் வேண்டும் . 

Saturday, January 21, 2012

தோல்வியில் இருந்து மீள .......


http://nature0wonderama.files.wordpress.com/2010/12/racquets-1024x6471.jpg?w=620&h=320&h=320
எந்த விடயத்திலும் தோல்வி தான் கிடைக்கிறது . எடுக்கிற காரியம் ஒன்றும் வெற்றி கிடைப்பது இல்லை என்றும் ஏங்குவோர் பலர் . பலருக்கு தோல்வி என்பது தொடர்கதையாக இருக்கும் . வெற்றி என்னும் கனியை பெற படாதபாடு பெற வேண்டி உள்ளது .

நாம் தோல்வி அடையும் போது தான் வெற்றியின் இனிமை தெரிகிறது . எந்த விடயத்திலும் உடனே வெற்றி கிடைக்காது . தோல்வி தான் வெற்றியின் முதல் படி . அதுவே தொடர் தோல்வி என்றால் என்ன செய்வது ? கிரிக்கெட் , டென்னிஸ் , வியாபாரம் , வாழ்க்கை , காதல் போன்றவற்றில் கூடுதலானோர் தோல்வியை அடைகிறார்கள் . அதிலும் சிலர் தமது கடின உழைப்பாலும் , முன்னேற்றத்தாலும் , வெற்றிபெறுகிறார்கள் .
http://lifarre.com/socialnetwork/mod/file/thumbnail.php?file_guid=3740&size=large
தோல்வி அடைந்தவர்கள் தமது வாழ்க்கையை வெறுக்கிறார்கள் , தற்கொலை செய்து கொள்கிறார்கள் , அன்பை முறிக்கிறார்கள் . இவர்களுக்கு ஒரு பிரச்சனையை தீர்க்கவோ , பேசித் தீர்த்து முடிக்கவோ அவர்கள் முன்வருவதில்லை . 

பிரச்சனைகள் வந்தால் அதனை தீர்க்க என்ன வழி? என்ன செய்யலாம் என திட்டமிட்டு செயற்பட வேண்டும் . வெற்றி எனும் ஏணியின் படிகள் தோல்விகள் தானம்மா . வெற்றி அடைந்தவர்கள் ஒரு நாள் தமது வாழ்விலோ, விளையாட்டிலோ தோல்வி அடைந்தால் அவர்களுக்கு அதனை தாங்க முடிவதில்லை . ஜீரணிக்க முடிவதில்லை . அவர்களுக்கு அதனை பொறுத்துக் கொள்ள முடிவதில்லை . ஆனால், தோல்வி அடைந்தவன் ஒரு நாள் வெற்றி பெரும் போது அவனிடன் இறுமாப்பு ஏற்படாது . தான் பட்ட கஷ்டத்துக்கு பலன் கிடைத்தது என்று நினைத்துக் கொள்வான் .
http://3.bp.blogspot.com/_v5LWN5r1LLk/Svo0XoJQ_bI/AAAAAAAACe0/bYzQK2Sf-qA/s400/lost+love.jpg
தோல்வி அடைந்தவனிடம் தான் வெற்றியின் அருமை தெரியும் . ஆனால் , வெற்றி அடைந்தவனிடம் மமதை இருக்கும் . அவன் தனது வெற்றிக்கான ரகசியங்களை சொல்லிக் கொடுக்க மறுப்பான் . ஆனால் , ஒரு விளையாட்டை எடுத்துக் கொண்டால் ;தோல்வி அடைந்தவன் எல்லாவற்றையும் வடிவாக விளங்கப்படுத்தி எப்பிடி செய்தால் வெற்றி பெறலாம் என்று அவன் அதற்க்கான பிரச்சனைகளை முன்வைத்து எப்படி அவற்றை தீர்க்க முடியும் என்று கூறுவான் . இதுதான் அவனது பண்பு. 

வாழ்வில் வெற்றிகள் நிரந்தரமில்லை அதுபோல் தோல்விகளும் நிரந்தரமில்லை . வெற்றிபெறுபவர்கள் எல்லாம் வல்லவர்களும் இல்லை . தோல்வி அடைந்தவர்கள் எல்லாம் மூடர்கள் இல்லை . ஒருநாள் அவனும் புத்திசாலி ஆவான் . எதுவும் நிரந்தரமில்லை . வெற்றி என்பது பட்டம் பூச்சி . மாறி மாறி வரும் . உனக்கு மட்டும் அது நிரந்தரமில்லை .

