Tuesday, January 10, 2012

துன்பங்களுக்கு மத்தியில் வாழ்வை போக்கும் விவசாயிகள்

http://www.learnnc.org/lp/media/collections/freeman/vietnam/600/vietnam_017.jpg
இன்றைய நிலையில் வாழ்க்கை செலவுகள் அதிகரித்துக் கொண்டு இருக்கின்றன . ஒருவேளை உணவு உண்பதற்கே துன்பப்படும் மக்கள் பலர் . விவசாயத்தை நம்பியே தமது வாழ்வாதாரத்தை நம்பி இருக்கும் விவசாயிகள் பலர் துன்பங்களுக்கு மத்தியில் வாழ்கின்றனர் . 

கிராமப்புறங்களில் வாழும் விவசாயிகள் பலர் மின்சாரம் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர் . பூச்சி கொல்லிகளால் அவர்களின் பயிர்கள் நாசம் அடைகின்றன . அறுவடை நேரம் மழை வந்து கொட்டோ கொட்டென்று கொட்டி பயிர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்படுகின்றன .
http://cdn7.wn.com/ph/img/49/88/b396026ccf53e6cfe2b06f8988f0-grande.jpg
நாம் அன்றாடம் உண்ணும் சோறுக்கு சொந்தக்காரன் அந்த விவசாயி . 'கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி "என்று நாம் பாடல்களை பாடினால் மட்டும் போதாது . அவன் படும் கஷ்டத்தை நாம் உணர்வதும் இல்லை . அவனது வாழ்வு உயர்வதும் இல்லை . கஷ்டத்தின் மத்தியில் தமது அன்றாட வாழ்வை போக்குகின்றான் .
http://tylerhuston.com/img/Rice%20Farmer.jpg
இன்று பலர் தமது அன்றாட தொழிலான விவசாயத்தை கைவிட்டு வேறு புதிய நிறுவனங்களில் வேலைகள் நிமித்தம் செல்கின்றனர் . தமது காணி நிலங்களை விற்று தமது பிள்ளைகளின் வயிற்று பசியை போக்க தமது சொந்த மண் , கலாசாரம் என்பவற்றை விட்டு நகர்ப்புறங்களில் குடியமர்கின்றனர் .
http://foodsecurityghana.com/wp-content/uploads/2010/07/rice_plant1.jpg
கடன்வாங்கி விவசாயம் செய்து தமது அறுவடை நேரத்தில் கடனை திருப்பி கொடுக்கலாம் என்று எண்ணி இருக்கும் போது மழை வந்து அழித்து விடுகின்றது . இதனால் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் தமது உயிரை தாமே போக்கிக் கொள்கிறார்கள் . இப்படி அவர்களின் கஷ்டம் ஏராளம் .

தை மாதத்தில் நாம் விவசாயம் செய்து நமக்கு ஒரு வாய் சோற்றுக்கு சொந்தக்காரன் விவசாயி . அவனை இந்த மாதத்திலாவது நினைக்க வேண்டாமா ? நாம் சோற்றை வாய்க்குள் வைக்கின்றோம் . விவசாயிகள் சேற்றுக்குள் நின்று வியர்வை சிந்தி உழைத்து பெறுகின்ற அந்த நெல்லரிசி சோற்றை தான் நாம் உண்கின்றோம் . அவன் எவ்வளவு கஷ்டப்படுகின்றான் . 
http://cdn8.wn.com/ph/img/6e/ec/51b4be06c300e4e81ce18caad632-grande.jpg
விவசாயிகளின் வாழ்விலும் நிம்மதி , சந்தோசம் அமைய வேண்டும் . அவர்களின் குடும்பம் முன்னேற வேண்டும் . எல்லா வசதிகளுடனும் விவசாயிகளும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்பதே எல்லோரினதும் அவா . 

2 comments:

suraavali said...

1.விவசாயிகள்:நாட்டின் சட்டபூர்வ கொத்தடிமைகள்! பாகம் -1
http://suraavali.blogspot.com/2011/10/1.html

2.விவசாயிகள்: நாட்டின் சட்டபூர்வ கொத்தடிமைகள்! பாகம் 2
http://suraavali.blogspot.com/2011/11/2_10.html

3.விவசாயிகள்:நாட்டின் சட்டபூர்வ கொத்தடிமைகள்! பாகம் -3
http://suraavali.blogspot.com/2011/11/3.html
விவசாயிகள் நாட்டின் சட்டபூர்வ கொத்தடிமைகள்-4
http://suraavali.blogspot.in/2011/11/4.html

ஐந்து அம்ச கோரிக்கைகள்:-
மத்திய ,மாநில அரசுகளே!
1.விவசாயத்தை நாட்டின் தொழிலாகவும்,அத்தியாவசிய தொழிலாகவும் அறிவித்து நடைமுறைப்படுத்து!

2.நிலப்பிரபுக்கள்,மடங்கள்,ஆதீனங்கள்,கோயில்கள் ,நவீன கால நிலப்பிரபுக்களான கார்ப்பரேட் முதலாளிகள்,நடிகர்கள்,பெரும் பணக்கார்ர்கள் வாங்கி குவித்துள்ள நிலங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை கூலி ஏழைவிவசாயிகளுக்கு பிரித்து வழங்கு!

3.விவசாய விளை பொருட்களுக்கான விலையை தீர்மாணிக்கும் உரிமையை விவசாயிகளுக்கேவழங்கு!

4.ஒவ்வொரு சாகுபடிக்கும் ஆகும் முழுச்செலவையும் விவசாயிகளுக்கு கடனாக வழங்கு!

5.நாடு முழுக்க விவசாய விளை பொருட்கள் அனைத்தையும் அரசே கொள்முதல் செய்யும் முறையைஏற்படுத்து.