Monday, January 9, 2012

தற்கொலை செய்பவர்கள் முட்டாள்கள்



உலகம் எங்கும் தற்கொலை செய்து கொள்பவர்கள் அதிகரித்துக் கொண்டு செல்கிறது . தம்மையே தாம் அழித்துக் கொள்கிறார்கள் . அது தவறு . இறைவன் நம்மை படைத்து இந்த சமூகத்தில் நாமும் ஒருவராய் வாழ்ந்து இன்ப, துன்பங்களை அனுபவித்து சந்தோசமாக வாழ்ந்து நமது வயதுபோனவுடன் நோய்வாய்ப்பட்டு மரணத்தை தழுவுகிறோம் .

இயற்கையின் நியதியை மாற்றி தமது இயலாமையை இந்த உலகையே வெறுத்து தற்கொலைக்கு செல்கிறார்கள் . இவர்கள் முட்டாள்கள் தானே . தாய் பத்து மாதம் சுமந்து கஷ்டப்பட்டு இந்த சமூகத்தில் ஒருவனாக தனது மகன் / மகளோ திகழ வேண்டும் என்று அவள் எவ்வளவு கஷ்டப்படுகிறாள் . ஆனால், பிள்ளைகள் அவற்றை சிறிது கூட நினைத்து பார்க்காமல் இந்த தற்கொலைக்கு முயற்சிக்கிறார்கள் . 
http://assets.lifehack.org/wp-content/files/2008/03/suicide-heart.jpg?4c9b33
ஒரு வருடத்தில் பத்து இலட்சத்துக்கு மேற்பட்டோர் தற்கொலை செய்து கொள்கிறர்கள் . பத்திரிகைகளிலும் , செய்திகளிலும் தினம் தினம் செய்திகள் வருகின்றன . காதல் தோல்வி , கடன் சுமை , தனிமை , மன அழுத்தம் ,பரீட்சை முடிவுகள் , வீட்டில் ஏதாவது பிரச்சனை , காணி தகராறு என தற்கொலைக்கு ஏதுவான காரணிகள் அமைகின்றன . 

பிரச்சனைகள் நமக்கு வரும் போது அதனை எப்படி சமாளிக்க முடியும் , என்ன செய்யலாம் என சிந்திக்க வேண்டும் . காதலில் பிரச்சனை என்றால் நான்கு , ஐந்து நண்பர்களுடன் பேசி சிறந்த முடிவை எடுப்பதை விடுத்து எல்லாவற்றையும் வெறுத்து இவ்வுலகை ஏன் வெறுப்பான் . கடன் பிரச்சனை என்றால் தன்னால் சமாளிக்க முடியாது விடத்தில் அதனை எப்படி தீர்க்கலாம் என சிந்திக்க வேண்டும் .
http://www.tiptoptens.com/wp-content/uploads/2011/02/suicide.jpg
பரீட்சை முடிவு தவறாக இருக்கும் பட்சத்தில் திருப்பி படித்து அந்த பரீட்சையில் சிறந்த பெறுபேறை பெறலாம் . இப்படி தன் உயிரை தானே அழித்து கொள்வது நியாயமா? இவை எல்லாம் முட்டாள் தனம் தானே . எப்போதுமே எமக்கு நமது பெற்றோர்கள் தான் சிறந்த நண்பர்கள் . அவர்களிடம் எமது பிரச்சனைகளை முன் வைக்கும் போது அவர்கள் அந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு சொல்வார்கள் . 

எமது ஆருயிர் நண்பனிடம் இருந்து ஒரு சிறந்த முடிவை எடுக்கலாம் . அதனை விடுத்து இந்த உலகையே வெறுப்பது ஏன் ? நாம் வாழ வேண்டியவர்கள் ? சந்தோசத்தை அனுபவிக்க பிறந்தவர்கள் என்று நினைக்க வேண்டும் . தற்கொலைகள் குறைய வேண்டும் . பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் . 




No comments: