பெண்ணே எழுந்து நில்
நீ பொறுத்தது போதும்
வீட்டு அடுப்படியில்
கிடந்த காலம்
எல்லாம் மலை
ஏறிவிட்டது பெண்ணே
சமுதாயத்தை பார்.
வெளியில் வா
வெளி உலகை பார்.
நீ பார்க்க வேண்டிய
செய்ய வேண்டிய
கடமைகள் நிறைய
உண்டு பெண்ணே.
அனாதைகளை பார்
விசமிகளை பார்
பிச்சைகாரர்களை பார்
நொந்து நூலாய்
போனவர்களை பார்
தாடி வைத்து திரியும்
நண்பர்களை பார்
உன் போன்ற பெண்களால்
ஏமாத்த பட்டவர்கள்
என்பதை மறவாதே ..
பெண்ணே இந்த உலகில்
நல்லவர்களும் இருக்கிறார்கள்
கெட்டவர்களும் இருக்கிறார்கள்
பார்பதற்கு எல்லோரும்
நல்லவர்களாக தெரிவார்கள்
பெண்ணே கவனமாக
இந்த உலகில் வாழவேண்டும் .
ஆண்களால் பெண்கள்
ஏமாத்தபடுவதும் உண்டு
பெண்களால் ஆண்கள்
ஏமாத்தபடுவதும் உண்டு
இந்த உலகில் பெண்ணே
அதை நீ மறவாதே .....
பெண்ணே இந்த
உலகத்தில் பல
கோடி பேர்
பிறக்கிறார்கள் ....
எல்லோரும் நல்ல
பிள்ளைகளாக
இருப்பதில்லை .
அவர்கள் வாழும்
பழகும் , வளர்க்கப்படும்
விதங்களில் வேறுபடுகிறார்கள் .
பெண்ணே நீ
இந்த நாட்டுக்கு ,
உலகுக்கு செய்ய
வேண்டிய கடமைகள்
நிறைய இருக்கின்றன.
பல பெண்கள்
சமுதாயத்துக்கு வெளியில்
வந்தாலும் எல்லோரும்
நல்ல பெண்மணிகளாக
ஜொலிப்பதில்லை ........
பல பெண்கள் மூலைகளில்
கிடப்பதை விட்டு வெளியில்
வாருங்கள் .......
வெளி நடப்புகளை
பாருங்கள் .........................
உங்கள் சேவை
நாட்டின் தேவை .
உலகின் தேவை
என்பதை மறவாதீர்கள்............ .
3 comments:
வாங்க வாக்கு அளியுங்கோ
உங்க கருத்துகளை போடுங்கோ
கவிதை நல்லாயிருக்கு ஒரு சின்ன சந்தேகம் ஏன் கவிஞர்கள் எல்லோரும் பெண்களைப் பற்றியே கவிதை எழுதுகிறீர்கள் ஆண்களைப் பற்றியும் எழுதுங்கோ.
பவி... உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன். வாருங்கள் வந்து எழுதுங்கள்
http://kiruthikan.blogspot.com/2009/09/blog-post_12.html
Post a Comment