எனினும் சிறுவர்களுக்கும் , வயதுபோன முதியவர்களுக்கும் தான் இந்த மறதி அதிகம் காணப்படும் . பாடசாலையில் ஆசிரியர் வீட்டுப்பாடம் கொடுத்து விடடால் மறந்து போய் செய்யாமல் போய் எத்தனை நாள் நாம் எல்லாம் அடி வாங்கி இருப்போம் . ம்ம்ம்ம்ம்ம் அது எல்லோருக்கும் நடப்பது தானே .
அப்போது ஆசிரியர் தடியால் அடித்து அடித்து என்ன சொல்வார் . மறதிக்கு மருந்து மாச்டற்ற பிரம்பு என்பார் . கையை பார்த்தா கை சிகப்பாக , இரத்த கலரில் இருக்கும் . அதெல்லாம் பழைய ஞாபகம் . சரி விடயத்துக்கு வருவோம் . இந்த மறதிக்கு என்ன தான் தீர்வு ?
நாம் சத்தான உணவுகளை உன்ண வேண்டும் . பச்சை காய்கறி வகைகள் , கீரை வகைகளை உணவில் ஒவ்வொரு நாளும் சேர்த்துக் கொள்ள வேண்டும் . சிறு வயதில் இருந்தே பிள்ளைகளுக்கு இந்த பழக்கத்தை பழக்க வேண்டும் . ஆரோக்கியமான உணவுகளை உண்டு வந்தால் மறதி என்ற பேச்சுக்கே இடமில்லை .
எப்போதும் மனதை ஒருநிலைப்படுத்தி வைத்திருக்க வேண்டும் . அலைபாய விடக் கூடாது . அப்போது மறதி தானாக வந்து விடும் . எனவே டென்சனை குறைக்க வேண்டும் .
விட்டமின் நிறைந்த உணவுகள், பழங்கள் என்பவற்றை நாம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் . தலையில் அடி பட்டு , மண்டை கலங்கி இருந்தாலும் இந்த மறதி பிரச்சனை வர செய்யும் . அதிகம் தண்ணீர் அருந்த வேண்டும் . நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உண்டால் உடம்புக்கு நல்லது .
உறைப்பு அதிகம் உட்கொள்ளல் கூடாது . காரம் குறைவாக இருக்க வேண்டும். அது எல்லோருக்கும் நல்லது . எளிதில் செரிமானம் அடையக் கூடிய உணவுகளை உண்டால் நல்லது . பழச்சாறு தயாரித்து நாமே செய்து ஒவ்வொரு நாளும் குடிக்கலாம் . மனதுக்கும் , உடம்புக்கும் கூலாக இருக்கும் அல்லவா ?
ம்ம்ம்ம்ம்ம்ம்ம் மறதியை நாமே மாற்றலாம் . மறதி இல்லாமல் , வாழ்வில் டென்சன் இல்லாமல் இருப்போம் .
1 comment:
CLICK LINK AND READ.
ராமன் பிறந்தது தசரதனுக்கா? குதிரைக்கா? பார்ப்பன குருக்களுக்கா?
.
Post a Comment