Friday, December 25, 2009

வெற்றி நாயகி தமன்னா

http://happyhyderabad.files.wordpress.com/2009/05/tamanna-hot-pictures.jpg


இன்றைய தமிழ் சினிமாவின் நம்பர் 1 நாயகி ஆகவும் வெற்றி நாயகியாகவும் வலம் வந்து கொண்டு இருக்கின்றார் தமன்னா . அழகு தோற்றம் , அழகான நடிப்பு , கலக்கல் நடனம் என நடிகைக்கு ஏற்ற அத்தனை அம்சமும் தமன்னாவிடம் உண்டு . இந்த ஆண்டில் பல படங்களில் நடித்த நடிகைகள் என்று பார்த்தால் அதில் முதல் இடம் தமன்னாவுக்கு தான் .

டிசம்பர் 21 ஆம் திகதி இந்தியாவின் மும்பையில் 1989 ஆம் ஆண்டு பிறந்த தமன்னா சாந்த் சே ரோசன் செகரா என்ற இந்தி படம் மூலம் 2005 ஆம் ஆண்டு சினிமாவுக்கு அறிமுகமானார் . இப்போது தமிழ், தெலுங்கு என பல படங்களில் நடித்து கலக்கி கொண்டு இருக்கின்றார் .http://www.vinfoindia.com/photos/albums/tollywood/tamil-actress/tamanna/1-Tamanna001.jpg 
தமிழில் கேடி என்ற படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனார் . எனினும் அந்த படம் தமன்னாவுக்கு சிறந்த அடித்தளத்தை பெற்று தரவில்லை .அதன் பின்பு வியாபாரி என்ற படத்திலும் நடித்திருந்தார். அவருக்கு நல்ல நடிகை என பெயர் வாங்கி கொடுத்த படம் என்றால் அது கல்லூரி என்ற திரைப்படம் தான் . அதன் பின்பு தான் தமன்னா என்ற நல்ல நடிகையை தமிழ் சினிமா கண்டு கொண்டது . சோர்ந்து பொய் இருந்த தமன்னாவுக்கு புத்துயிர் அளித்தது . சிறந்த நடிகை என்ற பிலிம்பேர் விருது அவருக்கு கிடைத்தது .


http://4.bp.blogspot.com/_eevbSBw4h1A/R5L_hRAiL0I/AAAAAAAABXA/OXnNzNd2ydY/s1600/tamanna.gif 

அதன் பின்பு எல்லாம் வெற்றி மயம் தான் தமன்னாவுக்கு . தனுசுடன் படிக்காதவன் , சூர்யாவுடன் அயன் , ஆனந்த தாண்டவம் , கண்டேன் காதலை , பையா , தில்லாலங்கடி , சுறா என பட்டியல் தொடர்ந்து செல்கிறது . இதில் இந்த ஆண்டில் வெளிவந்த அயன் , படிக்காதவன் , ஆனந்த தாண்டவம் , கண்டேன் காதலை என்பன வெற்றி படங்கள் . பையா படம் நடித்து முடித்து விட்டார் . இன்னும் வெளியாகவில்லை . தில்லாலங்கடி , சுறாவில் நடித்து கொண்டு இருக்கின்றார் .


இன்று ரூ 1 கோடிக்கு மேல் சம்பளம், பெரிய நடிகர்களே கேட்டாலும் தரமுடியாத அளவு பிஸியான கால்ஷீட் ஷெட்யூல் என தமன்னா காட்டில் பேய் மழை தான் . இயக்குனர் சங்கர் பாடல் வெளியீட்டு விழாவில் பேசும் போது தமன்னாவின் நடிப்பு படத்துக்குப் படம் முன்னேறி வருகிறது. நிச்சயம் தமிழ் சினிமாவில் சிம்ரனின் இடத்தைப் பிடிப்பார் தமன்னா என்று கூறியுள்ளார் . 

http://news.rinkiss.com/wp-content/uploads/2009/03/tamanna-hot-sexy-2.jpg 

கண்டேன் காதலை படத்தின் வெற்றியை தொடர்ந்து மகிழ்ச்சியில் இருக்கும் தமன்னா அடுத்தடுத்து பையா, தில்லாலங்கடி, சுறா படங்கள் வெளிவர உள்ளன.
இதில் பையா படம் பொங்கல் அன்று வெளிவரவிருக்கிறது. தமன்னாவுக்கு கமலுடன் நடிக்க வேண்டும் என்று மிகப்பெரிய ஆசை இருக்கிறதாம். அந்த ஆசையும் நிறைவேற இருக்கிறது . அவருடனும் நடிக்கின்றார் தமன்னா .http://www.indango.com/buzz/wp-content/uploads/2008/07/tamanna-04.jpg 
நடிகர் ஜெயம் ரவி கூறுகையில் :ரொம்ப நாளைக்கு முன்னாடி தமன்னா நடிச்ச தெலுங்கு படம் ஒன்று பார்த்தேன். ரொம்ப நல்லா பண்ணியிருந்தாங்க. போன் பண்ணி பாராட்டினேன். எனக்கு அப்ப இருந்தே தமன்னா ரொம்பப் பிடிக்கும். 

