Wednesday, April 6, 2011

தாய், தந்தையரை மதித்து நடக்க வேண்டும்


http://www.greencastle.k12.pa.us/Portals/0/UnclaimedPics/Parents.gif
நாம் எல்லோரும் நமது பெற்றோர்களை மதித்து நடக்க வேண்டும் . நம்மை பெற்று , வளர்த்து, ஆளாக்கி இந்த உலகுக்கு கொண்டு வந்தவர்கள் . அவர்களை எத்தனை பேர் நாம் இன்று மதித்து நடக்கின்றோம் . எத்தனை கஷ்டம் வந்த போதிலும் நம்மை வளர்த்து இன்று நாம் நல்ல நிலைமையில் இருக்கின்றோம் என்றால் அதற்க்கு காரணம் நம் பெற்றோர் தான் .

தாய் எம்மை சீராட்டி வளர்க்க , உழைத்து சம்பாதித்து  வீட்டு செலவுகளை கவனிக்கிறார் அப்பா . இன்றைய நவநாகரிக உலகில் எத்தனை பேர் பெற்றோர்களை மதித்து நடக்கின்றார்கள் . பெற்றோர் சொல் கேட்டு நடக்கின்றனர் . பெற்ற்றோரை கண் கலங்க விடாது கவனிக்கிறார்கள் . நாம் இந்த உலகுக்கு வரும்போது முதலில் நமது பெற்றோரை தான் காண்கிறோம் . அவர்கள் நம் தெய்வங்கள் . 
http://www.peabody.k12.ma.us/Parents/MPj04227320000%5B1%5D.jpg
பெற்றோரை பேசுவது , கைநீட்டி அடிப்பது , தீய வார்த்தைகளை பேசுவது , பெற்ற்ரோர்களுக்கு பொய் சொல்லி விட்டு எங்கேயும் போவது என்று எவ்வளவோ இருக்கிறது . இன்றைய ஆண் பிள்ளைகளோ , பெண் பிள்ளைகளோ பெற்றோர் சொல்பேச்சை கேட்பது கிடையாது . ஒரு குடும்பத்தில் ஒருவராவது இப்படி இருக்கிறார்கள் . அந்த நிலைமை மாற வேண்டும் . 

ஒருவரையொருவர் மதிக்கும் பணிவுவேண்டும். பணிவு வரும் பொழுது அமைதி தானாகவே வரும். முதலில் நாம் நமது பெரியவர்களை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். எத்தனை பிள்ளைகள் இன்று பெற்றோரை மதித்து நடக்கின்றனர் ? நமது தாய், தந்தையரை அவர்களை கடைசி காலம் வரைக்கும் கவனிப்பது நம் எல்லோரினதும் கடமை .
http://www.spps.org/uploads/GrandParents.jpg
அநாதை இல்லங்களிலும் , பராமரிப்பு இடங்களிலும் பெற்றோர்களை கொண்டு போய் சேர்த்து விட்டு பிள்ளைகள் சந்தோசமாக இருக்கிறார்கள் . பெற்றோர்களின் மனம் எவ்வளவு புண்படும் என்பதை இந்த பிள்ளைகள் அறிவார்களா ? உணர்வார்களா ? அவர்களும் யோசிக்க வேண்டும். நாமும் ஒரு காலத்தில் முதியவர் ஆனதும் நமது பிள்ளைகளும் நம்மை இப்படித்தானே செய்வார்கள் ? என்று ஒரு கணம் சிந்திக்க வேண்டும் . நாம் நமது பெற்றோர்களுக்கு என்ன செய்கின்றோமோ அதனை நமது பிள்ளைகள் நமக்கு அதனை செய்வார்கள் . 

வாழ்விலேயே இனிய பருவம் இளமைப் பருவம்தான். அதை நாம் முதுமையில்தான் உணர்கிறோம். ஆரோக்கியம், அற்புதமானது என்பதையும் நோயுற்றபோதுதான் உணர்கிறோம்.இளமையில் பெரியவர்களை மதிக்கும் மனிதனை முதுமையில் பலரும் பெரிதும் மதிப்பார்கள்.பொறுமை, நிதான், அன்பு, பாசம், சகிப்புத் தன்மை, மரியாதை, அடக்கம்,ஒழுக்கம் , கடமைப் பண்பு, மனக்கட்டுப்பாடு, பெரியவர்களிடம் பயம் கலந்த ஒரு பக்தி இவை எதுவுமே இல்லாமல் இன்று வேகம், கோபம், அடங்காத பேராசை, பரபரப்பு, ஒப்புக்கான பேச்சு, பெரும் பாலும் தெரிந்தே பேசும் பொய், அதன் தொடர் கதையான நடிப்பு, தெரிந்தே செய்யும் தவறுகள், பண்பற்ற செயல், பேச்சு, எல்லாமே அவசரக் கோலம். 
http://www.schoolangels.com.au/bm/bm~pix/parents~s600x600.jpg
இவை எல்லாமே அவசரக் கோலம். இவை எல்லாமே நம் சுயநலமென்ற தாய்க்குப் பிறந்த குழந்தையின் குணங்கள். இதனால்தான் பலரும் அவர்வர் தாய் தந்தையரை முதியோர் இல்லங்களுக்கு அனுப்புகிறார்கள்.

