முதல் மனைவி லலிதாகுமாரியும் விவாகரத்து பெற்று சமீபத்தில் பிரிந்தனர். பின்னர் இந்திப்பட டான்ஸ் மாஸ்டர் போனிவர்மாவுக்கும் பிரகாஷ்ராஜூக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் பொது நிகழ்ச்சிகளில் சேர்ந்து பங்கேற்றனர். போனியைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக சில தினங்களுக்கு முன் அறிவித்தார் பிரகாஷ் ராஜ். காஞ்சீவரம் படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றவர் பிரகாஷ் ராஜ்.
திருமணத்துக்குப் பிறகு இருவரும் மும்பையில் தங்குவதென தீர்மானித்துள்ளனர். படப்பிடிபபு இல்லாத நேரங்களில் மனைவியுடன் மும்பையிலேயே இருக்க வேண்டியிருப்பதால், 2000 சதுர அடியில் புதிதாக வீடு ஒன்றை வாங்கியுள்ளார் பிரகாஷ் ராஜ். மும்பையின் பிரபலமான ஜூஹு பகுதியில் இந்த வீட்டை அவர் வாங்கியுள்ளார். பிரகாஷ் ராஜுக்கு சென்னையில் பெரிய பங்களா உள்ளது.
வேத மந்திரங்கள் ஓத இந்து முறைப்படி போனி வர்மாவுக்கு பிரகாஷ்ராஜ் தாலி கட்டினார். நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் முக்கிய திரையுலக பிரமுகர்கள் மட்டுமே திருமணத்தில் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டிலிருந்து பிரகாஷ் ராஜுக்கு நெருக்கமான இயக்குனர்கள் ராதாமோகன், குகன், விஜி, குமரவேலு மற்றும் கப்பார், வெங்கட் ஆகியோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள் தேனிலவுக்காக சிம்லா, குலுமனாலி செல்ல இருவரும் திட்டமிட்டுள்ளனர்.
1 comment:
intha jodikku enathu vaalththukkal.
mano
Post a Comment