Saturday, December 19, 2009

இலங்கை அணி அசத்தல் வெற்றி

Ashish Nehra and the rest celebrate the fall of Tillakaratne Dilshan
நேற்று இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 3  விக்கட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . முதல் போட்டியில் வெற்றியின் விளிம்பில் சென்று தோல்வி அடைந்த இலங்கை அணிக்கு இந்த போட்டி மிகவும் முக்கியத்துவம் நிறைந்த போட்டியாக அமைந்தது .

முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய இந்திய அணியில் சேவாக், தெண்டுல்கர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம்  இறங்கினார்.முதல் போட்டியில் சதம் அடித்த சேவாக் இந்த போட்டியில் 4 ஓட்டங்கள் எடுத்து ஏமாற்றினார். அடுத்து வந்த காம்பீரும் 2 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார். இதனால் இந்தியா 4.1 ஓவரில் 19 ஓட்டங்கள்  எடுத்து  2 விக்கெட்டை இழந்தது. பின்பு டெண்டுகரும் , கோஹ்லி ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினர் . சச்சின் 43 ஓட்டங்களை பெற்றும் கோஹ்லி 54 ஓட்டங்களையும் பெற்று வெளியேறினர் . பின்னர் வந்த தோனியும், ரெய்னாவும் கலக்க இந்திய அணி 301 ஓட்டங்களை பெற்றது .
 
Tillakaratne Dilshan celebrates his second consecutive hundred 
ரெய்னா 68 ஓட்டங்களில் அவுட் ஆனார். மறுமுனையில் தோனி சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இந்த மைதானத்தில் விளையாடிய 2 போட்டியிலும் டோனி சதம் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.டோனி 107 ஓட்டங்கள் அடித்து  அவுட் ஆனார். இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 301 ஓட்டங்களை  குவித்தது.

பின்னர் 302 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி கடின இலக்கை கடந்த போட்டி போலவே மிகவும் துணிச்சலாக ஆடியது. பிரவீண் குமார் வீசிய 3வது ஓவரில் தரங்கா "ஹாட்ரிக்' பவுண்டரி அடித்தார். மறுபக்கம் ஜாகிர் ஓவரில் டில்ஷான்  3 பவுண்டரிகள் அடிக்க, இலங்கை அணி அபார  தொடக்கம் கண்டது. ஹர்பஜன் சுழலில் தரங்கா(37) வெளியேறினார். சங்ககரா(21) ரன் அவுட்டானார்.
MS Dhoni acknowledges his third century as captain 
எனினும் நிதானமாக விளையாடிய டில்ஷான் சதம் அடித்து இலக்கை அணியின் ஓட்டங்களை அதிகரிக்க உதவினார் .பின்னர் டில்ஷான் , ஜெயவர்தனா இணைந்து விவேகமாக ஆடினர். கடந்த போட்டியில் 160 ஓட்டங்கள் விளாசிய டில்ஷான்  தொடர்ந்து இரண்டாவது சதம் அடித்தார். இது ஒரு நாள் போட்டிகளில் இவரது 5வது சதம். இவர் 123 ஓட்டங்கள்  எடுத்த நிலையில் நெஹ்ராவின் "யார்க்கரில்' போல்டானார். அடுத்து ஜாகிர் வேகத்தில் ஜெயவர்தனா(39) வெளியேற, ஆட்டத்தில் சூடு பிடித்தது. 45வது ஓவரில் இலங்கை அணி "பேட்டிங் பவர் பிளேயை' எடுத்தது. இந்த ஓவரில் கண்டம்பி(27), கபுகேதராவை(2) வெளியேற்றினார் ஜாகிர் கான்.

The Sri Lankan fielders celebrate Suraj Randiv's first ODI wicket
 இறுதியில் 49.1 ஓவரில் இலங்கை அணி வெற்றி இலக்கை அடைந்தது .இறுதி வரை  போராடிய இந்திய அணி, இலங்கையிடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்தது. கேப்டன் தோனியின் சதம் வீணானது. மீண்டும் சதம் விளாசிய டில்ஷான் , இலங்கை அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தார்.


வெற்றி குறித்து இலங்கை அணித்தலைவர் கூறும்போது :
டோனியை முன்னதாக “அவுட்” செய்திருந்தால் 200 ஓட்டங்களுக்குள்  கட்டுப்படுத்தி இருப்போம். டில்ஷான் அதிரடியாக விளையாடி வெற்றி பெற வைத்தார். மேத்யூசும், ரந்தீவும் நன்றாக ஆடினார்கள் என்றார் .