நாம் நமது பெற்றோர்களுக்கு நம்மால் முடிந்த வீட்டு வேலைகளை செய்து உதவ வேண்டும்., நம்முடைய ஆடைகளை நாமே துவைத்து உடுத்துதல் வேண்டும், சிறு சிறு உதவிகளை நாம் செய்து கொடுக்க வேண்டும் , வளர்ந்து பெரியாளானதும் அவர்களை ஓய்வு எடுக்க சொல்லி நாம் அவர்களுக்கு சமைத்து , அவர்களின் உடைகளை நாமே தோய்த்து கொடுத்து அவர்களுக்கு உதவ வேண்டும் .  இளைய தலைமுறைக்கு, நம் தாய் தந்தையர் மீண்டும் ஒரு குழந்தையாகி நாம் பாரமரித்து பணிவிடை செய்யும் ஒரு வாய்ப்பை நமக்கு தந்தவராகிறார்கள். நாமும் இந்த நிலையை வருங்காலத்தில் நிச்சயம் அடைவோம்.
http://instantamber.com/boltuploads/image/parents_and_children.jpg
பெற்றோர் மேல் குழந்தைகள் நம்பிக்கை வைக்க வேண்டும். அவர்கள் எது செய்தாலும் குழந்தைகள் நன்மைக்குத்தான் செய்கிறார்கள். இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகளுக்கு நிறைய நண்பர்கள் கிடைக்கிறார்கள். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு குறிக்கோள் இருக்கும். ஆனால் பெற்றோருக்குள்ள ஒரே குறிக்கோள் குழந்தைகள் நல்லாயிருக்கணும் என்பது தான். இதனை எத்தனை பிள்ளைகள் உணர்க்கிறார்கள் ? பெற்றோரை எதிரியாக , அன்னியராக பார்க்கும் பிள்ளைகளும் உண்டு இக்காலத்தில் . 

எனவே நாம் எமது பெற்றோரை மதித்து நல்வழியில் நடந்து அவர்களின் சொற்களை கேட்டு நல்ல பிள்ளைகளாக இருக்க வேண்டும் , அவர்களை பிள்ளைகளாகிய நாம் சந்தோசமாக வைத்திருக்க வேண்டியது நமது கடமை என்று உணர வேண்டும் எல்லோரும் . 

7 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

நல்ல மெசேஜ் சொல்லியிருகிங்க....

r.v.saravanan said...

good message pavi

Jafarullah Ismail said...

என் இரட்சகனே! என் பெற்றோர்கள் நான் சிறு பிள்ளையாய் இருந்தபோது என் மீது பிரியமாய் இருந்தது போல், நீயும் அவர்கள் மீது அன்பு செலுத்துவாயாக! எனது பாவங்களையும் அவர்களது பாவங்களையும் மன்னித்து அருள்வாயாக!

Pavi said...

நன்றி பிரகாஷ்

Pavi said...

நன்றி சரவணன்

Pavi said...

நன்றி ஜபருல்லாஹ்

ப. சிவக்குமார் said...

வணக்கம்!

நான், பெற்றோரின் நிலையைப் பற்றி ஒரு blog எழுதியிருக்கிறேன்! அதை நீங்கள், ஒரு முறையேனும் படிக்க வேண்டுகிறேன்!

நான் ஒரு எழுத்தாளனும் அல்ல! எழுதுவது எனது பொழுதுபோக்கும் அல்ல! இதன் மூலம், பணமோ புகழோ அடைவது, எனது பிழைப்போ, நோக்கமோ அல்ல! இருப்பினும் நான் எழுதுவது, சமுதாய மாற்றத்திற்க்காக மட்டுமே!

www.lusappani.blogspot.in