Friday, October 14, 2011

புகைத்தல் உடல் நலத்துக்கு கேடு

http://www.graphics16.com/g/smoking/smoking_028.jpg
புகைத்தல் உடல் நலத்துக்கு கேடு என்று நம் எல்லோருக்கும் தெரியும் . அப்படி தெரிந்தும் புகைப்பிடிப்பவர்களை நாம் என்னவென்று சொல்வது .புகை எமக்கு பகை என்றாலும் விடுகிறார்களா ? புகை பிடிப்பதால் பல நோய்கள் வருகின்றன . சுவாசக் குழாயில் பிரச்சனைகள் எல்லாம் வருகின்றது .
http://www.nlm.nih.gov/medlineplus/ency/images/ency/fullsize/9939.jpg
எனினும் இப்போது புகைப்பிடிப்பதால் புத்திக்கூர்மை பாதிக்கும் என்று ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது . அதிக இளைஞர்கள் புகைப்பிடிக்கிறார்கள் . நாம் நீண்டகாலம் வாழ ஆசைப்படுகிறோம் என்றால் இந்த புகைப்பிடிப்பதை நிறுத்த வேண்டும் . எமது ஆயுளை குறைக்கிறது , புற்றுநோய் ஏற்படுகிறது . 
http://effectsofcigarettesmoking.com/images/effects_cigarette_smoking1.jpg
நாளுக்கு நாள் புகைப்பிடிப்பவர்கள் அதிகரித்துக் கொண்டே போகிறார்கள் என்பது கவலைக்குரிய விடயம் . சிலர் புகைப்பிடிப்பதை ஒரு சாதனையாகவும் , நாகரிகமாகவும் நினைக்கிறார்கள் . இது தவறு . நம்மையே நாமே அளிக்கின்றோம் . நமக்கு நாமே குழி தோண்டுகிறோம். மன அழுத்தத்தை அதிகரித்து மனநலப் பாதிப்புக்கும் உள்ளாகின்றனர் . 
http://www.howtoquitsmokingfree.com/wp-content/uploads/2011/04/1302902297-72.gif
மாரடைப்பு , புற்றுநோய் , ஆண்மைக்குறைவு போன்ற நோய்கள் ஏற்படுகிறது புகைப்பிடிப்பதால் . புகைப்பிடிப்பவர்களுக்கு மது அருந்தும் பழக்கமும் சிலருக்கு உண்டு . சிலர் குடிப்பார்கள் புகைப்பிடிப்பதில்லை . எனினும் இரண்டும் தீங்கு தான் . இரண்டையும் அறவே கைவிட்டு சிறந்த மனிதனாக வாழ பழகுங்கள் . நோய்கள் வந்தவுடன் பின்பு யோசித்து பிரயோசனம் இல்லை . முதலே யோசிக்க வேண்டும் . 
http://www.drugfreehomes.org/wp-content/uploads/2011/03/smoking.jpg
உங்களுக்கு ஏதாவது கவலை , துன்பம் இருந்தால் அதுக்கு மதுவை , புகைப்பிடிப்பதை நாடாதீர்கள் . அதுக்கு பதில் எதாவது தியானம் , உடல்பயிட்சி செய்யலாம் . நகைச்சுவை அம்சங்களை கேட்டும் , பார்த்தும் ரசிக்கலாம் . நல்ல பாடல்களை கேட்டு மகிழலாம் . 









3 comments:

SURYAJEEVA said...

http://karuppurojakal.blogspot.com/2011/10/blog-post_3415.html

http://karuppurojakal.blogspot.com/2011/10/blog-post_7672.html

மேலும் புகைத்தலால் வரும் பிரச்சினைகள் குறித்து படிக்க

BC said...

உடல் நல அறிவுரை. நன்று.

Pavi said...

நன்றி வருண்