கண்ணில் வந்ததும் நீதான்...
கண்ணீர் தந்ததும் நீதான்... கண்மணி....
கண்ணில் வந்ததும் நீதான்...
கண்ணீர் தந்ததும் நீதான்... கண்மணி....
காதல் சொன்னதும் நீதான்...
காயம் தந்ததும் நீதான்... கண்மணி....
நினைவைத் தந்ததும் நீதான்...
இன்று நெருப்பைத் தந்ததும் நீதான்... கண்மணி....
உன்னைப் பிரிந்து போகையிலே..
உள்ளம் எரிந்து போகுதடி..
உயிரே.... உயிரே....
கண்ணில் வந்ததும்...
உன்னுடைய.. கால்கொலுசு எங்க வீட்டில் கேட்டிடுமா
உன்னுடைய.. புன் சிரிப்பு என் உதட்டில் பூத்திடுமா
உன்னுடைய கைவிரலை என் விரல்கள் பிடித்திடுமா
உன்னுடைய இதயத்திலே என் துடிப்பு ஒலித்திடுமா
உயிரே... உயிரே... உனக்காய் வாழ்கிறேன்....
ஓ... உன்னுடைய பூ முகத்தை பாத்துக்கொண்டே நான் இருப்பேன்
உன்னுடைய ஞாபகத்தை விட்டுவிட்டால் நான் இறப்பேன்
உன்னுடைய நினைவுகைள உள்ளுக்குள்ளே தேக்கி வைத்தேன்
என்னிடத்தில் எதுவுமில்லை உயிர்மட்டும் பாக்கிவைத்தேன்
உயிரே... உயிரே... உனக்காய் வாழ்கிறேன்....
கண்ணில் வந்ததும்...
No comments:
Post a Comment