Thursday, June 30, 2011

பேருந்துகளில் பயணிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள்



எல்லோரிடமும் சொந்த வாகனங்கள் இருப்பதில்லை . எல்லோரும் வசதி படைத்தோரும் இல்லை . கார் , வான் வைத்திருக்கும் வசதி படைத்தவர்களுக்கு பிரச்சனை இல்லை . அன்றாடம் போக்குவரத்துக்கு பேருந்துகளை நம்பி இருக்கும் எவ்வளவோ பயணிகள் இருக்கின்றனர் . அவர்கள் பல இன்னல்களை எதிர் நோக்குகின்றனர் .

 கிழங்கு அடுக்குவது போல் பயணிகளை ஏற்றுவார்கள் . அதில் வேலைக்கு போகும் பயணிகள் , பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் , பிற வகுப்புகளுக்கு செல்லும் மாணவர்கள் என பலதரப்பட்டவர்கள் பஸ்ஸில் பயணம் செய்வார்கள் . எல்லோரும் நெறிபட வேண்டியது தான் .

சிலர் பஸ்ஸுக்குள் சில்மிஷம் செய்வார்கள் . இதுக்குன்றே ஒரு கூட்டம் இருக்கிறார்கள் . பெண்களுக்கு அருகில் வருவது , அவர்களை நக்கல் , நையாண்டி செய்வது என்று எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம் .
http://images.travelpod.com/users/maaske/1.1233966660.bus-crowd.jpg
போட்டி போட்டுக் கொண்டு பேருந்தை வேகமாக ஓட்டுவார்கள் . பயணிகளை பற்றி கவலைப்படுவதே இல்லை . விபத்துகளும் ஏற்படுகிறது .

பஸ்சுக்கு பணம் கொடுத்தால் சிலர் மிகுதிப்பணம் தரமாட்டார்கள் .

இப்படி பல இன்னல்களுக்கு மத்தியில் தான் பயணிகள் பிரயாணம் செய்ய வேண்டிய நிலைமை இருக்கிறது .




No comments: