Thursday, January 8, 2015

என்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......




நாம் ஒருவருடன் சந்திப்பு ஒன்றை மேற்கொள்ளும் போது அவருடன் வணக்கம் என்று சொல்லி ஒருவருக்கு ஒருவர் கைலாகு கொடுத்து கொள்கின்றோம் . அதோடு நமது முகத்தில் இருந்து புன்சிரிப்பு ஒன்றை கொடுக்கும் போது அந்த சந்திப்பு ஒரு சந்தோசமான சந்திப்பாக அமைகிறது .

எப்போதும் நமது முகத்தை கோபக்காரர் போலே வைத்து இருக்காமல் சந்தோசமாக வைத்து இருக்க வேண்டும் . எந்த நேரமும் புன்னகை செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனால் , தேவையான நேரங்களில், சந்தர்ப்பங்களில் உங்களது புன்னகையை தவள விடுங்கள் . அப்போது தான் உங்களுக்கு அந்த புன்னகையின் மதிப்பு தெரியும் .

நாம் புன்னகை சிந்துவதால் எப்போதும் நமது மனதில் ஒரு தைரியம் ஏற்படுகிறது . நமக்கு எதிரிகளை விட நண்பர் கூட்டம் அதிகம் இருக்கும். அன்பாலே சேர்ந்த கூட்டமாக இருக்கும். எல்லோருடனும் சந்தோசமாக நாம் இருக்கும் போது நாமும் சந்தோசமாகவும், மற்றவர்களும் சந்தோசமாகவும் இருப்பார்கள் . அது எல்லோராலும் முடியாது . சிலரால் மட்டுமே முடியும்.


நாம் சந்தோசமாக இருக்கும் போது நமது இதயத்துடிப்பு சீராகிறது . மனதில் எமக்கு அழுத்தங்கள் குறைகின்றது . ஒரு நம்பிக்கை உண்டாகிறது . தன்னபிக்கை எமக்கு ஏற்படுகிறது . நாம் சந்தோசமாக இருக்கும் போது எமது முகமும் இளமை தோற்றத்துடன் காணப்படுகிறது . எமது உடலுக்கும் ஒரு ரிலாக்ஸ் கிடைக்கிறது . அது மட்டுமா சந்தோசமாக புன்னகை சிந்துபவர்களுக்கு ஆயுள் காலமும் அதிகம். இவ்வளவு இருக்கிறது நாம் எமது முகத்தில் புன்னகை சிந்துவதால் .

எப்போதும் சந்தோசமாக இருப்போம் . புன்னகை சிந்துவோம் .



3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

புன்னகை சிறந்த மருந்து...

'பரிவை' சே.குமார் said...

புன்னகையால் வாழ்க்கை வசமாகும்...

'பரிவை' சே.குமார் said...

தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.