Thursday, November 29, 2012

எப்பிடி இருக்கு கங்னம் ஸ்டைல் நடனம் ?


இப்போதெல்லாம் யார் யாருக்கு என்னது பிடிக்கும் . எப்படி பாடல் பாடுவது, நடனம் ஆடுவது என்று வித்தியாசங்கள் காட்ட  வேண்டி உள்ளது . எல்லோரையும் கவரும் வகையிலும் , கேட்கும் வகையிலும் பாடல் இருந்தால்  அதுக்கு மொழி ஒரு தடை இல்லவே இல்லை . கொலவெறி பாடலை எல்லோரும் முணு  முணுத்தார்கள் . 


இப்போது வயது வித்தியாசம் இன்றி எல்லோரும் இப்போது ரசிக்கும் பாடலும், நடனமும் என்றால் அது ஓபன் கங்னம் ஸ்டைல் தான் . அதன் மெட்டு , இசை எல்லோருக்கும் பிடித்து இருக்கிறது . இந்த பாடலை பாடுபவரும் நன்றாக பாடி இருக்கிறார். மிக எளிமையான பாடல் வரிகள். வித்யாசமான நடன அசைவுகள் அதுவே பாடலின் வெற்றி ஆகும் . 

தென்கொரியாவின் ராப் பாடகர் சி இந்தப் பாடலை உருவாக்கி உள்ளார் . நான்கு மாதங்களில் இந்த பாடலை 830 மில்லியன் பார்வையாளர்கள் youtube பார்வை இட்டுள்ளனர் என்றால் பாருங்கள் . சூப்பர் ஹிட் அடித்துள்ளது . குதிரை சவாரி செய்பவரைப் போன்ற நடன அசைவுகளைக் கொண்ட சை-யின் கங்னம் ஸ்டைல் எல்லோருக்கும் பிடித்து இருக்கிறது . எல்லோரும் அவரை போல் நடனம் ஆட முயல்கிறார்கள் . எல்லோரையும் அந்த நடனம் போல் ஆடனும் போல் இருக்கிறது . 

இந்த பாடலின் மூலமாக 34 வயதான தென் கொரிய இசைக் கலைஞர் சி உலகப் பிரபலமாக மாறி வருகிறார் . 'oppan gangnam style ' எனும் வரிகள் இந்த பாடலில் மிகவும் பிரபலம். oppa என்றால் கொரிய  மொழியில் தோழன் அல்லது சகோதரன் என்று பொருள் . 

நீங்க இந்த பாடலை இன்னும் கேட்கவில்லை என்றால் இப்போதே இந்த பாடலை youtube  போய் பாருங்கள் .