Sunday, August 15, 2010

தில்லாலங்கடி கிக்கோ கிக்கு

http://www.filmmy.com/images/Thillalangadi-movie-latest-stills.jpg
ஜெயம் ரவியின் நடிப்பில் வெளி வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது தில்லாலங்கடி திரைப்படம் . நானும் நேற்று தான் படம் பார்த்தேன் . மூன்று மணி நேரம் ஜாலியாக , சந்தோசத்துடன் மனதில் உள்ள கவலைகளை மறந்து எமக்கும் ஒரு கிக் வேணும் தானே . அதுக்காக படம் பார்க்கலாம் .
தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற ‘கிக்’ படத்தின் ரீமேக் படம் தான் தில்லாலங்கடி திரைப்படம் .தமிழுக்கு ஏற்ற மாதிரி மாற்றங்களுடன் வெளிவந்து திரை அரங்குகளில் ஓடி கொண்டு இருக்கிறது . கிக் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? கிக் இருக்க வேண்டும் எல்லாவற்றிலும் என்று படம் பார்த்து வந்தவுடன் எமக்கும் சொல்ல தோன்றுகிறது .
http://www.images.behindwoods.com/photo-galleries-q1-09/tamil-photo-gallery/thillalangadi-01/thillalangadi-02.jpg
 கிக் இல்லேன்னா வாழ்கையில சுவாரஸ்யமே இல்லைங்கிற ஒருத்தனோட லவ்வை 'கிக்'க்கிக்கேன்னு சிரிக்கிற மாதிரி சொல்லியிருக்கார் இயக்குனர் ராஜா . அதற்க்கு ஏற்ற மாதிரி ரவியும் நடித்து இருக்கிறார் . ரவி அழகாக , நல்ல உடல்வாகுடன் கம்பீரமாக இருக்கிறார் . தமனாவும் அழகு பதுமையாக இருக்கிறார் . ஷாம் அழகான , கட்டுமஸ்தான பொலிசுக்கு ஏற்ற உடல்வாகையுடன் , மீசையுடன் நடித்து இருக்கிறார் . படத்தில் அவருக்கு முக்கிய பாத்திரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது .
http://gallery.oneindia.in/main.php?g2_view=core.DownloadItem&g2_itemId=1465976&g2_serialNumber=2
எதிலும் ஒரு கிக்கை எதிர் பார்ப்பவர் ஜெயம் ரவி அது காதலாக இருந்தாலும், கடத்தலாக இருந்தாலும், லோக்கல் அரசியல்வாதிகளை ஏமாற்றி இல்லாதவர்களுக்கு கொடுப்பவர் தான் ஜெயம் ரவி . எதுவும் ஈசியா கிடைத்துவிட்டால் அதில் கிக்கு இல்லை என்பதால் எல்லாவற்றிலும் ஏதோ ஒரு தில்லாலங்கடி வேலை செய்து அந்த பிரச்சனையை சமாளிப்பதில் 'கிக்கு' அனுபவிப்பவர் ஹீரோ கிருஷ்ணா.சில படங்களின் செயல் தெரிகிறது . இப்போவரும் படங்கள் எல்லாம் அப்படிதானே இருக்கிறது . எதாவது படத்தின் சாயல் தெரியும் . அது தவிர்க்க முடியாததாகி விட்டது .
http://4.bp.blogspot.com/_4nDacxrJi_w/SxSH1wGipRI/AAAAAAAAAUI/Wbh3MpaNknA/s1600/Thillalangadi-movie-latest-stills-pics-photo-gallery-images-10.jpg
காமெடியிலும் கலக்கி இருக்கிறார்கள் ரவி, வடிவேலு, சந்தானம் , சத்யன் என எல்லோரும் தமது நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர் . காத்லுக்காக 14 தடவை கையை வெடிக்கிட்டவன் நான் என்ற சத்யனின் அறிமுகம் .எனக்கு கல்யாணம் நடக்குமா?கருமாதி நடக்குமா?என சந்தேகமாக அவர் கேட்கும்போது எது நடந்தாலும் நான் பார்த்துக்கறேன்,ரெண்டுக்கும் எனக்கு மந்திரம் தெரியும் என புரோகிதர்  சொல்லும் போது சிரிப்புத்தான் வருகிறது .

