Saturday, September 11, 2010

என்றும் நினைவுகளுடன் முரளி

முரளி நடித்த படங்களில் இருந்து கவிதை வடித்து உள்ளேன் . நண்பர்களே எப்படி இருக்கிறது . உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன் .http://icdn1.indiaglitz.com/tamil/gallery/Actor/Murali/Murali1.jpg

"பூவிலங்கு" படத்தில்
அறிமுகம் ஆனாய்
பின்பு "பகல் நிலவு "ஆனாய்
"தங்கமணி ரங்கமணி" என்றாய்
"புது வசந்தம்" தந்தாய்
எமக்கு" பாலம்" போட்டாய்
உனக்கென்று ஒரு "வெற்றி மலை"
உருவாக்கி "சிலம்பு"கொண்டு
கீதத்தின் "கீதாஞ்சலி" ஆனாய்
"நானும் இந்த ஊருதான்" என்று
பெருமை தேடி தந்தாய்
"நாங்கள் புதியவர்கள்" அல்ல
என்பதை நிரூபித்தாய்
"சிறையில் சில ராகங்கள்"
இருக்கின்றது என காட்டினாய்
http://www.cinepicks.com/tamil/gallery/enga-rasi-nalla-rasi/murali-ridhima-still-04.jpg
"புதிய காற்று" வீசினாலும்
இது "நம்ம ஊரு பூவாத்தா" என்றாய்
இது எல்லாம் "சாமி போட்ட முடிச்சு"
என்று எம் "இதயம்" திருடினாய்
ஒரு "குறும்புக்காரன்" போலவும் இருந்தாய்
அதோடு "தங்க மனசுக்காரன்"போலவும் இருந்தாய்
எப்பவுமே "சின்ன பசங்க நாங்க" என்றாய்
அதனாலே தங்க மனிதனாக "தங்கராசு"
என்று அழைத்தார்கள்
"என்றும் அன்புடன்" உன் ரசிகர்கள்
கூட்டம் உள்ளது நீ
"தாலி கட்டிய ராசா" வாக நிஜ
வாழ்க்கையில் "மணிக்குயில்"
போலவும் "தங்க கிளி" போலவும்
அல்லவா இருந்தாய்
"மஞ்சு விரட்டு" என்றும் நடித்தாய்
"அதர்மம்" என்றும் படம் நடித்தாய்
"என் ஆசை மச்சான்" ஆக இருக்க
சத்தியத்தின் "சத்யவான்" ஆனாய்
"ஆகாய பூக்கள்" ஆகவும் வானில் வந்தாய்
உங்கள் எல்லோருக்கும்  "தொண்டன்" என்று
"‌பொம்மை" ஆகவும் ஆனாய்
"காலமெல்லாம் காதல் வாழ்க" என்று
உரக்க சொன்னாய் எப்போதுமே
காலம் "பொற்காலம்" போன்றது .
"ரோஜா மலரே" நியாஜமா
காதலர்களுக்கு "காதலே நிம்மதி"
என்றும் சொல்லி கொடுத்தாய்
"தினந்தோறும்"
தாலாட்டிலும் உண்டு "வீர தாலாட்டு"
என்று "ரத்னா" வாகவும்
"பூந்தோட்டம்" அமைத்த
"என் ஆசை ராசாவே"
உன்னுடன் எப்போதுமே
தேசத்தின் கீதம் "தேசிய கீதம்"
பாட "பூவாசம்" கொண்டு
"கனவே கலையாதே" என்று
"ஊட்டி" சென்றாய்
"இரணியன்" பெயரையும் உச்சரித்தாய்
"வெற்றி ‌கொடி கட்டு" நாட்டினாய்
"மனு நீதி" சொன்னாய்
"கண்ணுக்கு கண்ணாக" இருந்து
காதல் "சொன்னால்தான் காதலா"
என்று "ஆனந்தம்" அடைந்து
"சமுத்திரம்" நீந்தி
"நினைவு சின்னம்" ஆக
"அள்ளித்தந்த வானம்" போல
"கடல் பூக்கள்" தூவினாய்
"சுந்தரா டிராவல்ஸ்" உம் நடத்தி பார்த்தாய்
"காமராசு" ஆகி
இதெல்லாம் "நம்ம வீட்டு கல்யாணம்"
"காதலுடன்" நாம் என்றும்
"பூமணி" ஆகி எல்லோருக்கும்
"பாசக்கிளிகள்" போலானாய்
"எங்க ராசி நல்ல ராசி" எப்போதும் என்று
"நீ உன்னை அறிந்தால்" தெரியும் என்று
எம்மை எல்லாம் விட்டு "பானா காத்தாடி"
போல் பறந்து சென்று விட்டாயே முரளி .
 

6 comments:

வெறும்பய said...

பெயர்களை கோர்த்து கவிதையாக வடித்த விதம் அருமையாக இருக்கிறது சகோதரி...

முரளி என்ற நடிகன் மறைந்தாலும்... அவரது படைப்புகள் அனைத்தும் அவர் பெயர் சொல்லும்...

Pavi said...

உண்மைதான் நண்பரே
அவரின் படங்கள் எப்போதும் எம்மை அவரை யாபகப்படுத்தும் அது நிச்சயம்
நன்றி வெறும்பய

ரஹீம் கஸாலி said...

மன்னுக்குள் வைரம் படத்தை விட்டுவிட்டீரே.....

Pavi said...

மறந்து விட்டேன் ரஹீம்
நன்றி

r.v.saravanan said...

பெயர்களை கோர்த்து கவிதையா வடித்த
விதம் அருமை

Pavi said...

நன்றி சரவணன்