Monday, October 17, 2011

தீபாவளிக்கு என்ன படம் பார்ப்போம்

http://www.suryafansclub.com/wp-content/uploads/2009/06/surya-stills-01.jpghttp://www.vijayfansclub.com/wp-content/uploads/2011/07/vijay-still-photos-600x397.jpg
தீபாவளி நெருங்கி கொண்டு இருக்கிறது . எந்த படங்கள் வரும் . எந்த படங்களை பார்க்கலாம் என்று ஜோசித்துக் கொண்டு இருக்கிறோம் . அதே போல் போட்டியில் எந்த படம் ஜெயிக்கும் என்றும் நினைக்கின்றோம் .

7aam Arivu
மிகவும் எதிர்பார்ப்போடு களத்தில் குதிக்க இருக்கின்றன சூர்யாவின் ஏழாம் அறிவு படமும் , விஜயின் வேலாயுதம் படமும் . முருகதாஸ் இயக்கும் ஏழாம் அறிவு படம் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது . ஏற்கனவே கஜினி என்ற வெற்றிப் படத்தை கொடுத்த கூட்டணி . இப்போது அதிக தியேட்டர்களை தன்பக்கம் கொண்டுள்ளது இந்த படம். சூர்யாவின் வித்தியாசமான நடிப்பு , அண்மைக்காலமாக ரசிகர்களுக்கு வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் நடிகர் , ரசிகர்களின் எதிர்பார்ப்பை , ஆவலை பூர்த்தி செய்யக் கூடிய நடிகர் . தன்னை வருத்தி படத்துக்காக மினக்கட்டு சிறந்த படங்களை ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று துடிப்பவர் . 

Velayudham
ஜெயம் ராஜா இயக்கும் படம் வேலாயுதம் . ரீமேக் படங்களை இயக்கி வெற்றி கண்டவர் . இப்போது விஜய் கூட்டணியில் என்ன நடக்கின்றது என்று பார்ப்போம் ? தொடர் தோல்விகளை கொடுத்து வந்த விஜய்க்கு காவலன் படம் கைகொடுத்தது . எனினும் தனது இடத்தை தக்க வைத்துக்கொள்ள வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது விஜய்க்கு . 

தொடர்ந்து மசாலா படங்களை தந்து கொண்டிருக்கும் விஜய் இந்த படத்தில் சென்டிமென்ட் கதையில் இறங்கி உள்ளார் . ஜெனிலியா - ஹன்ஸிகா என இரு நாயகிகள், விஜய் ஆன்டனி இசை அமைத்துள்ளார் . ஆக்சன், நடனம் , சென்டிமென்ட் எல்லாம் ஒருங்கே இருக்கும் என்று நம்பலாம் . 
http://www.mahiram.com/wp-content/uploads/2011/03/RA.One-sold-out.jpg
தனுசின் மயக்கம் என்ன படமும் , சிம்புவின் ஒஸ்தி படமும் இந்த லிஸ்டில் இருந்து வெளியேறி விட்டன . போட்டி போட கஷ்டம் ஒருபக்கம் இருந்தாலும் தியேட்டர்கள் பற்றாக்குறையும் இன்னொரு காரணம் . இவை எல்லாவற்றையும் விட ரா ஒன் படமும் மிகவும் எதிர்பார்ப்போடு களமிறங்குகிறது இந்த தீபாவளிக்கு . சென்னையில் பல தியேட்டர்களில் வெளியாகிறது . ரஜினி இந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக தகவல் அடிபடுகிறது . கட்டாயம் ரஜினி ரசிகர்கள் எல்லோரும் போய் பார்ப்பார்கள் . அப்படி பார்த்தாலே படம் வெற்றி பெற்றுவிடும் .

பொறுத்திருந்து பார்ப்போம் . படங்களின் நிலவரம் என்ன ? எந்த படம் வெற்றிகரமாக ஓடப்போகிறது ? வசூலில் சாதனை படைக்கப் போகிறது எது என்று ? இன்னும் கொஞ்ச நாளைக்கு பொறுத்து இருப்போம் ?





7 comments:

r.v.saravanan said...

my choice ra one,yelam arivu

'பரிவை' சே.குமார் said...

ஏழாம் அறிவுதான் வெற்றிக்கொடி நாட்டும் என்பதில் சந்தேகம் இல்லை...
மயக்கம் என்ன, ஒஸ்தி இரண்டும் போட்டி போட பயப்பட வேண்டியதில்லை... தியேட்டர் பிரச்சினைதான் காரணம் என்று நினைக்கிறேன்.
விஜய் இதில் 35 மார்க் எடுத்தாவது பாஸ் பண்ண வேண்டிய கட்டாய நிலை... பார்க்கலாம்.

Anonymous said...

my choice vijay

BC said...

எந்த படத்தை தீபாவளிக்கு பார்க்கலாம் என்று நீங்கள்கள் எல்லாம் யோசித்து கொண்டிருக்கிறீர்கள் இங்கெல்லாம் தெரிவு இல்லாமல் ஒரு படத்தை மட்டுமே பார்க்க கூடியதாக இருக்கும்.

Pavi said...

நன்றி சரவணன்

Pavi said...

ம்ம்ம்ம் பார்ப்போம் . நன்றி குமார்

Pavi said...

நன்றி வருண் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்