ஜெயம் ரவியை வெறுப்பேற்றுவதற்காக தமன்னா  வடிவேலுவை லவ் பண்ணுவதாக டூப் விடுவதும் ,அவர் கூட பைக்கில் ரைடு போவதும் செம சிரிப்புத்தான் . என் நதியே என் கண்முன்னே வற்றிப்போனாய்...' என டூயட் பாடுவது அபாரம். ஜாக்சன் என்கின்ற ஜாக்கி கதாபாத்திரத்தில் வடிவேலு பின்னி இருக்கின்றார்.வடிவேலுவுடன் தமன்னா ரொமான்ஸ்  படத்தில் சிரிப்போ சிரிப்பு .வடிவேலுவை ஐ லவ் யூ ஜாக்கி என்று தமன்னா சொல்லும் போது வடிவேலுவின் ரெயாக்சனை பார்க்கணுமே ...... ஐயோ...ஐயோ . காதல் வயப்படும் போதெல்லாம் பின்ணனியில் வயலின் வாசிக்கும் ஆட்கள் என்று சரி காமெடி.
http://www.tamilkey.com/wp-content/uploads/2010/04/Shaam-thillalangadi-movie-Gallery_tamilkey-19.jpg
காதலியின் பிரிவிற்கு பிறகு அவன் மிகப் பெரிய கொள்ளைக்காரனாய் ஆக, அவனை தேடி போலீஸ் ஆபிஸர் ஷாம் அலைய, திருடன் ரவிக்கும், போலீஸ் ஷாமுக்கும் நடக்கும் சம்பவங்களில்  என்ன நடக்கிறது  ஏன் ரவி திருடனானான்?. ஹீரோயினுக்கும் அவனுககும் திருமணம் நடந்ததா? என்பது தான் கதை. முதல் பாதி முழுவதும் ரவி, தமன்னா காதல் சம்பந்தபட்ட காட்சிகளில் திரைக்கதையின் வேகம் அருமை. ரவி வழக்கம் போல அலட்டி கொள்ளாமல் மென்மையாய் நடித்திருகிறார். 

இதனிடையே மலேசியாவில் தான் தேடி வந்த திருடனும், தமன்னாவின்  காதலனும் ஒருவனே என்பது தெரிய வர, தமனாவிற்கு ரவி நல்லவன் என்றும் தெரியவர தமனா ஷாமை கலட்டி விட்டு  ரவியை கை பிடிக்கிறார். இறுதியில் காதலியின் ஆசை தான் பொலிஸ் ஆக வேண்டும் என்பதே என்று பொலிஸ் வேலைக்கு சேர்கிறார் ரவி .
http://www.celluloidtamil.com/wp-content/gallery/thillalangadi/thillalangadi9.jpg
வடிவேல்,சந்தானம் இவர்களோடு இணைந்து ஜெயம் ரவியின் காமெடி ,த்மனாவின் இளமை படத்தின் பலம். சொல்பேச்சு கேட்காத சுந்தரியே சரியான ஹிட் பாட்டு.

இதோ உங்களுக்காக தில்லாலங்கடி பாடல் வரிகள் சில :
இதயம் கரைகிறதே உயிரை தீண்டும் சிரிப்பாலே
உலகில் இதுப்போல இன்பம் எதுவும் கிடையாதே
ஒரு சிறு புன்னகை பூத்ததே
உயிரையும் கொடுத்திட தோன்றுதே.........

ஹா டிங் டிங்க டிங்
ஹா டிங்க டிங்க டிங்
ஹா டிங்க டிங்க டிங்க டிங்க டிங்
உசுப்பேத்தும் உனதழகு பிடிக்கும்
உடுக்கை போல் மெழுகு மிட்டாய் பிடிக்கும்
உனக்கென்னை பிடிக்கவில்லை என்றால்
எனக்குன்னை மிக பிடிக்கும்
காதல் வேண்டவே வேண்டும்
நான் கெஞ்சினாலும் நோ சொல்லிப்போ நோ சொல்லிப்போ
http://www.tamilkey.com/wp-content/uploads/2010/03/Thillalangadi-Movie-stills-photos-gallery-wallpapers-10.jpg
சொல்பேச்சு கேட்காத சுந்தரியே
நீயும்தான் நிற்காமல் துள்ளுறியே
நீயாகப் பொய்ப்பேசப் போகுறியே
மின்சாரம் மேலே போய் மோதுறியே
ஏமாந்துப் போவாதே ஏமாத்திப்போவாதே
அழகான ஆபத்தில் மாட்டிக்கொள்ள போகாதே
கண்மூடி ஏங்காதே கீழ்ப்பாக்கம் போகாதே
கேட்டுக்கோ அவந்தான் தில்லாலங்கடி
அவன் நல்லப்பையன் தானா
இல்லக் கெட்டப்பையன் தானா
தெரியலையேப் புரியலையே மெல்ல ஏதோ ஆனேன்
அவன் பேச்சில் சொக்கிப்பேனேன்


6 comments:

சே.குமார் said...

adenkappa... pata vimarsanam padankal, padalvarigal ena kalai kattuthu.

nalla irukku pavi.

Anonymous said...

i like this film.


vino

sivatharisan said...

தில்லாலங்கடி கிக்கோ கிக்கு

very good film i like this film very much.சிவதர்சன் this is my name u right it some misstate.

Pavi said...

ம்ம்ம்ம் கள கட்டத்தானே வேண்டும் .
நன்றி குமார்

Pavi said...

நன்றி வினோ

Pavi said...

நன்றி சிவதர்சன்.