நம்மவர்கள் சாப்பாட்டில் ஒரு பிடி பிடிப்பது வழக்கம் . அதுவும் இப்போது சிலர் மேற்கத்தைய உணவுகளை விட கிராமங்களில் செய்து மண் சட்டியில் சமைக்கும் உணவுகளுக்கு ஆசைப்படுகிறார்கள் .
இயற்கையான உணவுகள் , சத்தான உணவுகள் என அவற்றை விரும்புகின்றனர். இன்றைய நாகரிக உலகில் எதையோ சாப்பிட்டு வயிற்றை நிரப்பினால் சரி என்று தான் நினைக்கிறோம் . அதில் சத்து உள்ளதா , எமக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளா என்று நாம் சிந்திப்பதில்லை .
இது நாம் எல்லோரும் தான் . துரித உணவுகள் தான் அதிகம் உன்னுகின்றோம் . நமது கைப்பட மினக்கட்டு ஒரு உணவை தயாரித்து சாப்பிட நேரமில்லை , அலுப்பு , சோம்பல் தனம் வேறு . சரி நான் சொல்ல வந்த விடயத்துக்கு வருவோம் .
பலர் புட்டும் , மீன் பொரியலும் சாப்பிட ஆசைப்படுகின்றனர். மீன் போரியல் மணத்துடன் புட்டை சுவைத்து சாப்பிடுகின்றனர் . கிராமப்புறங்களில் எல்லாம் மீனை உடனே பிடித்து கழுவி உடனே பொரித்து சாப்பிடுவார்கள் . ருசியாத்தான் இருக்கும் . ம்ம்ம்ம் எல்லோருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்குமா என்ன ?
நாம் எல்லாம் மீனை வாங்கி ஒரு கிழமைக்கு மேல் குளிர்சாதனப்பெட்டியில் வைத்து எடுத்து சமைக்கின்றோம் . அதில் ருசி இருக்குமா ? ஏதோ போகிறது வாழ்க்கை .
8 comments:
வாய் ஊருது, வெறும் புட்டும் பொரிச்ச மீனும் மட்டுமே செமையா சாப்பிடலா, புட்டு அடைக்க அடைக்க தண்ணி குடிச்சு குடிச்சு சாப்பிடுற சுகமே தனி,.......
புட்டும் மீன் பொரியலும் ஏக்கம் தரும் அருமையான உணவு.
புட்டு அருமையான உணவு.
புட்டும் மீன் பொரியலும் -அருமையான உணவு.
நன்றி ஸ்ரீ
நன்றி வருண்
நன்றி சரவணன்
நன்றி குமார்
Post a Comment