Tuesday, October 18, 2011

ஜோதிகாவின் பிறந்தநாள் இன்று

http://4.bp.blogspot.com/_b8GEWBCzJHY/ScEOc-Epr9I/AAAAAAAAATE/HHm7kk50JDE/s400/jothika.jpg
ஜோ ஜோ என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகை ஜோதிகாவின் பிறந்த தினம் இன்றாகும் . 1978 ஆம் ஆண்டு பிறந்த ஜோதிகா இன்று தனது 33 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார் . வாலி படம் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார் ஜோ .
http://1.bp.blogspot.com/_xFP6s39OUYY/SnqhVRDPr3I/AAAAAAAAORQ/5Z20rc7twy0/s400/Filmfare-Awards-Stills-014.jpg
பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார் . இயல்பான நடிப்பு , நடனம் என அசத்தும் ஜோ காக்க காக்க படத்தில் அமர்க்களமாக நடித்திருந்தார் . எனக்கு ஜோ நடித்த படங்களில் அஜித்துடனும், சூர்யாவோடும் அவர் இணைந்து நடித்த படங்கள் எனக்கு பிடிக்கும் .
http://www.tamil-movie.net/UploadedImages/Actress/big/1/Jothika-8.jpg
மொழி படம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த படம் . அதில் ஜோவின் அபரிதமான நடிப்பை பார்த்து மகிழ்ந்தோம் . சிநேகிதியே ஜாலியான் படம் . குறும்பாக நடிக்கும் ஜோ ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தவர் . பூவெல்லாம் உன்வாசம் படம் ஒரு குடும்பபாங்கான படம் . 
http://www.extramirchi.com/wp-content/uploads/2009/09/Surya-Jyothikas-Daughter-Diya-gallery.jpg
நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்த ஜோ ஒரு குடும்பபாங்கான சூர்யாவுக்கு அன்பான மனைவியாக , தியா , தேவ் என்ற இரண்டு குழந்தைகளுக்கும் ஒரு அன்பான தாயாக இருக்கிறார் . கல்யாணம் செய்தவுடன் நடிப்பை நிறுத்தி விட்டார் . 
http://www.a2zpictures.com/wp-content/uploads/2011/06/actor-surya-jyothika-family-unseen-photos.jpg
சூர்யா இப்போது முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்கிறார் . ஜோவை கல்யாணம் செய்ததில் இருந்து அவரின் வெற்றிபயணம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது . ராசியான மனைவி தான் . இந்த தீபாவளிக்கு ஏழாம் அறிவு படம் திரைக்கு வர இருக்கிறது . 
http://1.bp.blogspot.com/_ZHT0SAGRjOg/Soezljc10SI/AAAAAAAAANA/CYiK_KwekCU/s400/JYOTHIKA+(1).jpg
நடிகை ஜோதிகாவுக்கு ரசிகர்கள் எல்லோரினதும் சார்பாக எமது பிறந்தநாள் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .

4 comments:

'பரிவை' சே.குமார் said...

vaazhththukkal.

Unknown said...

ஜோவிற்கு வழ்த்துக்கள்.
ஜோ படங்களை வெளிட்ட உங்களுக்கு ஒரு வாழ்த்துக்கள்

Pavi said...

நன்றி குமார்

Pavi said...

நன்றி செல்வன்