Monday, January 9, 2012

நாம உச்சத்தில் இருந்தா நம்மை மதிப்பாங்க .......



எல்லோரும் நாம் முன்னணியில் இருக்க வேண்டும் . சம்பாதித்து சொத்து , பணம் , நகை என சேர்த்து இந்த சமூகத்தில் பெரிய புள்ளியாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள் . சிலர் உச்சத்தை அடைகிறார்கள் . சிலர் அப்படி நினைக்கிறார்களே தவிர நடைமுறையில் அவை சாத்தியப்படுவதில்லை .

சம்பாதித்து சொத்து , பணம் என வைத்திருப்பவர்களுக்கு கார் இருக்கும் , மாடி வீடு இருக்கும் இப்படி அவரின் சொத்துகள் பல . சில நல்ல உள்ளங்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுவார்கள் . சிலர் இல்லாதவர்களிடம் வறுவி சொத்துகள் சேர்ப்பவர்களும் இருக்கின்றனர் . சண்டை , சச்சரவு செய்து சொத்துகளை பறித்துக் கொள்வோரும் உண்டு .
http://media-cdn.tripadvisor.com/media/photo-s/01/ba/d4/c3/club-house.jpg
இந்த சமுதாயத்தில் நாம் பேசப்பட வேண்டும் என்றால் நாம் ஒரு விளையாடு வீரராகவோ , சினிமா நட்சத்திரமாகவோ , அரசியல்வாதியாகவோ இருக்க வேண்டும் . அல்லது வீர தீர செயல்கள் செய்யும் சாகச வீரராக இருக்க வேண்டும் . அப்படி எல்லோராலும் இருக்க முடியுமா ? 

நாம் பேர் , புகழ் , அந்தஸ்துடன் இருக்கும் போது நம்மை பலர் மதிப்பார்கள் , எங்கும் நமக்கு முன்னிலை அளிக்கப்படும் . அதே நாம் தாழ்ந்து கஷ்டப்பட்டால் ஒரு சனம் திரும்பி பார்க்க மாட்டார்கள் . இதுதான் இந்த உலகம் . ஓகோ ஆகா என இருக்கும் போது வாழ்த்துவார்கள் . தாழ்ந்தால் தூற்றுவார்கள் . என்ன வாழ்க்கைடா என எண்ணத் தோன்றுகிறது . 
http://files.myopera.com/joshyissac/albums/930116/high-range-top-view-munnar.JPG
ஒரு அனாதையாய் , யாரும் மதிக்காமல் இருக்கும் ஒருவன் தனது சம்பாத்தியத்தால் முன்னுக்கு வந்து பெரிய நிறுவனத்துக்கு தலைமை அதிகாரியாகிறான் . அவனுக்கு தான்பட்ட கஷ்டங்கள் , துன்பங்கள் தெரியும் . அதனால் , அவன் ஏழை , அனாதைகளுக்கு உதவும் மனப்பான்மை உள்ளவனாகத் திகழ்கிறான் . அப்படி எத்தனை பேருக்கு உதவி செய்யும் மனப்பான்மை உள்ளது ? 

தாழ்த்தாலும் பேசும் , வீழ்ந்தாலும் பேசும் , உயர்ந்தாலும் பேசும் . இந்த சமூகம் . கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவன் கடின உழைப்பால் இன்னும் முன்னேறி கொண்டு இருக்கின்றான் . இடையில் கஷ்டப்படாது முன்னேறியவன் இருப்பதையும் இழக்கிறான் .

2 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

உங்க கட்டுரை அருமை.....
மத்தவங்க மதிக்க நம்ம தரம் நல்லா இருக்கணும்

Pavi said...

உண்மைதான் . சிலர் பகட்டுக்காக வாழ்வோரும் உண்டு . நன்றி பிரகாஷ்