நுரையிரல் பாதிப்புக்கு சிசிச்சை பெற்றுவந்த அவருக்கு பாதிப்பு அதிகமானதால் சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலன் இன்றி நேற்று உயிரிழந்தார். அவரின் உடலுக்கு திரையுலக பின்னணி பாடகர்களும், திரையுலகினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவருக்கு வயது 37 ஆகும் .
இவர் நீதிக்கு தண்டனை படத்தின் மூலம் "சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா" என்ற பாரதியாரின் பாடலைப் பாடி இசைஞானி இளையராஜாவால் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகபடுத்தப்பட்டார்.
"சத்ரியன்', "சின்னதம்பி', "கேப்டன் பிரபாகரன்', "அலைபாயுதே' உள்ளிட்ட ஏராளமான படங்களில் பாடியுள்ளார். திருமணமாகாத சொர்ணலதா சென்னை சாலிகிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த ஓராண்டாக நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவருக்கு, கடந்த சில வாரங்களாக உடல் நிலை மோசமானது. இந்த நிலையில் அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சொர்ணலதா ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.
எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களின் படங்களில் நிறையப் பாடல்களைப் பாடியுள்ளார். சத்ரியன் படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் 'மாலையில் யாரோ மனதோடு பேச...' என்ற பாடலைப் பாடியதன் மூலம் பிரபலமானவர் சொர்ணலதா.
பாடல் பாடுவது தவிர கீ போர்ட், ஹார்மோனியம் வாசிப்பதிலும் வல்லவர் சொர்ணலதா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 7,500-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட மாநில அரசு விருதுகளையும் பெற்றுள்ளார்.
"போவோமா ஊர்கோலம்...'' (சின்னதம்பி), ""மாலையில் யாரோ மனதோடு பேச...'' (சத்ரியன்), ""எவனோ ஒருவன்...'' (அலைபாயுதே), ஆட்டமா...தேரோட்டமா (கேப்டன் பிரபாகரன்) உள்ளிட்ட அவரது பாடல்கள் பிரபலமானவை.எல்லா ரசிகர்களையும் கவர்ந்த , எல்லோருக்கும் பிடித்த பாடல்கள் ஆகும் . 1995-ம் ஆண்டில் ஹிந்தியில் வெளியான "ரங்கீலா' படம் மூலம் பாலிவுட்டில் ஏராளமான ரசிகர்களை பெற்றார்.
பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக சென்னை, சாலிகிராமம் காவேரி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் சொர்ணலதாவின் உடல் வைக்கப்பட்டுள்ளது. பின்னணி பாடகர்கள் மலேசியா வாசுதேவன், மனோ, இசையமைப்பாளர்கள் எஸ்.ஏ.ராஜ்குமார், பரணி உள்ளிட்ட திரை இசை கலைஞர்கள் சொர்ணலதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். போரூர் மயானத்தில் இன்று காலை இறுதி சடங்குகள் நடைபெறவுள்ளன.
தமிழ் திரை உலக ரசிகர்களுக்கு ஆழ்ந்த அனுதாபம் தரக்கூடிய நிகழ்வுகளாகவே முரளியின் மரணம் அமைந்தது . அதோடு சொர்ணலதாவின் மரணமும் பேரிழப்பாக அமைந்து விட்டது .
சொர்ணலதா பாடிய பாடல்கள் எல்லாம் மனதுக்கு பிடித்த பாடல்கள் ஆகும் . மலைக்கோயில் வாசலிலே பாடலை எப்போது கேட்டாலும் இனிமை தான் . அன்புள்ள மன்னவனே பாடல் ஒரு தனி ரகமான பாடல் . போவோமா ஊர்கோலம் மிகவும் அருமையான பாடல் . எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் ஆகும் . சொர்ணலதாவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் .
இவர் பாடிய பாடல்கள் சூப்பர் பாடல்கள் , ஹிட்ஸ் பாடல்கள் இவை :
ஆட்டமா தேரோட்டமா (கேப்டன் பிரபாகரன்), போவோமா ஊர்கோலம் (சின்ன தம்பி), மாசி மாசம் ஆளான பொண்ணு (தர்மதுரை), அடி ராக்கம்ம கையத் தட்டு (தளபதி), அந்தியில வானம் (சின்னவர்), உசிலம்பட்டி பெண்குட்டி (ஜென்டில் மேன்),
மலைக்கோயில் வாசலிலே... (வீரா), மாடத்திலே கன்னி மாடத்திலே (வீரா), என்னுள்ளே.. என்னுள்ளே (வள்ளி), உளுந்து விதைக்கையிலே... (முதல்வன்), எவனோ ஒருவன் வாசிக்கிறான் (அலைபாயுதே), முக்காலா முக்காபுலா (காதலன்), பூங்காற்றிலே உன் சுவாசத்தில்... (உயிரே), அக்கடா நாங்க (இந்தியன்),
அன்புள்ள மன்னவனே (மேட்டுக்குடி), குச்சி குச்சி ராக்கம்மா (பம்பாய்), மெல்லிசையே... (மிஸ்டர் ரோமியோ), கட்ட கட்ட நாட்டு கட்ட (ஜெமினி), நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா (உடன்பிறப்பு), ஒரு பொய்யாவது சொல் கண்ணே (ஜோடி), அஞ்சாதே ஜீவா (ஜோடி), காதலெனும் தேர்வெழுதி... (காதலர் தினம்), முத்தே முத்தம்மா... (உல்லாசம்), மெட்ராஸ சுத்தி பார்க்க போறேன் (மே மாசம்),
மலைக்கோயில் வாசலிலே... (வீரா), மாடத்திலே கன்னி மாடத்திலே (வீரா), என்னுள்ளே.. என்னுள்ளே (வள்ளி), உளுந்து விதைக்கையிலே... (முதல்வன்), எவனோ ஒருவன் வாசிக்கிறான் (அலைபாயுதே), முக்காலா முக்காபுலா (காதலன்), பூங்காற்றிலே உன் சுவாசத்தில்... (உயிரே), அக்கடா நாங்க (இந்தியன்),
அன்புள்ள மன்னவனே (மேட்டுக்குடி), குச்சி குச்சி ராக்கம்மா (பம்பாய்), மெல்லிசையே... (மிஸ்டர் ரோமியோ), கட்ட கட்ட நாட்டு கட்ட (ஜெமினி), நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா (உடன்பிறப்பு), ஒரு பொய்யாவது சொல் கண்ணே (ஜோடி), அஞ்சாதே ஜீவா (ஜோடி), காதலெனும் தேர்வெழுதி... (காதலர் தினம்), முத்தே முத்தம்மா... (உல்லாசம்), மெட்ராஸ சுத்தி பார்க்க போறேன் (மே மாசம்),
10 comments:
Sornalatha athma santhi adaiya iraivanai pirarththikkirean.
sirantha paadaki sornalatha.
suba
நல்ல குரல் வளமிக்க பாடகியை இழந்து விட்டோம்.
ஸ்வர்ணலதா அவர்களுக்கு அஞ்சலி
nice post, many thanks
நன்றி குமார்
நன்றி சுபா
ம்ம்ம்ம் அதுதான் . இறைவன் சித்தம்
நன்றி ஸாதிகா
நன்றி சரவணன்
நன்றி ராம்ஜி
Post a Comment