தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு ஒரு ஆழ்ந்த கவலை அளிப்பதாக உள்ளது நடிகர் முரளியின் இழப்பு . அப்போது பார்த்த மாதிரி இப்போதும் இருக்கிறாரே என எல்லோரும் ஆச்சரிய படும்படி ஒரே மாதிரி இருந்தவர் நடிகர் முரளி . அவரின் இழப்பு எல்லோருக்கும் ஆழ்ந்த கவலையை அளிக்கிறது .
நேற்று இரவு முரளிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரை தனியார் மருத்துவமனை ஒன்றுக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை முரளி உயிரிழந்தார்.
காதல் படங்கள் என்றாலும், குடும்ப பாங்கான படங்கள் ஆனாலும் சரி எல்லாவற்றிலும் தனது சிறந்த நடிப்பால் அசத்தி பல ரசிகர்களுக்கு பிடித்த நடிகரும் கூட . எனக்கு அவர் நடித்த படங்களில் இதயம் , ஆனந்தம் , வெற்றிக்கொடிகட்டு , பொற்காலம் போன்ற படங்கள் எனக்கு பிடித்தவை .
கே.பாலச்சந்தர் அறிமுகப்படுத்திய வெற்றி நாயகர்கள் வரிசையில் இணைந்த குறிப்பிடத்தக்க நடிகர் முரளி. 1984ம் ஆண்டு கே.பாலச்சந்தரின் கவிதாலயா தயாரிப்பில், அமீர்ஜான் இயக்கத்தில் வெளியான 'பூவிலங்கு' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகனாக அறிமுகமானார் .
முதல் படமே சூப்பர்ஹிட் ஆனதால் வெற்றிப் பட நாயகனாக உருவெடுத்தார். தொடர்ந்து பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்தார். காதல் படங்களுக்குத் தனி இலக்கணம் வகுத்தவை முரளி நடித்த படங்கள். பகல் நிலவு, இதயம், அதர்மம், காலமெல்லாம் காதல் வாழ்க, பொற்காலம், வெற்றிக் கொடி கட்டு, சொன்னால்தான் காதலா, இரணியன், சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் அவர் நடித்துள்ளார். சுந்தரா டிராவல்ஸ் என்ற திரைப்படம் முழு நீளமான ஒரு நகைச்சுவை படம் . அதிலும் அசத்தலான நடிப்பை வெளிக்காட்டினார் . முரளியின் நடிப்பில் வெளியான 'புது வசந்தம்', 'இதயம்' ஆகிய படங்கள் மிகப் பெரிய வெற்றி பெற்ற சூப்பர்ஹிட் படங்களாகும்.
'புது வசந்தம்' தமிழ்த் திரையுலகில் புதிய வரிசைப் படங்களுக்கு இலக்கணம் வகுத்தது. இதயம் திரைப்படத்தில் காதல் சொல்லப்பட்ட விதமும், முரளியின் நடிப்பும் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. பாணா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் தனது மகனை தமிழ் திரைப்பட உலகுக்கு அறிமுகப்படுத்தி இருந்தார் முரளி . அதில் ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்தும் இருந்தார் . அந்த படமே முரளியின் இறுதி படமாகவும் அமைந்தது .
சிவாஜி கணேசன், சரத்குமார், விஜயகாந்த், பிரபு, பார்த்தீபன் என தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார் முரளி. முரளியின் தந்தை கன்னடர் என்றாலும், அவரது தாய் ஒரு தமிழ்ப் பெண். இதனால் பிறந்தது பெங்களூர் என்றாலும் சுத்தத் தமிழராக இருந்தவர். தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்களின்போது கன்னட திரையுலகின் எதிர்ப்பையும் மீறி கலந்து கொண்டு தனது உணர்வைப் வெளிப்படுத்திய நல்ல தமிழ் பற்றுள்ள நடிகர்களில் ஒருவராகவும் திகழ்ந்த முரளியின் இழப்பு எல்லோருக்கும் பெரும் இழப்பு தான் .
எல்லோரினதும் மனங்களில் நீங்காத இடத்தை பிடித்த முரளியின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் . நீங்கள் மறைந்தாலும் நீங்கள் நடித்த படங்கள் உங்களை என்றும் மறவாமல் இருக்க உதவும் .
13 comments:
so sad news for us pavi.....
நல்ல நடிகர். இளவயதில் காலமாகிவிட்டார்.
ஆழ்ந்த அனுதாபங்கள்
என்னை கவர்ந்த நடிகர்களில் முரளியும் ஒருவர்...
அவருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்... அவரது ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுவோம்...
sad sad sad. decent actor. we will miss you always mr.murali. ungal anmaa saanthiyadai iravanai vendugirom
நல்ல நடிகர். இளவயதில் காலமாகிவிட்டார்.
ஆழ்ந்த அனுதாபங்கள்...
அவரின் குடும்பத்தினருக்கு இறைவன் பொறுமையை கொடுப்பனாக!
ஷாக் நியுஸ் சின்ன வயசு, ரொம்ப காமாகவும், பொறுமையாகவும் நடிக்கும் நடிகர்.
எல்லாம் இறைவன் சித்தம்.
ஆண்டவன் அவர் குடும்பத்தாருக்கு பொறுமையை கொடுப்பானாக.
எல்லோருக்கும் கவலை தரும் விடயம் தான் .
நன்றி புஷ்பா
என்றும் இளமையுடன் இருக்கிறார் என்று நினைப்பதுண்டு. இளம் வயதில் காலமாகி விட்டார் .
நன்றி முருகானந்தம் அவர்களே
எல்லோரும் பிரார்த்திப்போம் .
நன்றி வெறும்பய
பந்தா , பகட்டு இல்லாத நடிகர்களில் ஒருவர் முரளி .
நன்றி செல்வம்
அதுதான் கவலை அளிப்பதாக உள்ளது .
அதுவும் திடீர் மரணம் .
நன்றி குமார்
நன்றி கமல்
Post a Comment