Tuesday, July 13, 2010

வைரமுத்து ஒரு வைரம்

 http://i42.tinypic.com/2h72rzr.jpg
தமிழ் திரை உலகில் இன்றும் சிறந்த திரைப்பட பாடல் ஆசிரியராக இருக்கும் வைரமுத்துவுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் . பாடலாசிரியர் , கவிஞர் என சிறந்து விளங்கும் வைரமுத்து அவர்கள் தமிழ் சினிமாவுக்கு பல சிறந்த பாடல்களை தந்துள்ளார் . தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு வைரம் .http://www.mykathiravan.com/Breaking%20news%20of%20Kathiravan/vairamuththu.jpg
1953 ஆம் ஆண்டு  ஜூலை மாதம் 13  ஆம் திகதி வடுகபட்டி தேனீ மாவட்டத்தில் பிறந்தார் .  சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஐந்து முறை பெற்றுள்ளார் . (1985),(1993),(1994),(1999),(2002) போன்ற ஆண்டுகளில் என்பது குறிப்பிடத்தக்கது .  நிழல்கள்(1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலை பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் ஜனவரி 2009 வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார். 
 http://www.nilacharal.com/feature/jambavangal/images/vairamuthu.jpg
இன்னும் எழுதிக் கொண்டு தான் இருக்கிறார் . இப்போது திரையில் வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கும் ராவணன் பட பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட் பாடல்கள் . "உசிரே போகுது உசிரே போகுது உதட்ட " இன்று எல்லோரும் வாய்க்குள் முனு முணுக்கும் பாடல் . http://nillal.files.wordpress.com/2009/05/3337733489_e978cab3af.jpg
இரண்டு பிள்ளைகளின் தந்தையான வைரமுத்து  பல கவிதை தொகுப்புகளையும் , நாவல்களையும் எழுதி வெளி இட்டுள்ளார் .  வைரமுத்துவின் வரிகள், கேட்பவரை சிந்திக்க வைப்பதுடன், தன்னம்பிக்கை ஊட்டுவதாகவும் அமைந்திருப்பதை நாம் காணலாம் . http://www.viyapu.com/news/wp-content/uploads/2009/04/vairamuthu.jpg
இவருடைய கவிதை தொகுப்புகளான வைகறை மேகங்கள், சிகரங்களை நோக்கி,  திருத்தி எழுதிய தீர்ப்புகள், தமிழுக்கு நிறமுண்டு,  இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல,  சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்,  இதுவரை நான், பெய்யென பெய்யும் ம‌ழை போன்ற பல கவிதை தொகுப்புகளை எழுதி உள்ளார் .

http://www.uyirmmai.com/Images/ContentImages/Uyirosai/uyirosai-27/vairamuthu.jpg
இவருக்கு விருது கிடைத்த பட பாடல்கள் முதல் மரியாதை படத்தில்  "பூங்காற்று திரும்புமா" என்ற பாடலும் , ரோஜா படத்தில் " சின்ன சின்ன ஆசை ",  கருத்தம்மா படத்தில் "போறாளே பொன்னுத்தாயி" , சங்கமம் படத்தில் " முதன் முறை கிள்ளிப் பார்த்தேன" ,  கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில்  "விடை கொடு எங்கள் நாடே" என்ற பாடல்களுக்காக கிடைத்தன . http://4.bp.blogspot.com/_YTGVOY3SxuE/RjIDgxJMzLI/AAAAAAAAAHQ/DufWj6a5U-k/s400/vairamuthu3.jpg
கலைமாமணி  விருதையும் பெற்ற இவர்  "புல்வெளி  புல்வெளி ", "நறுமுகையே நறுமுகையே " போன்ற பாடல்களுக்கும் விருதுகளை பெற்று உள்ளார் . இவரின் வைர வரிகளில் எனக்கு பிடித்த வரிகள் இதோ :
http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/ntalkies/hollywood/vairamuthu.jpg
"தாயை தேர்ந்தெடுக்கும் தந்தையை தேர்ந்தெடுக்கும்
உரிமை உன்னிடத்தில் இல்லை... இல்லை
முகத்தை தேர்ந்தெடுக்கும் நிறத்தை தேர்ந்தெடுக்கும்
உரிமை உன்னிடத்தில் இல்லை... இல்லை"
 