தோல்வி குறித்து இந்திய அணித்தலைவர் கூறும்போது:
இந்திய அணியின் தோல்விக்கு மோசமான பந்து வீச்சும், பீல்டிங்கும் தான் காரணம். நமது பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை கைப்பற்ற இயலாமல் திணறினார்கள். டில்ஷான்  ஆட்டத்தை கட்டுப்படுத்த தவறி விட்டனர். அவர் தொடர்ந்து 2-வது சதத்தை அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். இதேபோல பீல்டிங்கும் சொதப்பலாக இருந்தது. ஜாகீர்கான் ஒரே ஓவரில் 2 விக்கெட்டை கைப்பற்றி கொஞ்சம் நம்பிக்கை அளித்தார். ஆனால் 49-வது ஓவரில் பீல்டிங்கில் சொதப்பி நம்பிக்கையை தகர்த்து விட்டார். அவர் பீல்டிங்கில் கோட்டை விட்டதால் பவுண்டரி போனது. அதோடு எளிதான கேட்சையும் தவற விட்டார்.
 
இந்திய அணியின் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. விக்கெட்டுகளை அதிகமாக இழந்தோம். பேட்டிங் பவர்பிளேயை சரியாக பயன்படுத்திக் கொண்டதால் 300 ஓட்டங்கள்  குவித்து விட்டோம். ஆனால் பந்து வீச்சாளர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்ய தவறி விட்டனர். 300 ஓட்டங்களை குவித்ததும் மகிழ்ச்சி அளித்தது. தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை கைப்பற்ற தவறி விட்டோம்.
 
இதேபோல பீல்டிங்கிலும் பல தவறுகளை செய்தோம். இதுவும் தோல்விக்கு காரணமாக அமைந்தது. எண்கள் அணியின் ஸ்கோர் இன்னும் 20 அல்லது சற்று அதிகமான ஓட்டங்கள்  எடுத்து இருந்தால், நல்ல போட்டியை கொடுத்து இருக்கலாம்.
 
முதலில் பேட்டிங் செய்த நாங்கள் 300 ஓட்டங்கள் எடுத்தது மகிழ்ச்சியாக இருந்தது. அடுத்து பவுலிங் செய்யும் போது புதிய பந்தில் சில விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டு, பின் சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டு, நெருக்கடி கொடுக்க திட்டமிட்டு இருந்தோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை. முதலில் பந்து வீசும் பந்து வீச்சாளர்கள்  சிறப்பாக செயல்பட்டால் தான் அடுத்து வரும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு வசதியாக இருக்கும். ஆனால் அப்படி நடக்காதபட்சத்தில் எந்த நல்ல விக்கெட்டும், நல்ல ஓவர்களும் வெற்றிக்கு உதவாமல் போய்விடும்.
 
 
டில்ஷான் அவுட்டானவுடன் அடுத்து எங்களுக்கு சில விக்கெட்டுகள் தேவைப்பட்டது. ஆனால் பீல்டிங்கில் செய்த சில தவறுகளால் அதுவும் நடக்கவில்லை இவ்வாறு தோனி கூறினார் . 

ஆட்ட நாயகன் விருது பெற்ற டில்ஷான்  கூறும் போது இந்த வருடம்  எனக்கு மிகவும் சிறப்பாக இருந்தது. 1000 ஓட்டங்களுக்கு  மேல் எடுத்து விட்டேன். எனது துடுப்பாட்டம்  மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என்றார்.Tillakaratne Dilshan gives it a thump

 
 
இதேவேளை , நேற்றைய ஆட்டம் முடிவதற்கு குறிப்பிட்ட நேரத்தை விட 45 நிமிடம் அதிகமானது. இந்திய வீரர்கள் மெதுவாக பந்துவீசியதன் காரணமாகத்தான் நேரம் அதிகமானது என்பது தெரிய வந்தது.
 
இதை தொடர்ந்து மெதுவாக பந்துவீசியதற்காக இந்திய அணி கேப்டன் டோனிக்கு 2 ஒருநாள் போட்டியில் விளையாட ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) நடுவர் ஜெப் குரோவ் தடை விதித்துள்ளார்.
 
இந்த தடை காரணமாக இலங்கைக்கு எதிராக நடைபெறும் 3-வது போட்டி (21-ந்தேதி), 4-வது போட்டிகளில் (24-ந்தேதி) டோனி விளையாட முடியாது. இதனால் இந்த 2 போட்டிக்கும் தற்காலிக கேப்டனாக தொடக்க வீரர் காம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

4 comments:

அண்ணாமலையான் said...

ஸ்ஸ்ஸ்ஸ் .........அப்பாடா ... கிரிக்கெட்டா...? நான் அப்பீட்டேய்...
அப்புறமா வர்றேன்... டாட்டா...

Ashwin-WIN said...

match nerla paaththathumaathiri irukku. unkal pathivukku nanri.

http://ashwin-win.blogspot.com/2009/12/blog-post_19.html

Ashwin-WIN said...

match nerla paaththathumaathiri irukku. unkal pathivukku nanri.

http://ashwin-win.blogspot.com/2009/12/blog-post_19.html

Pavi said...

நன்றி உங்கள் கருத்துக்கும் , வருகைக்கும்