Thursday, April 7, 2011

நடிகை சுஜாதா மரணம்


http://static.webdunia.com/mwdimages/thumbnail/image/izizi//mywebdunia/UserData/Data/newsonweb/images/tamil_actress_sujatha1.jpg
தமிழ் சினிமா இன்னுமொரு சோகமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது . தமிழ் சினிமாவில் அம்மா வேடம் என்றால் இப்படித்தான் மனதை உருக்கும்படி இருக்க வேண்டும் என எல்லோரும் ஆசைப்படும் ஒரு நடிகை தான் சுஜாதா அவர்கள் . தனது 59ஆவது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார் . இவர் 1952ம் ஆண்டு இலங்கையில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது . இவரின் தாய்மொழி மலையாளம் .
http://www.tamil-movie.net/UploadedImages/Actress/big/631/Sujatha-1.jpg
மலையாளத்தில் "புனர் ஜென்மம்' படத்தின் மூலம் இரண்டாவது கதாநாயகியானார். பாலசந்தரின் இயக்கத்தில் "அவள் ஒரு தொடர்கதை' மூலம் கதாநாயகி ஆனார்.  சிவாஜி, கமல், ரஜினி உள்ளிட்டோருடன் நடித்துள்ள இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தியில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார். அந்தமான் காதலி, விதி ஆகிய படங்கள் இவருக்கு பெரும் பெயர் வாங்கித் தந்தன.

எனக்கு இவர் நடித்த விதி படம் மிகவும் பிடிக்கும். பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நான் நினைப்பதுண்டு . அவரின் நடிப்பு அற்புதம் . அவரின் பேச்சாற்றல் என்னை மிகவும் கவர்ந்தது அந்த படத்தில் . என்னை கவர்ந்த இன்னுமொரு படம் வரலாறு . அஜித்தின் வெற்றி படங்களில் இதுவும் ஒன்று . அதில் இவரின் நடிப்பு அருமை . அட்டகாசம், வில்லன்  படத்திலும் அஜித்துடன்  நடித்து அசத்தி இருப்பார் . சந்தோசமாக பேசும் போது அவரின் முகமும் சிரிக்கும் . துக்கமாக பேசும்போது அவரின் முகத்தை பார்த்தாலே போதும் . அழுகை ஆகட்டும் மிகவும் இயற்கையாக தனது உணர்ச்சிகளை திரையில் படைப்பார் . அதனால் , இவரை எனக்கு ரொம்பவும் பிடிக்கும் .
The image “http://cdn.supergoodmovies.com/files/951f8bd77dc84a3288a6b72a2bc2d902.jpg” cannot be displayed, because it contains errors.
இவர் நடித்த கடைசி படம் வரலாறு . அதற்குப் பின் பட வாய்ப்புக்களை ஒப்புக் கொள்ளவில்லை. சில காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தமையால் படங்கள் ஒன்றிலும் நடிக்கவில்லை . கோவி. மணிசேகரனின் இயக்கத்தில் வெளிவந்த "தென்னங்கீற்று', ரஜினி, கமல் இணைந்து நடித்த "அவர்கள்', இளையராஜாவின் இசையமைப்பில் வெளிவந்த "அன்னக்கிளி' ஆகிய படங்கள் அவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றன. பஞ்சு அருணாசலத்தின் கதை, வசனத்தில் வெளிவந்த "உறவு சொல்ல ஒருவன்', மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த "கண்ணுக்கு மை எழுது', ஸ்ரீதர் இயக்கிய "ஆலய தீபம்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். "அந்தமான் காதலி', "வா கண்ணா வா', "அண்ணன் ஒரு கோயில்', "பரீட்சைக்கு நேரமாச்சு' உள்ளிட்ட படங்களில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தார்.

 " ஆரூர் தாஸ் வசனத்தில் வெளிவந்த "விதி' திரைப்படத்தில் சுஜாதாவின் நடிப்பும் வசன உச்சரிப்பும் வெகுவாக பாராட்டப்பட்டன.  ஜெயகரை காதலித்து மணந்துகொண்டார். திருமணத்துக்குப் பின் ஒரு சில படங்களில் நடித்தார். சிறிய இடைவெளிக்குப் பின் குணச்சித்திர பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார். "உழைப்பாளி', "தாலாட்டு பாட வா', "கொடி பறக்குது', "அமைதிப்படை', "பாபா' போன்ற படங்களிலும் நடித்து உள்ளார் . 
http://bollywood.avashya.com/ext_media/pictures/6KSuNWZBfWiXXrX.jpeg
அவரது உடல் சென்னை நீலாங்கரை பீச்ரோட்டில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. நடிகர், நடிகைகள் பலர் இன்று காலை அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். 
நடிகர்கள் கமலஹாசன், சிவகுமார், ஒய்.ஜி.மகேந்திரன், நடிகை லட்சுமி, இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், மனோபாலா உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். 
சுஜாதா உடல் இன்று மாலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லோரும் பிரார்த்திப்போமாக . ஒரு நல்ல குணச்சித்திர நடிகையை தமிழ் சினிமா ரசிகர்கள் இழந்து விட்டார்கள் . மிகவும் கவலைக்குரிய விடயம் தான் . எல்லா ரசிகர்களுக்கும் ஒரு கவலை அளிக்கும் விடயமாக உள்ளது . அவரின் திடீர் இழப்பை உடனே தாங்க முடியவில்லை . என்றென்றும் நமது மனதில் நீங்காத இடம் பிடித்த சுஜாதா அவர்கள் எப்போதும் வாழ்ந்து கொண்டு இருப்பார் . 












.

 
 .
 
 

No comments: