Sunday, April 3, 2011

2011 உலகக்கிண்ணம் இந்திய அணிவசம்

http://1cric.com/wp-content/uploads/2011/04/India-ICC-Cricket-World-Champion-With-World-Cup-Trophy-Pictures-Photos-Celeberation-Wallpapers-11.jpg

நேற்று உலகக்கிண்ணம் இறுதிப்போட்டியில் இலங்கை, இந்திய அணிகள் மோதின . இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்து ஆடிய இலங்கை அணி 274 ஓட்டங்களை பெற்றது . இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 275 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது . இந்திய அணி 4 விக்கட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது .  இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வென்று கிண்ணத்தை கைப்பற்றியது .

http://walkwithworld.com/wp-content/uploads/2011/04/World-Cup-2011-winner-india.jpg
இந்த முறை கிண்ணத்தை வென்றதன் மூலம் உலகக்கிண்ணம் நடத்திய நாடுகள் அதன் சொந்த மண்ணில் இறுதி ஆட்டத்தை வென்றதில்லை என்ற வரலாற்றை மாற்றி புதிய சாதனைப் படைத்துள்ளது இந்திய அணி. இதற்கு முன் 1996-ம் ஆண்டு போட்டியை நடத்திய இலங்கை வென்றிருந்தாலும், இறுதி ஆட்டம் பாகிஸ்தானின் லாகூரில் நடந்தது குறிப்பிடத்தக்கது.இதேவேளை தனது கடைசி உலகக்கிண்ண போட்டியில் விளையாடும்  சச்சின், மும்பையில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் வெற்றிபெற்று கோப்பையைக் கைப்பற்ற வேண்டும் என்று கூறியிருந்தார். அவரின் நீண்ட நாள் உலகக்கிண்ண கனவு நேற்று நனவாகியுள்ளது.
http://www.instablogsimages.com/images/2011/04/02/india-world-champions-4_4FuEl_17022.jpg
இந்தியா கிண்ணத்தை வென்ற நாள் என் வாழ்வின் பெருமை மிக்க நாள் என சச்சின் உணர்ச்சி பொங்கக் கூறினர்.மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சக வீரர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.இந்தியா வெற்றிபெற்றதும் சச்சினை சகவீரர் யூசுப் பதான் தனது தோளில் தூக்கி வைத்து மைதானத்தில் வலம் வந்தார். அப்போது சச்சினின் கண்களில் இருந்து கண்ணீர் வெளிப்பட்டது. அதுகுறித்து அவரிடம் கேட்டபோது, அது ஆனந்தக் கண்ணீர். நாங்கள் எல்லோரும் உற்சாகத்தில் மேலும், கீழும் குதித்தபோது மெய்மறந்துவிட்டேன். ஆனந்தக் கண்ணீர் மல்கினர். 
http://krishraov.files.wordpress.com/2011/04/india_win_icc_world_cup_2011.jpg?w=500&h=387
ஒருநாள் கிரிக்கெட், இருபது ஓவர் கிரிக்கெட் என இரண்டிலும் கிண்ணத்தை வென்று கொடுத்த ஒரே தலைவர்  என்ற பெருமையைப் பெற்றார் தோனி. டெஸ்ட் அரங்கிலும் அவரது தலைமையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. தலைவர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்க்கு எடுத்துக்காட்டே தோனி தான் . நேற்றைய போட்டியில் நெருக்கடிகளுக்கு மத்தியில் தன் மீதான விமர்சனங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்து அணியை வெற்றுப் பாதைக்கு இட்டு சென்றார் . டென்சன் ஆகாமல் எதையும் சமாளித்து ஆடக்கூடியவர் தோனி . கூல் கப்டன் என்று சும்மாவா சொல்கிறார்கள் . 
http://www.pics4news.com/Event_Gallery/2011-02-27/India_vs_England_ICC_World_Cup_2011_Cricket_Match/Medium_Images/India_vs_England_ICC_World_Cup_2011_Cricket_Match_41082_medium.jpg
இந்தியா முழுவதும் வெற்றி களிப்பில் மூழ்கி உள்ளது . ஆசிய நாடு ஒன்று கிண்ணத்தை கைப்பற்றியது மிகவும் பெருமையான விடயம் . இலங்கை அல்லது இந்தியா தான் இம்முறை கிண்ணத்தை கைப்பற்ற வேண்டும் என்பதே எல்லோரிடமும் இருந்த ஆசை , விருப்பம் . இந்திய அணி நேற்றைய போட்டியில் பந்துவீச்சு , துடுப்பாட்டம் , களத்தடுப்பு போன்றவற்றில் அதீத திறமையை வெளிப்படுத்தினர் . 

இந்திய அணிக்கு எனது மனப் பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் ரசிகர்களின் சார்பாக . நானும் ஒரு ரசிகையாக . அதே வேளை இரண்டாம் இடம்பெற்ற இலங்கை அணிக்கும் எனது வாழ்த்துக்கள் .  






  

No comments: