அன்புள்ள தோழனே
நீ எங்கள் எல்லோரையும்
விட்டு பிரிந்து
வெகு தூரம்
சென்றதேனோ ?
நீ எங்களோடு அன்பாக
பழகியவிதம் , பேசின
பேச்சு , உன் அழகான
சிரிப்பு இவை எல்லாவற்றையும்
நாம் இனி எப்போது
கேட்பது ?
நீ தான் எங்களை விட்டு
பிரிந்து இறைவனடி சேர்ந்து
விட்டாலும் எம்முடன்
எமக்குள் நீ வாழ்ந்து
கொண்டு தான் இருக்கிறாய்
தோழனே அன்பு தோழனே
அருண் அருண் என்று அன்புடன்
உன்னை நாங்கள் எதற்க்கு
கூப்பிட்டாலும் மாட்டேன்
என்ற சொல் சொல்லாது
உற்ற நண்பனாக எம்முடன்
இருந்தாய் நண்பா ?
நானும் என் தோழிகளும்
உன் பிரிவால் கதி
கலங்கி நிக்கின்றோமடா
நண்பா நீ எங்களை விட்டு
வெகு தூரம்
சென்றதேனோ ?
எல்லோருக்கும் எல்லா
நண்பர்களும் நல்ல
நண்பர்களாக
இருப்பதில்லை -ஆனால்
நீ எமக்கெல்லாம்
உற்ற ஆத்மார்த்த
நண்பனாகவும்
நண்பன் என்றால்
எந்த உதவிகளையும்
உன் உற்ற தோழிகளுக்கு
செய்வாயே நண்பனே
உன்னை பிரிந்து
உன் தோழிகளான
நாம் எப்பிடி இருப்பது ?
எப்போதும் உன் ஜாபகம்
தான் நண்பனே அருண்
உனக்கும் வந்ததே
பன்றிக்காச்சல் என்ற
நோய் - அந்த
நோய் தான்
உனக்கு ஜமன்
என்று நாங்கள்
நினைத்து கூடி பார்க்கவில்லை
தோழனே அருண்
நீ எம்மை விட்டு
பிரிந்தாலும் உன்
சிரிப்பு , நீ செய்த
உதவிகளை நானும்
என் நண்பிகளும்
என்றும் மறவோமடா
நண்பனே அருண்..............
6 comments:
//நீ எம்மை விட்டு
பிரிந்தாலும் உன்
சிரிப்பு , நீ செய்த
உதவிகளை நானும்
என் நண்பிகளும்
என்றும் மறவோமடா
நண்பனே அருண்..............//
நண்பனுக்கான மிகச்சிறந்த கவிதை.........
நன்றி உங்கள் வருகைக்கும் , கருத்துக்கும்
”எமக்குள் நீ வாழ்ந்து
கொண்டு தான் இருக்கிறாய்
தோழனே அன்பு தோழனே ”
உண்மைத்தோழமை நிச்சயம் நீங்கள் சொல்வது போல இதயங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்...
///எல்லோருக்கும் எல்லா
நண்பர்களும் நல்ல
நண்பர்களாக
இருப்பதில்லை -ஆனால்
நீ எமக்கெல்லாம்
உற்ற ஆத்மார்த்த
நண்பனாகவும் .....////
அருமையான வரிகள்
கலங்குது கண்கள்
எனது இதய அஞ்சலி
நன்றி அண்ணாமலையான்
உங்கள் கருத்துக்கு
நன்றி ரமேஷ்
நல்ல நட்பு என்றும் வாழும்
Post a Comment