Wednesday, September 15, 2010

தாலியின் மகிமை

http://4.bp.blogspot.com/_iMNzbU5t46g/S62LTT6HC9I/AAAAAAAAAac/hXjdMbQvOtY/s200/t01.jpg
தமிழர்களின் வாழ்க்கையில் தாலிக்கு பெரும் முக்கியத்துவம் உண்டு . திருமணத்து அன்று கணவன் கட்டிய தாலி கணவன் உயிருடன் இருக்கும் வரைக்கும் அவள் அணிந்து கொள்ளலாம் . கணவன் இறந்தவுடன் அந்த தாலியை அணிய கூடாது .

தாலி ஏற்றுள்ள பெண்ணைத் தாயாகப் பாவிப்பது நம் கலாசாரம். தாலி ஒரு அலங்காரப் பொருளல்ல; அது ஒரு கலாசாரச் சின்னம்; தெய்வீகச் சின்னம்; கற்பின் சின்னம்; திருமண வாழ்வின் புனிதத்தை விளம்பும் சின்னம்; பார் புகழும் பாரதப் பண்பாட்டின் பழம்பெருமை பகரும் சின்னம்.
http://www.tamilhindu.com/wp-content/uploads/thaali-150x132.jpg
பெண்ணுக்கு தாலி ஒரு அழகு தான் .எப்போதும் கணவன் தன்னுடன் இருக்கிறான் என்பதை ஜாபகப்படுத்தி கொண்டே இருப்பது போல இருக்கும் . முற்காலத்தில் “”தாலம்” என்ற பெயர்தான் தாலியாக இப்போது மாறி இருக்கிறது . தாலி அணிந்த பெண் குங்குமத்துடன் இலட்சணமாக காணப்படுவாள் . தாலியை மாங்கல்யம் என்று அழைப்பதும் உண்டு . பதினோராம் நூற்றாண்டில்தான் திருமணச் சின்னம் என்ற ரீதியில் தாலி என்ற பெயர் உபயோகப்படுத்தப்பட்டது என்கிறது உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்.
http://img.dinamalar.com/data/images_news/tblSambavamnews_83910769225.jpg
மாங்கல்ய தாரணம்” அல்லது “தாலி கட்டுதல்” என்பது திருமணத்தில் இன்றியமையாத முக்கியமான சடங்கு. மணமகன், மணமகளின் கழுத்தில் அணிவிக்கும் தாலிக்கு, மங்கல மணி, மங்கல நாண் என்று பல பெயர்கள் உண்டு. மஞ்சள் கட்டிய மஞ்சள் கயிறு கூட ‘தாலி’ என்கிற புனிதத்துவத்தைப் பெறுவதற்குக் காரணம் மஞ்சள் ஒரு மங்கலமான பொருளாக நம் பாரத கலாசாரத்தில் கருதப்படுவதால்தான். பாரத தேசத்தில் வாழும் அனைத்து  இந்து  சமுதாயத்தினரின் திருமண வைபவத்திலும், தாலி ஒரு மங்கலப் பொருளாகக் கருதப்படுகிறது.
http://www.vivaaha.org/images/mangal1.gif
தமிழர்களின் பண்பாடுகள் சில மேலை நாட்டினத்தவர்களுக்கும் பிடித்து இருக்கிறது . வெள்ளைகாரர்கள் சிலர் இப்போது தமிழர்களின் கலாசாரத்தில் ஆழ்ந்த விருப்பும் , மரியாதையும் கொண்டுள்ளனர் .  தெய்வீகக் குணம், தூய்மைக் குணம், மேன்மை, தொண்டு, தன்னடக்கம், ஆற்றல், விவேகம், உண்மை, உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுதல். இத்தனைக் குணங்களும் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒன்பது இழைகள் கொண்ட திருமாங்கல்யச்சரடு அணியப்படுகிறது.
http://www.thedipidi.com/ItemImages/572_1.jpg
தாலியின் மகிமை அறியாத சிலர் இந்து மதத்தையும் , சமய சடங்குகளையும் , திருமண சடங்குகளையும் வெறுக்கிறார்கள் . நக்கல் , நையாண்டி அடிக்கின்றார் . அவற்றுக்கு எல்லாம் காலம் பதில் சொல்லும் . நமது பண்பாடு, கலாசாரம் என்பவற்றை இளம் தலைமுறையினர் கட்டி காக்க வேண்டும் என்பதே எல்லோரினதும் அவா .6 comments:

S Maharajan said...

அருமையான பதிவு தற்போதிய கலாச்சாரத்துக்கு ஏற்ற பதிவு
நன்றி பவி!

தமிழ் அமுதன் said...

good post..!

Pavi said...

அப்படியான பதிவுகளை இட வேண்டும் என்று தான் நினைக்கிறேன் . சமுதாயத்தில் இவற்றையும் எழுத வேண்டும். எல்லோரும் படிக்க வேண்டும். இவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே என் ஆவல் .
நன்றி மகாராஜன்

Pavi said...

நன்றி தமிழ் அமுதன்

r.v.saravanan said...

நல்லதொரு கலாசார பதிவு நன்றி பவி

Pavi said...

நன்றி சரவணன்