தனது சிலம்பாட்டம் படத்தில் பில்லா அஜித் போல கெட்டப்பில் வந்து அசத்தினார் . தனது படங்களில் அஜித்த்தை புகழ்ந்து வசனங்கள் வைத்திருப்பார் . தான் அஜித்தின் தீவிர ரசிகன் என்பதை நீருபித்தும் இருக்கிறார் சிம்பு .
அஜீத் நடிக்கும் மங்காத்தா படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க ஆசைப்பட்டார் சிம்பு. இதுகுறித்து தனது தோஸ்த்தும் பட இயக்குநருமான வெங்கட் பிரபுவிடம் கேட்க அவரோ அஜீத்திடமே கேட்டுக்கோ என்றாராம். தல என்ன சொல்வாரோ என்று நினைத்து கொண்டு நேரடியாக 'தல'யிடமே பேச, 'தல' பார்க்கலாம் என்று மட்டும் சொல்லி அனுப்பி வைத்தாராம். ஆனால் அடுத்த நாள் காலையில் போனில் கூப்பிட்டு நடி தம்பி என்று கூறி விட்டாராம். இதனால் சிம்பு செம உற்சாகமாகியுள்ளார்.
இதனால் மங்காத்தா படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் வாய்ப்பு சிம்புக்கு கிடைத்து இருக்கிறது . பாப்போம் அஜித்தும் , சிம்புவும் இணைந்து நடித்து படம் எப்படி இருக்கிறது என்று .
4 comments:
:))
ஹே! தலையும் குட்டி தலையுமா!!! சூப்பர்!!!
நன்றி உங்கள் வரவுக்கு கார்த்தி
நன்றி சிவராம்குமார்
Post a Comment