Saturday, September 11, 2010

அஜித்தும் விஜயும்

http://www.ajithfans.com/article-uploads/2009/11/ajith-vijay.jpg
தமிழ் திரை உலகில் ரஜனி, கமலுக்கு பின் பேசப்பட்டவர்கள் அஜித்தும் , விஜயும் . இப்போது அந்த பேச்சையே காணவில்லை . பல நாயகர்கள் வெற்றி படங்களை தந்து கொண்டு இருக்கிறார்கள் . சூர்யா , சிம்பு , தனுஷ் , ரவி , கார்த்தி என்று வெற்றி பட்டியல் நீள்கிறது . எங்கடா அஜித்தையும் , விஜயும் காணம் என்று யோசிக்க தோன்றுகிறது .
http://dttvb.com/wp-content/uploads/2010/08/velayudham-movie-stills-25.jpg
தொடர் தோல்விகளால் தலை நிமிர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் விஜய். இவரின் மார்க்கட்டை எட்டி பிடிக்கும் நிலைக்கு உயர்ந்து விடபோகிறார் சூர்யா . சூர்யா ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பு, திறமை போன்றவற்றை உயர்த்தி கொண்டே செல்கிறார் . தொடர் வெற்றி படங்களையும் கொடுத்து கொண்டு இருக்கிறார் . அஜித்தும் வெற்றி படம் ஒன்றை கொடுக்க வேண்டியகட்டாயத்தில் இருக்கிறார் .
http://www.kerals.com/kerala/wp-content/uploads/2010/06/Ajith.jpg
வெங்கட்  இயக்கும் படத்தில் மும்மரமாக நடித்து வருகிறார் . கார் பந்தயங்களில் கவனம் செலுத்தியதால் சினிமாவை விட்டு கொஞ்ச நாள் விலகி இருந்தார் . இப்போது கூடுதல் கவனம் செலுத்தி படங்களில் நடித்து வருகிறார் .
http://600024.com/files/2010/08/Vijay_NewFilms.jpg
தீபாவளிக்கு வெளிவர இருக்கிறது காவல் காதல் என்ற விஜயின் படம் . அதனை தொடர்ந்து வேலாயுதம் படத்தில் இப்போது நடித்து கொண்டு இருக்கிறார் . பின்பு சீமான் இயக்கத்தில் " பகலவன் " படத்திலும் , சங்கர் இயக்கம் ரீமேக் படம் ஒன்றிலும் நடிக்க இருக்கிறார் . வேறு இயக்குனர்களிடமும் கதை கேட்டு கொண்டு இருக்கிறார் .
http://tamil.way2movies.com/wp-content/uploads/2010/08/Mangatha12.jpg
அஜித் மங்காத்தா படம் முடிந்ததும் விஷ்ணு வரத்தான் இயக்கம்  பில்லா பார்ட் 2 , மதராசப்பட்டினம் , கிரிடம் படங்களை இயக்கிய விஜய் இயக்கம் வணிக பின்னணி கொண்ட கதை அம்சம் கொண்ட ஒரு படத்திலும் நடிப்பதாக உள்ளார் . அதற்க்கு பின்பு பி. வாசு இயக்கும் சந்திரமுகி பார்ட் -2 விலும் நடிக்க உள்ளதாக தகவல்.

பாப்போம் இனி நடித்து வெளி வர இருக்கும் படங்கள் எப்படி இருக்கின்றன என்று . அரைத்த மாவையே அரைக்கிறார்களா, அல்லது புதிய கதைகளை தெரிவு செய்து நடிக்கிறார்களா என்று . இனி வர போகும் படங்கள் வெற்றி பெறுகின்றனவா ? என்று .
http://www.desibioscope.net/wp-content/uploads/2007/04/varalaru.jpg
ஒரே மாதிரியான கதைகளை ரசிகர்கள் எவ்வளவு நாட்களுக்கு தான் பார்க்கிறது . நான்கைந்து படங்களை ஒன்றாக சேர்த்து மசாலாவாக இருக்கும் படங்களையும் எத்தனை நாட்கள் பார்ப்பது . கொஞ்சம் வித்தியாசமான கதைகளை தேர்ந்து எடுத்து நடியுங்கள் . ஹிந்தியில் எவ்வளவு படங்கள் வித்தியாசமாக வருகின்றன . தமிழில் ஒரு மதராசப்படினமாகவோ , ராவணன் ஆகவோ நாடோடிகள் , பருத்தி வீரனாகவோ படங்கள் வரவில்லையா . அப்படியான வித்தியாசமான கதைகளை ரசிகர்கள் விரும்புகிறார்கள் .
http://s.chakpak.com/se_images/68186_-1_564_none/vijay-wallpaper.jpg
பணம் கொடுத்து திரைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் இப்போதெல்லாம் ரொம்ப யோசித்து நல்ல படங்களாக இருந்தால் தான் திரைப்படம் பார்க்க செல்கிறார்கள் . அவர்கள் பார்க்கும் படியாக நல்ல படத்தை எடுங்கள் . சிறியோர் முதல் பெரியோர் வரை பார்க்கும் வண்ணம் இருக்கும் படங்களுக்கு எவ்வளவு சனக்கூட்டம் செல்லும் தெரியுமா ? சனக்கூட்டம் அலை மோதும் .
http://chennaionline.com/film/news/Sep09/Images/Ajith-Vijay01.jpg
பாப்போம் இனி வரப்போகும் படங்களில் தான் அஜித்தும் , விஜயும் வெற்றி கோடி நாட்டுகின்றனரா , தமது இடத்தை தக்க வைத்து கொள்கின்றனரா என்று பொறுத்திருந்து பாப்போம் .

8 comments:

அ.முத்து பிரகாஷ் said...

நீங்க யாரோட fan பவி...?!

Unknown said...

உன்மைதான் பார்ப்போம் வருங்கால படங்களை அதே மாவுதானா ? என்று

'பரிவை' சே.குமார் said...

பார்ப்போம் பவி.
தலயா... தளபதியா...
வெல்லப்போவது யாரு?

நான் தல ... நீங்க?

Pavi said...

தல படமும் பார்ப்பேன் . தளபதி படமும் பார்ப்பேன் .
அப்ப நான் யார் ரசிகை என்று சொல்வது ?
நன்றி நியோ

Pavi said...

பொறுத்திருந்து பாப்போம்
நன்றி மகாதேவன்

Pavi said...

ஐயோ நான் தலயா, பூவா விளையாட்டுக்கு எல்லாம் வரவில்லை.
ஆழ விடுங்கப்பா ...............
நன்றி குமார்

Vijiskitchencreations said...

உண்மதாங்க.இப்ப சூர்யா முன்னில் இருக்கிறார்.

www.vijisvegkitchen.blogspot.com

Pavi said...

ம்ம்ம்ம்ம்ம் . உண்மைதான்
நன்றி விஜி