Wednesday, January 18, 2012

அஜித்தின் பில்லா -2


http://friendzworld.com/wp-content/uploads/2008/12/the-ultimate-star-ajith.jpg
மங்காத்தா படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அஜித் நடித்துக் கொண்டு இருக்கும் படம் பில்லா - 2. மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள் தல ரசிகர்கள் . மங்காத்தா படத்தின் காட்சிகள் அனைத்தையும் ரசித்த ரசிகர்கள் படத்தையும் சூப்பர் ஹிட் படமாக மாற்றினார்கள் . 
http://moviegalleri.net/wp-content/gallery/ajith-billa-2-first-look-posters/ajith_billa2_new_posters_348.jpg
அஜீத் நடிக்கும் 51 வது படம் ‘ பில்லா 2. பார்வதி ஒமணக்குட்டன் நாயகியாக நடித்து இருக்கிறார். இந்த படத்தை‘சக்ரி டொலெட்டி இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். அஜித் நடித்து வரும் பில்லா-2 படத்தின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் எல்லோரும்  பெரிய வரவேற்பு தெரிவித்துள்ளனர். " கையில் துப்பாக்கியுடன் கோபப்பார்வையோடு ‘ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு இறந்த காலம் உண்டு. ஒவ்வொன்றும் வரலாறு’ என்பதை குறிக்கும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. இது ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
http://reviews.in.88db.com/images/Ajith-Billa-2-First-Look/Ajith-Billa-2-First-Look-still.jpg

அஜித்துக்கு மெஹா ஹிட் படமாக அமைந்தது பில்லா . 2007ம் ஆண்டில் அஜித்திற்கு மாபெரும் ஹிட் படமாக அமைந்தது . அதன் தொடர்ச்சியாக இப்போது பில்லா-2 உருவாகி வருகிறது. தூத்துக்குடியில் சாதரண மனிதனாக டேவிட்டாக இருந்தவர் எப்படி பில்லாவாக மாறுகிறான் என்பதே பில்லா-2 படத்தின் கதை. படத்தின் சூட்டிங் ‌பெரும்பகுதி முடிவடைந்து உள்ளது . 

திரையுலகில் மங்காத்தா திரைப்படத்தை விட பில்லா-2 திரைப்படத்தின் விற்பனை 30 சதவிகிதம் அதிகரித்துள்ளது. பில்லா படத்தில் இடம் பெற்ற TITLE TRACK போலவே பில்லா 2 படத்தில் இடம் பெற இருக்கும் பாடலும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று யுவன் அதிகம் யோசித்து வருகிறார். 
இதுவரை இல்லாத அளவிற்கு அஜீத்தின் பில்லா 2 விற்பனையாகி இருப்பது படக்குழுவினரை மேலும் உற்சாகப்படுத்தி இருக்கிறது.
http://www.mirchi9.com/postyourclip/wp-content/uploads/2012/01/ajith_billa2_new_posters_001.jpg
இந்த படத்தில் அஜீத் நடிப்பை பற்றி கூறிய இயக்குநர், ‘டேவிட் என்ற சாதாரண மனிதன் தூத்துக்குடியில் இருந்து வந்து டான் பில்லாவாக எப்படி உருவாகிறார் என்பதை வாழ்ந்து காட்டியிருக்கிறார் அஜீத் என்றார்.

அடுத்து அஜித் விஷ்ணுவர்த்தன் இணையும் படத்துக்கும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது . இன்னுமொரு செய்தி உலா வருகிறது . கமல் நடிக்கவிருக்கும் புதிய படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் அஜித்தும் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன . பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று .
http://fingertipszone.com/cinema_images/tamil/ajith1.jpg
அஜித்துக்கு மங்காத்தா படத்தை விட பில்லா -2 படம் அமோக வெற்றியை கொடுக்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம் .













 

 

என்ன உலகமடா இது ....

http://www.withbeans.com/wp-content/uploads/2011/08/life-insurance4.jpg
கல்யாணம் பேசி திருமணம் 
செய்து கொள்கிறார்கள் 
குழந்தைகள் பெற்றுக் கொள்கிறார்கள் 
அதன் பின்பு மனக்கசப்பு என்று 
இருவரும் விவாகரத்து செய்கிறார்கள் 
இருவரும் வேறுவேறு திருமணம் 
செய்து கொள்கிறார்கள் - அவர்கள் 
தமது குழந்தைகளின் எதிர்காலம் 
பற்றி சிந்திக்கிறார்களா - இல்லை 
பிள்ளை அப்பாவுடன் ஒரு கிழமை 
http://reallifespirituality.com/wp-content/uploads/2009/02/life-purpose.jpg
அம்மாவுடன் ஒருகிழமை என்று 
திரிந்து கடைசியில் இருவரும் 
துரத்தி விட வீதியில் படுத்து 
உறங்குகிறது - மற்றவர்களிடம் 
கையேந்தி வயிற்றுப் பசி 
போக்கிக் கொள்கிறது ஏன்
இந்த நிலைமை இறைவா ...
இறைவா ....என்று மனம் 
நொந்து கொள்ள வேண்டி இருக்கிறதே .....