Wednesday, December 28, 2011

தமிழ் சினிமாவின் வசூல் நாயகர்கள்


http://www.extramirchi.com/wp-content/uploads/2007/10/rajini2.jpg
தமிழ் படங்களின் வெற்றி , சாதனைகள், வசூல் என பலதரப்பட சாதனைகள் இருக்கின்றன  . அதில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் , வசூலில் நாயகனாகவும் முன்னணியில் எப்போதும் இருப்பவர் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி தான் . வசூல் சக்கரவர்த்தி . 

சென்னை ஃபாக்ஸ் ஆபீஸின் வசூல் சக்கரவர்த்திகள் என்றால் முதலில் இடம்பெறுபவர் ரஜினி தான் . படமும் வெற்றி பெறும் . வசூலும் ஆகும் . தயாரிப்பாளர்கள் , இயக்குனர்கள் என எல்லோரும் சந்தோசப்ப்படும்படியாக வசூல் இருக்கும் . அடுத்து நம்ம உலக நாயகன் கமல் . அதுக்கு அடுத்தது வசூல் சக்கரவர்த்திகளாக விஜய், அஜித் என்று போகும் .
http://movies.bizhat.com/actors/img/kamal_hassan_8.jpg
ஆனால் சூர்யாவின் அபரிதமான வளர்ச்சியால் விஜய் , அஜித் எல்லோரையும் குறஸ் பண்ணி விட்டார் சூர்யா . சிங்கம் வெற்றிக்குப் பிறகு ஏழாம் அறிவு படத்தில் நடித்த சூர்யா தசாவதாரம் , எந்திரன் போன்ற படங்களின் வசூலை மாற்றி விட்டதாம் என்றால் பாருங்கள் . இதனால் ரஜினி , கமல் அடுத்தது சூர்யா என்று வசூல்சக்கரவர்த்தியாகி இருக்கிறார் . விஜய் அடுத்தது தான் .
http://www.onlysurya.com/wp-content/uploads/2010/03/about-surya-profile.jpg
சூர்யாவின் கடின உழைப்பும் , சிறப்பான நடிப்பும் , வித்தியாசமான கதையம்சமுள்ள , விதம்விதமான கதாபாத்திரங்களை தெரிவு செய்து நடிப்பது , உரிய கால நேரத்துக்குள் படத்தை முடித்துக் கொடுப்பது என்று சூர்யாவை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம் . ஒரு காலத்தில் சூர்யாவா என்றவர்கள் இப்போது விழி பிதுங்கி நிக்கிறார்கள் . சூர்யாவின் அபரிதமான வளர்ச்சியை பார்த்து . இப்போது விஜயை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகரும் சூர்யா தான் .
http://www.behindwoods.com/tamil-movies-slide-shows/movie-4/vijay-ajith/images/vijay-ajith-5.jpg
மங்காத்தாவும் அஜித்தின் படங்களில் அதிக வசூல் ஆன படங்களில் ஒன்றாக மாறி இருக்கிறது . இதனால் பில்லா - 2 படத்துக்கும் வியாபாரம் சூடு பிடித்து இருக்கிறது .சூர்யாவின் மாற்றான் படத்துக்கு இன்னும் வியாபாரம் எகிறுமா ? பொறுத்திருந்து பார்ப்போம் . அடுத்த ஆண்டு கள நிலவரங்கள் எப்படி அமைகிறது என்று . 





No comments: