Thursday, November 5, 2009

அதிகரிக்கும் உணவு கலப்படம்எதனை பார்த்தாலும் எல்லாத்திலும் கலப்படம் தான் . இப்பிடியே போனால் நிலைமை என்னாவது ? அதுவும் கலப்படம் கலந்து இருப்பதை சில பொருட்களை பார்த்தால் கூட கண்டு பிடிக்க முடியாது . அவ்வளவுக்கு கலப்படம் கலந்ததே தெரிவதில்லை .

நான் யோசிப்பதுண்டு . இதென்னடா முன்னம் வாழ்ந்த மனிதர்கள் எல்லோரும் எண்பது, எழுபது , நூறு வயது வரை இருந்தார்கள் .  நோய் நொடி இன்றி இருந்தார்கள் .. இப்போது பார்த்தால் சிறு வயதிலேயே ஒவ்வொரு வருத்தங்கள் வந்து இறந்து போகிறார்கள் . வயிறில் கல்லு , கிட்னி பழுதாகி விட்டுது , இரத்த அடைப்பு  என சொல்லி கொண்டே போகலாம் . இப்போது பார்த்தால் இந்த பொருட்களுக்கு சேர்க்கப்படும் கலப்படம் தான் காரணம் . அவர்களுக்கு ஒவ்வொரு வருத்தங்கள் வர காரணம் . நச்சு தன்மை கொண்டமைந்து , உடலுக்கு தீங்கு பயக்கும் பொருட்களை கலக்கின்றார்கள் . அதனால் தான் இந்த நிலைமை .


முன்னைய கால மனிதர் பச்சை பசெலேன்று நல்ல மரக்கறிகள் , பழங்கள், மீன்கள் என அன்றாட தேவைக்கு வாங்கி அன்றாடம் சாப்பிட்டார்கள் . பழங்கள் எல்லாம் மரத்தில் பழுக்கும் வரை பிடுங்காமல் பழம் நிலத்தில் விழும் வரை காத்து இருந்து  உடனே உண்பார்களாம் . அதில் நல்ல ருசி இருக்கும் . பழம் கனிந்து நான்றாக தானே இருக்கும் .ஆனால் இப்போது அப்படியா நிலைமை ?
இல்லையே . மரத்தில் மாங்காய்களை காயுடன் வாங்கி அவற்றுக்கு உடனே பழுக்க கூடியவாறு மருந்துகளை அடித்து மாங்காய்களை பழுக்க வைக்கிறார்கள் . முன்னம் எல்லாம் மாங்காய்களை பழுக்க வைக்க வைக்கோலுக்குள் தாட்டு வைப்பார்கள் . இப்போது எல்லாம் அப்பிடி வைத்தா பழுக்க வைக்கிறார்கள் .