"உயிர் ஒன்று இல்லாமல் உடல் நிலையாதே
உயிர் என்ன பொருள் என்று அலை பாய்ந்து திரியாதே
வாழ்க்கையின் வேர்களே மிக ரகசியமானது
ரகசியம் காண்பதோ மிக அவசியமானது"
 
"இளமைக்கு நடையழகு
முதுமைக்கு நரையழகு
கள்வர்க்கு இரவழகு
காதலர்க்கு நிலவழகு
நிலவுக்கு கரையழகு
பறவைக்கு சிறகழகு"
 
 
"மங்கை மான்விழி அம்புகள்
என் மார்த்துளைத்ததென்ன
பாண்டிநாதனைக் கண்டு என்
மனம் பசலை கொண்டதென்ன
நிலாவிலே பார்த்த வண்ணம்
கனாவிலே தோன்றும் இன்னும்"
என்று பல பாடல்களை குறிப்பிடலாம் .

15 comments:

C.Rajapandiyan said...

வைரமுத்துவை பற்றி அறிய தகவல்கள் தந்தமைக்கு நன்றி.

C.Rajapandiyan said...
This comment has been removed by the author.
பிரியமுடன் பிரபு said...

பகிர்வுக்கு நன்றி

Anonymous said...

வைரமுத்து சிறந்த கவிஞராக இருக்கலாம் ஆனால் சிறந்த மனிதன் அல்ல. கருணாநிதிக்கு ஜால்ரா அடித்தே விருதுகள் பெற்றவர். ஏனைய கவிஞர்களை மதிக்கத் தெரியாதவர்.

சே.குமார் said...

வைரமுத்துவை பற்றிய பகிர்வுக்கு நன்றி.

Anonymous said...

தமிழீழப்பெண்ணாக இருந்து கொண்டு
ஈழமக்களுக்கு எதிரானவனுக்கு ஜால்ரா
அடிப்பதன் நோக்கம் தான் என்ன?

Anonymous said...

nalla pathivu.

mano

Pavi said...

நன்றி ராஜபாண்டியன்

Pavi said...

நன்றி பிரபு

Pavi said...

நான் கவிஞரை பற்றி தான் எழுதி உள்ளேனே தவிர ஒருவரின் வாழ்க்கை வரலாறு பற்றி எழுதவில்லை . அவருடைய பாடல் வரிகள் எனக்கு பிடித்து இருந்தன . அதற்காக எழுதினேனே தவிர அவர் நல்லவரா , கெட்டவரா , ஜால்ரா போட்டு விருது வாங்குகிறாரோ அதை பற்றி எனக்கு தெரியாது . அதை அலசவும் போகவில்லை . அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் . நன்றி நண்பரே

Pavi said...

நன்றி குமார்

Pavi said...

ஒரு நோக்கமும் இல்லை . அவரின் பாடல் வரிகள் எனக்கு பிடித்து இருந்தது . அதனாலே எழுதினேனே தவிர ஜால்ரா அடிப்பதற்க்கு நோக்கம் ஒன்றும் இல்லை நண்பரே . அவர் ஒரு கவிஞர் . அவ்வளவு தான் . அவர் எப்பிடியானவர்? சிறந்த மனிதரா ? என்பது பற்றி எனக்கு தெரியாது .

Pavi said...

நன்றி மனோ

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல முயற்சி.ஜோடி படத்தில் வரும் காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்,ஜீன்ஸில் வரும் அன்பே அன்பே கொல்லாதே என் சாய்ஸ்

Pavi said...

ம்ம்ம்ம் அவையும் நல்ல பாடல்கள் தான் .
நன்றி செந்தில் குமார்