இப்போது புதிதாக ஒரு தகவல் வெளிவருகின்றது .கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடிக்கவிருக்கிறார். உன்னைப்போல் ஒருவன் வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசன், டைரக்டர் மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில் நடிப்பார் என்று செய்திகள் வெளியாயின. ஆனால் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்க கமல்ஹாசன் தயாராகி வருகிறாராம். தசாவதாரம் படத்திற்கு பிறகு கமல்ஹாசன், கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் உருவாகும் இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்க உள்ளது. முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக எடுக்கப்படும் இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க நடிகை தமன்னாவை ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
http://amijha.files.wordpress.com/2008/04/tamanna-04.jpg 

2009 ஆம் ஆண்டு பல படங்களில்  வெற்றி பெற்ற தமன்னாவுக்கு 2010  ஆம் ஆண்டும் நல்ல படங்கள் வர காத்து இருக்கின்றன . அவை எல்லாம் பல முன்னணி நடிகர்களின் படங்களும் கூட . தமன்னா காட்டில் நல்ல மழை. இதனால் கலங்கி இருப்பவர்கள் திரிசாவும் , நயனும் தான் . தங்களுக்கு வர வேண்டிய வாய்ப்புகள் எல்லாம் தமன்னாவை வந்து சேர்வதாக ஆழ்ந்த கவலை அடைகின்றனராம். கவலைப்படுவார்கள் தானே . கையில் ஒரு படம் கூட இல்லாமல் போனால். 

http://img.ragalahari.com/april2008gallery/tamanna4/tamanna41.jpg 

  தமன்னாவை எனக்கும்  பிடிக்கும்  . அயன்  படம் எனக்கு  ரொம்ப  பிடித்து  இருந்தது   . இன்னும்  பல படங்களில்  நடித்து  வெற்றி  நாயகியாக  தமன்னா  வர வேண்டும்   என்பதே எல்லோரினதும் ஆசை .  

http://www.idlebrain.com/images3/newpg-tamanna30.jpg


12 comments:

Ivo Serentha and Friends said...

My compliment for your blog and pictures included,I encourage you to photoblog

CLICK PHOTOSPHERA

Even week another photo album

Merry Christmas,greetings from Italy,

Marlow

கவிக்கிழவன் said...

உங்களுக்கு இந்த படைப்பு மனநிமதியை திருப்தியை கொடுத்தால் இந்த படைப்பு நிச்சயமாக நல்ல படைப்பு

Pavi said...

ம்ம்ம்ம்ம்ம் நன்றி
மனதுக்கு மகிழ்ச்சி

மணிப்பக்கம் said...

// தமிழில் கேடி என்ற படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனார் //

அது இலியானா இல்லையா? தமன்னாவும் அதுல உண்டா?

நான் வசந்த பாலன் இயக்கிய அந்த பள்ளிக்கூட படம்னு நினைச்சிட்டுருந்தேன்! ;)

Pavi said...

கேடி படத்தில் தமன்னாவும் தடித்து இருந்தார் .
ஆனால் இரண்டாம் நாயகி ஆக. படம் பெரிதாக பேசப்படவில்லை

அண்ணாமலையான் said...

ஓஹோ சினிமா நிருபரா ஆயாச்சா? இல்ல பி ஆர் ஓவா?

தியாவின் பேனா said...

அருமையான இடுகை வாழ்த்துகள்

Pavi said...

எல்லோருக்கும் எனது நன்றிகள்

ஞானப்பழம் said...

எனக்கு என்னமோ தமன்னா இப்போது bore அடித்து விட்டார்!! :P
என்னதான் அழகா இருந்தாலும் இவ்வளோ படம் நடிக்கக்கூடாது.. . நடிகர்கள்/நடிகைகள் ஒரு நட்சத்திர தரத்தை அடைந்த பிறகு நன்று சிந்தித்து கதைகளை தேர்ந்தெடுப்பதே சிறந்தது என்பது என் கருத்து!!

ஓரிரு புகைப்படங்களுடன் நிறுத்தியிருக்கலாம்.. 'தமன்னா' யார் என்று எங்களுக்கு தெரியும்!!
:P

Pavi said...

தமன்னாவை எல்லோருக்கும் தெரியும் என்று எனக்கும் தெரியும் . எனது பதிவு இன்னும் அழகாக இருக்கும் என்பதுக்குத்தான் தமன்னாவின் படங்களை போட்டேன் .

கண்மணி said...

எனக்கும் ரொம்ப பிடிக்கும்

புலவன் புலிகேசி said...

ம் தமண்ணா இல்லைங்க தமிழ் கதாநாயகிகள் எல்லோரும் சில காலம்தான்