ஆனால் , இன்னும் ருசியானது மாம்பழம். இளம்காய் புளிக்கும் , பழுத்ததும் சாப்பிட்டு பாருங்கள் தேனாக இனிக்கும் . விளாட்டு மாங்காய் இன்னும் ருசியானது . செம்பாடு, அம்பலவி ,கறுத்தக் கொழும்பான் , செம்பாடு , மல்கோவா போன்று பல வகைகளில் மாம்பழங்கள் உண்டு .
மரத்தில் கொத்து , கொத்தாக தூங்கும் போது பார்க்கும்போது அழகாக இருக்கும் . இலைகளும் பச்சை நிறம் , காயும் பச்சை நிறம் . காய்கள் பச்சையாகவும், பழங்கள் மஞ்சள், இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறங்களிலும் காணப்படுகின்றன. மாம்பழம் நன்றாக பழுத்தால் நல்ல மணம் வீசும் .
எல்லாவகை பழங்களையும் விட உலகிலேயே மாம்பழம்தான் மற்ற எல்லாப் பழங்களையும் விட கூடுதலாக மக்கள் உண்ணும் பழம். உலக நாடுகளில் மாம்பழத்தின் விளைச்சல் அதிகம் . ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் அதிகமான மாமரங்கள் காணப்படுகின்றன .
இளம் மாங்காயை துண்டுகளாக வெட்டி உப்பு , மிளகாய் தூள் தூவி சாப்பிட்டால் நன்றாக இருக்கும் . சிறுவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள் . விட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்தவை மாம்பழங்கள் . மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில்தான் விட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. மனிதர்களின் உடலுக்கு அதிக முக்கிய தேவையான கல்சியம் , பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவைகள் நாம் சுவையாக சாப்பிடுகின்ற மாம்பழத்தில் அதிகமாக இடம் பெற்றுள்ளது.
இப்போது மாம்பழ சீசன் . அதிக மாம்பழங்கள் கடைகளில் கிடைக்கின்றன . எல்லோரும் வாங்கி சாப்பிடுங்கள் . இலங்கையில் யாழ்ப்பாணத்தில் அதிக மாம்பழங்கள் கிடைக்கின்றன . மா மரங்களும் அதிகம் உண்டு . மாம்பழங்களை கடைகளில் வடிவாக பார்த்து வாங்க வேண்டும் .
2 comments:
அருமை
தோடை என்றால் என்ன பழம் என்று தெரியாமல் சில நிமிடங்கள் google ஆராய்ச்சிக்கு பிறகு தெரிந்து கொண்டேன்
நன்றி ஜீவா
Post a Comment