Wednesday, December 16, 2009

எனக்கு பிடித்த வரிகள் - பகுதி 7




சிரித்து சிரித்து தான் பேசும் போதிலே
வளைகளை நீ விரித்தாய்
சைவம் என்றுதான் சொல்லிக்கொண்டு
நீ கொலைகளை ஏன் செய்கிறாய்
அங்கும் இங்கும் என்னை விரட்டும் பறவையே
என்ன சொல்ல உந்தன் விரட்டும் அழகையே
வெட்ட வெளி நடுவே அடக்கொட்டக் கொட்ட
விழித்தே துடிக்கிறேன்

மாறி மாறி மழை அடிக்க
மனசுக்குள்ள குடை பிடிக்க
கால்கள் நாளாச்சு கைகள் எட்டாச்சு
என்னாச்சு ஏதாச்சு, ஏதேதோ ஆயாச்சு
மயில் தோகை போல இவ மழையில் ஆடும் போது
ரயில் தாளம் போல என் மனசும் ஆடும் பாரு
என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு

காதல் வந்தாலே கண்ணோடு தான்
கள்ளத்தனம் வந்து குடி ஏறுமோ
கொஞ்சம் நடித்தேனடி கொஞ்சம் துடித்தேனடி
இந்த விளையாட்டை ரசித்தேனடி
உன் விழியாலே உன் விழியாலே
என் வழி மாறும் கண் தடுமாறும்
அடி இது ஏதோ புது ஏக்கம்
இது வலித்தாலும் நெஞ்சம் அதை ஏற்கும்

தடுமாறிப்போனேன் அன்றே உன்னைப்பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சில் அந்த நேரத்தை நேசிக்கும்

மகராணி எஙக் அம்மா மட்டும்தான்
அந்த மகராசி காலடி சொர்க்கம்தான்
என் உலகம் எல்லாமே அவதான்
அவ நேச மகனும் நான் தான்
வேற சாமி ஏனய்யா

ஏய் ஓயாம ஒழைச்சேன் தினம் தினம்
எம் பாக்கெட்டில் விழல பணம் பணம்
ஏய் நேராக நடந்தேன் இதுவரை
அட காசுக்கு வளைஞ்சேன் முதல் முறை
எம்பாடு மஜா நீ போடாதே தடா
எம்மேல கரண்சி மச்சம்டா
நோட்டால அடி அதில் தோன்றாது வலி
ரூபாயின் சூறாவளி

சக்சஸ் என் வியர்வையில்
பூத்த புது யுகம் கண்டேன்
இன்வெஸ்ட் என் மூளையே
வெற்றியின் மூலதனம் என்பேன்
அதிபன் தொழிலதிபன்
எனக்கு மூளைதானே
அரசன் என் ஒருவந்தான்
ராஜ்ஜியம் அமைப்பேனே

தென்றல் காற்று பூவுக்காக
சிதறும் தூறல் பூமிக்காக
இன்று யாவும் நாளைக்காக
எனது பாடல் யாருக்காக
வந்தோமே வாழ்வில்
ஆனாலும் தேடல் தொடற
நிலாவைப்போல் தேயும் தேதிகள்

வஞ்சம் கொண்ட நெஞ்சம்
உருகுது கொஞ்சம்
சருகாவே தொலையுதே தகும்மோ
இது என்ன மாயம் சூரியனில் ஈரம்
வெண்ணிலவில் விடியலும் தொடங்குமோ
நதி வந்து கடல் மீது சேறும்போது
புயல் வந்து மலரோடு மோதும்போதும்
மழை வந்து வேலோடு கூடும்போ
யாரோடு யாரும் இங்கே ஹே ஹே ஹே

காற்றில் கலையும் ஒரு மேகம் போல்
காலம் ஓடிவிடும் நிற்காது
ஆனால் கூட அட அப்போதும்
நட்பின் ஞாபகங்கள் மறக்காது
இன்னொரு தாயி இறைவனும் படைத்தான்
நண்பன் என்றே பேரினை வைப்பான்
உன்னை உனக்கேதான் தினம் காட்டும்
கண்ணாடி நட்பாகும்

நேரங்கள் தின்றது யாரோ யாரோ யாரோ
பாரங்கள் தந்தது யாரோ யாரோ யாரோ
தூக்கத்தைத் திருடுவதாரோ யாரோ யாரோ
தூரலாய் வருடுவதாரோ யாரோ யாரோ

எனக்காக தாலாட்டு நீ பாடுவாய்
எனக்காக தீ மீதும் நீ ஓடுவாய்
என் கண்ணில் நீர் வழிந்தால் நீ வாடுவாய்
எப்போதும் எனைத்தானே நீ தேடுவாய்
உனக்காக நான் என்ன செய்தேனம்மா
உன் அன்புக்கடன் என்றும் தீராதம்மா
காப்பாற்றி வளர்த்தாயே என்னை
தெரியாமல் தொலைத்தேனே உன்னை

நின்றே கொல்லும் தெய்வங்களும்
நின்றே கொல்லும் மத பூசல்களும்
நன்றே செய்யும் என உணரும்
நன்றே செய்யும் நிலை வருமா

6 comments:

sathishsangkavi.blogspot.com said...

//காதல் வந்தாலே கண்ணோடு தான்
கள்ளத்தனம் வந்து குடி ஏறுமோ
கொஞ்சம் நடித்தேனடி கொஞ்சம் துடித்தேனடி
இந்த விளையாட்டை ரசித்தேனடி
உன் விழியாலே உன் விழியாலே
என் வழி மாறும் கண் தடுமாறும்
அடி இது ஏதோ புது ஏக்கம்
இது வலித்தாலும் நெஞ்சம் அதை ஏற்கும்//

என்ன அழகான கவிதை......

வார்த்தைளை கையாண்ட விதம் அருமை.........

அண்ணாமலையான் said...

வரனும்...

Pavi said...

எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள்
ம்ம்ம்ம்ம்ம்ம் நல்ல வரிகள் .

நன்றி சங்கவி

malarvizhi said...

நல்ல வரிகள் பவித்ரா.

Pavi said...

நன்றி மலர்விழி அக்கா

தேவதை காதலன் said...

//உன்னை உனக்கேதான் தினம் காட்டும்
கண்ணாடி நட்பாகும்
//
nalla varthaigal neriya irukku, ana etha pathi sollavaringannu puriya romba neram ahuthu...

neraiya thisaigal nooki varthagal pogum pothu manasum angeye poi sikkikuthu...