மீன்களுக்கு எல்லாம் பல மருந்துகளை அடித்து  நாறாமல் வைத்து அடுத்தநாளைக்கு விக்கிறார்கள் . பார்த்தால் புது மீன் போல் இருக்கும் . வீட்டில் கொண்டு வந்து வெட்டினால் நாறும் . அப்படி இப்படி எல்லாம் ஒன்றா , இரண்டா . சொல்லிக்கொண்டே போகலாம் இந்த கலப்படம் எவ்வளவு பொருட்களில் சேர்க்கப்படுகிறது என்று ........
தேனுக்குள் சர்க்கரை பாணியை கலக்கிறார்கள் , அரிசிக்குள் சிறு கற்கள்  மற்றும் சில கூடாமல் போன அரிசி குறினிகள் எனவும் உப்புக்குள் சின்ன வெள்ளை கற்கள் , புளிக்குள் தண்ணீரை கலந்து பிசைவது  என எல்லாமே கலப்படம் தான்.மஞ்சள் தூளுடன் கலப்படம் செய்ய லெட் க்ரோமேட் என்கிற கெமிக்கலைப் பயன்படுத்துகிறார்கள்… இது எப்பவாவது  ஒரு நாள் கிட்னியை செயலிழக்கச் செய்துவிடும். இந்த  மஞ்சள் தூளில்  இது கலந்துள்ளது என்பதெல்லாம் எளிதில் கண்டுபிடிக்க முடியாது .முழு மஞ்சளைவிட, மஞ்சள் தூள் தான்  சமையலுக்கு எளிது என்று நாமும் எளிதாக ஆபத்தில் சிக்கிக்கொள்கிறோம்.ஆனா‌ல் பலரு‌ம் கவ‌னி‌க்காத ‌விஷ‌ய‌ம், நா‌‌ம் வா‌ங்‌கிய‌ப் பொரு‌ள் ச‌ரியானதா, தரமானதா, கல‌ப்பட‌ம் இ‌ல்லாததா, எங்கே தயா‌ரி‌க்க‌ப்ப‌ட்டது அ‌ல்லது போ‌லி பெய‌ர்க‌ளி‌ன் உருவானதா எ‌ன்பதை‌த்தா‌ன். இவற்றை எல்லாம் நாம் கவனிப்பதில்லை . கடைக்கு சென்றோமா , பொருட்களை வாங்கினோமா என்று இருப்போமே தவிர இவற்றை எல்லாம் எல்லோரும் கவனிப்பதில்லை . இதனால் தான் மோசடி வேலை பார்ப்பவர்களும் அதிகரிக்கிறார்கள் . இப்படி செய்தால் எவர்கள் என்ன கவனிக்கவா போகிறார்கள் என்று பாலுக்குள் தண்ணீர் கலக்கிறார்கள் , எண்ணைக்குள் கூடாமல் போன எண்ணைகளை கலக்கிறார்கள் .
நா‌ம் வா‌ங்கு‌ம் கடு‌கி‌ல் இரு‌ந்து  புடவை முத‌ல் த‌ங்க‌ம் வரை எ‌ல்லாவ‌ற்‌றிலு‌ம் கல‌ப்பட‌ம்  இருக்கிறது .  பாலில் நீர் சேர்ப்பதும், அரிசியில் கல் இருப்பதும்  தான் எல்லோரும் அறிந்த விடயம் . இன்னும் பல பொருட்களில் இந்த கலப்பட வேலை நடைபெறுகிறது . அது எல்லோருக்கும் புரிவதில்லை .பாலுக்குள் தண்ணீர் , அரிசிக்குள் கல்லு ,  பருப்புக்குள் கேசரி பருப்பு ,  மிளகுக்குள் பப்பாளி விதைகள் ,  மிளகாய் தூளுக்குள் செங்கட்டி தூள் ,  தேயிலைக்குள் அரைத்த உளுத்தம் தோல் , எப்படி ஏராளம் .இப்படி எல்லாம் எதற்காக என்றால் ? அவர்கள் தங்களுடைய வருமானத்தை உயர்த்துவதற்கு பயன்படுத்தும் உக்தி தான் . நல்லா சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் தான் . இவர்களுக்கு எல்லாம்  மனசாட்சியே இருக்காதா? அதே கலப்பட பொருட்களை அவர்களின் குடும்பத்தினரும் தானே சாப்பிடுவார்கள்? இதை எல்லாம் ஏன் அவர்கள் உணர்வதில்லை ? இவர்களை எல்லாம் என்ன செய்வது ? திருந்த மாட்டார்களா ?
 


தேங்காய் எண்ணெயுடன், பெட்ரோலியத்தில் இருந்து கிடைக்கும் ஆயில் கலக்கப்படுவதும் உண்டு.
அதேப்போல நல்லெண்ணெயுடன் விலை குறைந்த பாமாயில் அல்லது தவிட்டு எண்ணெய் கலக்கப்படுகிறதும் பலரும் அறிந்ததே. இவற்றால் எல்லாம் உடம்புக்கு பாதிப்பு தானே ? இப்படி எல்லாம் நடந்தால் உடம்பில் பாதிப்பு வரத்தான் செய்யும் .

கலப்படம் செய்பவர்கள் திருந்தினால் தான் உண்டு . அல்லாவிடில் ஒவ்வொரு நோய்களால் மனிதர்கள் இறப்பது தொடர்ந்த வண்ணமே இருக்கும் . ஒன்றும் செய்ய முடியாது .

12 comments:

Pavi said...

நிலைமை இப்படி இருக்கிறது .
என்னதான் செய்யலாம் ?
நீங்களும் சொல்லுங்கள் ...........

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

கலப்படத்தில் தீங்கானது; தீங்கற்றது எனப் பிரிக்கலாம். மிளகுக்குள் பப்பாசி; கோப்பித்தூளுடன் கச்சான் தூள்; அரிசியுள் குறுணி ஆபத்தற்றது.
ஆனால் மஞ்சள் தூள்; மிளகாத் தூள் போன்றவற்றுடன் கலக்கும் சாயத் தூள்கள் ஆபத்தானவை.
இப்போ ஆபத்தானவற்றையும் இரக்கமின்றிக் கலப்பதே வேதனை.
மனிதமனங்களை ஆட்படுத்தியுள்ள பேராசையின் வெளிப்பாடே இந்தக் கலப்படம்.
இது "திருடராகப் பார்த்துத் திருந்தினாலே தான் ஒழியும். ஆனாலும் அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவான் என்பார்கள். குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை என்னும் போது, சற்றுப் பயப்படுகிறார்கள். ஆனால் இந்தியா ;இலங்கை போன்ற நாடுகளில் சட்டம் எப்போ தன் கடமையைச் செய்துள்ளது. அப்படிச் செய்யமுற்பட்டாலும்; அரசியல் வா(வியா)திகள் விடுவார்களா? இந்த லாபத்தில் அவர்களுமெல்லா?
பங்கு பெறுகிறார்கள்.
மேல்நாடுகளில் திடீர் சோதனை ,இறக்குமதியாகும் பொருட்களில் மாதிரியை எடுத்து பரிசோதனைக்கு அனுப்ப ஒருகுழு இயங்குகிறது.பரிசோதனையில் தவறு நிரூபிக்கப்படும் போது தண்டனையில் தப்ப பெரும்பாலும் முடிவதில்லை.
ஆனால் இப்போ இங்கே கூட போலிகள்; கலப்படங்கள் மெள்ள மெள்ள நுளைவது வேதனையே.
நுகர்வோர் எல்லாவற்றையும் சோதனைசெய்வதென்பது இயலாது; தயாரிப்பாளரும், விற்பனையாளருமே மனம் மாறவேண்டும்.

கவிக்கிழவன் said...

கலப்படம் என்றபின் ஆபத்தானது என ஆபத்திலாதது என்ன ஐயா

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தம்பி கவிக்கிழவன்!
கலப்படம் எந்த நிலையிலும் தவறே என்பது அறிவேன் ஆனால் என் அறிவுக்கெட்டியவரை இதைக் கடந்த 50 வருடமாக பல கட்டங்களில் பார்த்துச் சலித்து; இருப்பதில் நல்லதைப் பார்ப்போம் என்னும் மனநிலை எனக் கொள்ளவும்.
எனது 5 வயதில் பாடசாலை சென்றபோது ஆசிரியை எழுத பாவித்த வெண்கட்டி "பிரிட்டாபியா" என்ற
வியாபாரக் குறியுடைய பிரித்தானியாவில் இருந்து இலங்கைக் கல்வித் திணைக்களம் இறக்குமதி செய்த
வெண்கட்டி ;அதனால் எழுதுவதே ஒரு தனிச்சுகம்; எனது 5 வகுப்புவரை அந்த வெண்கட்டியே பாவனையில் இருந்தது.
பின் உள்ளூர் தயாரிப்பை ஊக்கப்படுத்தவேண்டுமென இலங்கையில் வெண்கட்டி தயாரித்தார்கள். ஆனால் குருகுமணலைக் கலந்துவிட்டார்கள். எழுதும் போது கரும்பலகை கீச்சிடும்; ஆசிரியர்கள்
சினப்பார்கள். ஆனால் ஒடித்து விட்டு தொடர்ந்து எழுதினார்கள். என்ன, தான் அவர்கள் செய்யமுடியும்
இது அடிப்படைக் கோளாறு. ஊழல்,லஞ்சம்;ஏமாற்று;சிபார்சு என்பன நம் தேசிய அடையாளங்கள்.இப்போ நம் நாடுகளில் உணவில் மாத்திரமா? கலப்படம் எல்லாமே கலப்படமே!
வைத்தியரில் போலி;சாமியில் போலி;அரசியல்வாதி போலி;ஆசிரியர் போலி யாவும் கலப்படம்
அப்போ நாம் இப்போ என்ன? செய்கிறோம். அதில் நல்லதை; ஆபத்தில்லாததை; அதிக ஆபத்திலாததைத் தேடுகிறோம்.
ஏன்? இயல்பாக்கமடைந்து விட்டோம். ஏற்றுக் கொண்டுவிட்டோம்.இது தான் விதி என வாழப் பழகிவிட்டோம்.
பாலில் நீர் கலப்பவர்களை தடுக்கமுடியாது ;என்னால் அதனால் கலக்கும் நீர் சுத்தமாக இருக்க வேண்டுமென நப்பாசைப்படுகிறேன்.
இனி இந்த உலகில் மாற்றம் வரும் என்ற நம்பிக்கை எனக்கில்லை.
ஆபத்தில்லாத கலப்படமென்பதை- சுகமான சுமை என்கிறார்களே! அதைப்போல் நான் நினைக்கிறேன்.
நிறைய எழுதலாம்... ஆனால் விழலுக்கிறைத்ததே!

சந்ரு said...

நல்ல பதிவு இன்றைய யதார்த்தத்தை உணர்த்தும் பதிவு ஆனால் எவரும் நடவடிக்கை எடுக்க முன்வரமாட்டார்கள். இன்றைய நிலை அப்படி.

வி.என்.தங்கமணி, said...

பாவி... நல்ல பதிவு, தீர்வு குறித்தும் யோசியுங்கள். நன்றி.

Pavi said...

இது "திருடராகப் பார்த்துத் திருந்தினாலே தான் ஒழியும். ஆனாலும் அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவான் என்பார்கள்.
ம்ம்ம்ம் உண்மை தான் யோகன் அண்ணா .

Pavi said...

நல்ல பதிவு இன்றைய யதார்த்தத்தை உணர்த்தும் பதிவு .
நன்றி சந்துரு அண்ணா

Pavi said...

தங்கமணி சார் என்னை பாவி ஆக்காதீர்கள் .
என்னுடைய பெயர் பவி.
தீர்வு குறித்து சிந்திக்கின்றேன் .
உங்களுக்கு தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள் சார்

உங்கள் தோழி கிருத்திகா said...

அதே கலப்பட பொருட்களை அவர்களின் குடும்பத்தினரும் தானே சாப்பிடுவார்கள்? இதை எல்லாம் ஏன் அவர்கள் உணர்வதில்லை ? இவர்களை எல்லாம் என்ன செய்வது ? திருந்த மாட்டார்களா ?//////////////
அவங்களுக்காக ஸ்பெஷலா தயார் பண்ணிக்குவாங்க...
எத்தன அன்னியன் வந்தாலும் இவங்களாம் திருந்த மாட்டாங்க

Anonymous said...

nalla pathivu pavi...........

Pavi said...

எத்தன அன்னியன் வந்தாலும் இவங்களாம் திருந்த மாட்டாங்க
திருந்தவே மாட்டார்கள் ...........
நன்றி கிருத்திகா உங்களுடைய கருத்துக்கு