இலங்கை அணியின் பொறுப்பான , அமைதியான , துடுப்பாட்ட வீரராகவும் , விக்கட் காப்பாளர் ஆகவும் , தலைவராகவும் இருந்தவர் சங்ககாரா . இலங்கை அணியை இம்முறை உலக்க்கின்னத்தின் இறுதிப் போட்டி வரைக்கும் கொண்டு சென்றவர் . இலங்கை அணியின் பல வெற்றிகளுக்கு வித்திட்டவர் . அவரின் தலைமையில் அணியில் பல முன்னேற்றம் காணப்பட்டது . தலைவருக்கு உரிய அத்தனை பண்பும் அவரிடம் உண்டு .
இலங்கை அணிக்கு சங்ககாரா போன்று ஒரு உறுதியான , தன்னம்பிக்கை உடைய , அணியை வழிநடத்தக்கூடிய ஒரு அணித்தலைவர் கிடைப்பாரா என்று தான் ரசிகர்கள் ஏங்குகிறார்கள் . என்ன நடக்கின்றது . இனியார் அடுத்த தலைவர் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும் . இளம்வீரர்கள் பலருக்கு வாய்ப்பு கொடுத்து , அவர்கள் பல போட்டிகளை விளையாடி அனுபவத்தை பெற வேண்டும் . அடுத்த உலகக் கிண்ணத்துக்கு இப்போதில் இருந்தே வீரர்களை தயார் செய்து , பயிற்ச்சி அளிக்க வேண்டும் .
சங்ககார கருத்து தெரிவிக்கையில் : கோப்பையை கைப்பற்றாமல், தோல்வியடைந்தது, மிகுந்த மன வருத்தத்தை அளித்தது. இதனால், அணியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, ஒருநாள் மற்றும் ’டுவென்டி-20' போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். இதன் மூலம் புதிய கேப்டனை நியமித்து, 2015 தொடருக்குள் சிறப்பாக தயார் செய்ய முடியும்” என்று கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது ; அணித் தலைவராக இருந்த காலப்பகுதியில் நாட்டுக்காக விளையாடியதில் மகிழ்ச்சியும் திருப்தியும் உண்டு. எனினும் உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவிக்கொண்டமை வருத்தமளிக்கிறது. ஆனபோதும் நாம் சிறப்பாக விளையாடினோம் என்பதில் ஐயமில்லை.அதேநேரம், எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், கேப்டனாக தொடரவிரும்புகிறேன்.மற்றபடி, தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணமில்லை. உடல் ஒத்துழைப்புத் தரும் நிலையில் இன்னும் 3 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடுவேன் என்று கூறி உள்ளார் .
2 comments:
அடுத்த காப்டன் யாருன்னு பொறுத்திருந்து பார்ப்போம்....
ஆமாம். நன்றி பிரகாஷ்
Post a Comment