Wednesday, December 14, 2011

சத்தான நெய்

 http://www.chopra.com/files/images/ghee.jpg

இயற்கையான , சத்தான உணவுகள் எனக்கு எப்பவுமே நன்மை தரக்கூடியவை . நமது தமிழர்களது உணவில் பெரிதும் நாம் பயன்படுத்துவது நெய்யில் செய்யப்பட்ட உணவுகள் . அதிகம் எல்லோரும் விரும்பி கூட சாப்பிடுவோம் .
 
 
பசுப்பாலில் செய்யும் பொருட்களுக்கு எப்போதுமே வரவேற்பு உண்டு . பால் பொருட்களிலேயே அதிக சுவையையும், இனிய நறுமணத்தையும் கொண்டது நெய் தான். தனியாகப் பிரித்தெடுக்கப்பட்ட வெண்ணெய் அல்லது பால் கொழுப்பு உருக்கப்படும் போது நெய்யாகிறது. வெண்ணெய்யைச் சுமார் 100 டிகிரி சி வெப்பத்தில் உருக்குகின்ற போது அதிலுள்ள நீர் ஆவியாகி, நெய் கிடைக்கிறது. நம் பாட்டிமார் தாமே பசுவில் பால் எடுத்து இந்த நெய்யை செய்வார்கள் . கடைகளில் வாங்குவதை விட சுத்தமாக அவர்கள் செய்வார்கள் . 
http://3.bp.blogspot.com/-JGatwglYRn8/TV8irtSSY8I/AAAAAAAAAjw/ldUUV47JojU/s1600/IMG_5708.JPG
மருந்துகள் கெடாமல் பாதுகாக்க நெய்யே சிறந்த பொருளாகும். நெய்யை ரசாயனம் என்று ஆயுர்வேத மருந்தாளர்களால் அழைக்கப்படுகிறது. ஏன் என்றால் முழு உடல் நலம் கொடுத்து நீண்ட ஆரோக்கியத்தைக் கொடுக்கும் குணம் நெய்க்கு உண்டு. 
மருத்துவக் குணம் வாய்ந்த மூலிகைகளில் உள்ள அணுக்களின் சுவர்களை ஊடுருவக்கூடிய தன்மை நெய்க்கு இருப்பதால் இத்தகைய மருந்து தயாரிப்பில் நெய்யை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

நெய் வெள்ளை நிறத்திலிருந்து, இள மஞ்சள் நிறம் வரை அதிலுள்ள கரோட்டின் அளவைப் பொறுத்தது. நெய்யில் ஏறத்தாழ 8 சதவிகித அளவு தாழ்நிலை செறிவுற்ற கொழுப்பு அமிலங்கள் இருப்பதனால் நெய் எளிதாக செரிமானம் ஆகிறது. இவ்வமிலங்கள் மிகச்சிறந்த உண்ணத்தக்க கொழுப்புகள். மேலும் நெய்யைத் தவிர பிற தாவர எண்ணெய்கள் எதிலும் இவை காணப்படுவதில்லை. நெய் மற்றும் மீன் எண்ணெய்யைத் தவிர வேறு எந்த தாவர எண்ணெய்களிலும், கொழுப்புகளிலும், விட்டமின்  ஏ கிடையாது .
 http://farm2.static.flickr.com/1316/4730540085_69011059a1.jpg
ஒரு ஸ்பூன் நெய்யில் 14 கிராம் கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. மதியம் உண்ணும் சாதத்தில் சிறிதளவு நெய் சேர்த்து உண்பது உடம்புக்கு நல்லது . உடம்புக்கு குளிர்ச்சியை கொடுத்து உஸ்ணத்தை குறைக்கும் . உப்பு , லேக்டோஸ் போன்ற சத்து கிடையாது . பாலில் செய்த பொருட்கள் ஒத்துக் கொள்ளாதவர்கள் நெய்யை பயன்படுத்தலாம் .

நெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நாம் தோசை சாப்பிடும் போது நெய் விட்டு தோசை சாப்பிட்டால் ருசியாக இருக்கும் . பூந்தி நட்டு செய்யும் போது நெய் சேர்த்து செய்வார்கள் .
 http://2.bp.blogspot.com/-QJKByhi7m7o/TV_birdwAdI/AAAAAAAAAFE/1tDwzFuJq54/s1600/Ghee_08.jpg
குடற்புண் கொண்டவர்கள் பசியின்மையால் அவதியுறுவார்கள். சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமலும், அதிக பட்டினியாகவும் இருப்பவர்களின் வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரந்து குடலின் உட்புறச் சுவர்களை புண்ணாக்கி விடுகின்றன.இவர்கள் உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும். 
 http://www.indianfoodforever.com/images/boondi-ladoo.jpg

நாம் நெய் பயன்படுத்துகிறோம் . அதன் பயன்கள் நமக்கு தெரிவதில்லை . இப்போது நெய்யின் பயன்பாடுகள் தெரிந்தமையால் இப்படி எல்லாம் இந்த நெய்யில் விசேஷங்கள் உண்டா என்று எண்ணுபவர்களும் உண்டு . நெய்யை பாவிக்கதவர்கள் இனியாவது நெய்யை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள் . நெய்யால் எமக்கு தீங்கு ஒன்றும் இல்லை . நெய் என்று சொல்லி சிலர் கலப்படம் உள்ள நெய்யை விற்கிறார்கள் . அது உடலுக்கு கேடு . சுத்தமான , உணவுக்கு பயன்படுத்தும் நெய்யை வாங்கி உபயோகிக்கவும் . 1 comment:

DR. Raj Mohan said...

good ghee good health