Thursday, September 30, 2010

சிம்புவின் அடுத்த படம் "வானம் "

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKUvMK4g0A0AsOL9v7_l_kPVf12hdhheIg_abIMgMZjqR5Ew_pvScPziPwsEfzkQyLatGqm_oQb6ZnL4LAy9HvFtALscQ0XiS9Nt0PRitR0xwRyfArUHaWOKUsAitraAudOBQWRF7aRfzj/s1600/simbu_vaanam_movie_posters_wallpapers_02.jpg
தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற வேதம் படத்தின் தமிழ் ரீமேக் தான் "வானம் "என்று உருவாகிறது . கிரீஸ் இயக்குகிறார் .சிம்புவுக்கு பிடித்த நடிகையான அனுஷ்கா நடிக்கிறார் .முழுக்க முழுக்க ஒரு பொழுது போக்கான படமாக உருவாகி வருகிறது இந்த படம் .

ஒரே மாதிரியான படங்களில் இருந்து மாறுபட்டு சிம்பு  மேனனின் இயக்கத்தில் நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படம் அமோக வெற்றி ஈட்டியது நாம் எல்லோரும் அறிந்ததே . சிம்பு வித்தியாசமான நடிப்பில் நடித்து விரல் வித்தைகள் எல்லாம் காட்டாமல் இயல்பாக நடித்து இருந்தார் . அது போல இன்னொரு வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம் தான் வானம் .
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1Qlj3YkblCTJ0FH4l4tuVUh3_LZmTEHb2JWsiaxb3FaoqdGWK-GqSoSewSa4WA2h-qbdWlbEOI4qOowwI52t9qq8GeMeEGCh33IYHGYqHc0ZT-SciTAa2BrJXnYb8b5oHbltwBtXGjd8/s1600/vaanam_simbu_stills_photos_images.jpg
வானம் படத்தில் சிம்பு , பரத், அனுஷ்கா, வேகா, சோனியா அகர்வால் போன்ற நட்ச்சத்திர கூட்டமே இதில் நடிக்கிறார்கள் . இசை யுவன் , இயக்குனர்  கிரிஷ். படம் தீபாவளிக்கு வெளிவர இருக்கிறது . இந்த திரைப்படம் பற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சிம்பு கூறியதாவது :
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiws5nbLijHQcOvFxhRJ6JwiTU_jZRbTik0nACnMam0Y034Gjf19vZFEAbeUYGuqURkC197KllHPhy_-sOf1Hsnx-B8oL5m2j3OpeZUEI1HCgBu63mWULfxpwhxM9aRa6umL3q_LaNILwI/s320/Sne+Ullala,Simbu+in+Vaanam.jpg
முன்பு நான் ஜோதிகாவின் ரசிகனாக இருந்தேன். இப்போது அனுஷ்காவின் ரசிகனாகிவிட்டேன் என்று கூறிய சிம்பு விண்ணைத்தாண்டி வருவாயா படம் வெளிவந்த பிறகு, 150 நாட்கள் வேறு எந்த படத்திலும் நடிக்காமல், சும்மா உட்கார்ந்திருந்தேன். நடுவில் நான் ஒப்புக் கொண்ட 'கோ,' பட விவகாரம் உங்களுக்கே தெரியும். 'போடா போடி' படப்பிடிப்பும் தள்ளிப்போய் விட்டது. அப்போதுதான் அல்லு அர்ஜுன் நடித்த 'வேதம்' என்ற  படத்தை பார்த்தேன். வித்தியாசமான படம். மிக அருமையான திரைக்கதை. பாதி படம் பார்த்தபோதே இந்த படத்தை தமிழில் நாம் பண்ணலாம் என்ற முடிவுக்கு வந்தேன். என் நண்பர் கணேஷ், இந்த படத்தை தயாரிக்க முன்வந்தார் என்று கூறினார் .
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUa5v1RdL8SOzoxxEsBwzYSM97VwOE39RuoTFYX-jpKC-70FvkNg8diTZSwRDjcGdeU9BOxTQcwZHOKd46ueEWiQcOAmhbMVIc81BSmhp_m8p7gisvO5Kju_ADIYr1YaJRdi5e1qrtfgWN/s1600/Simbu_Vaanam_movie_stills.jpg
ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த படம் ஈடுகட்டும். 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் வேறு ஒரு சிலம்பரசனை பார்த்தது போல், 'வானம்' படத்தில் இன்னொரு சிலம்பரசனை பார்க்கலாம்...'' என்றார். இந்த திரைப்படத்தில் சிம்பு கேபிள் டிவி கனக்ஷன் கொடுக்கும் பையன் வேடத்தில் நடிக்கிறார் .

பொறுத்திருந்து பாப்போம் இந்த படம் எப்படி வருகிறது என்று ? சிம்புவின் நடிப்பு எப்படி உள்ளது என்று .......






 


















2 comments:

'பரிவை' சே.குமார் said...

வானம் வெளிக்காமல் இருக்கட்டும்.
சினிமா பகிர்வுகள் அதிகம் வருகின்றனவே பவி. சினிமா மோகமா?

Pavi said...

இருக்கலாம்
நன்றி குமார்