Thursday, January 13, 2011

போட்டி இருக்கலாம், பொறாமை இருக்க கூடாது.

இது எல்லோருக்கும் முக்கியமான விடயம் . என்னவென்றால் நாம் எல்லோருக்கும் போட்டி மனப்பான்மை இருக்கலாம் . அப்போதுதான் நாம் ஒரு படி முன்னேறலாம் . அல்லது சோம்பேறிகளாகி காலத்தை கடத்தி கொண்டே போக வேண்டும் . தொழிலில் , படிப்பில் , விளையாட்டில் என்று எல்லா இடத்திலும் போட்டி இருக்க வேண்டும் .
http://lefteyeonthemedia.files.wordpress.com/2008/12/people.jpg
ஒருவருடன் ஒருவர் போட்டி போட்டால் தான் முன்னேறலாம் . ஓட்ட பந்தயத்தில் பத்து பேர் ஓடுகிறார்கள் . பத்துப்பேரும் முதலாம் இடம் கிடைக்க வேண்டும் என்று நினைத்துதான் ஓடுகிறார்கள் . நான் அவரை முந்த வேண்டும் என்று நினைத்து போட்டி போட்டுக் கொண்டு ஓடுகிறார்கள் . அவர்களில் ஒருவர் ஜெயிக்கிறார் . எதிலும் போட்டி இருக்க வேண்டும் .

நாம் மற்றவர்களை பார்த்து பொறாமை பட கூடாது . அவர் இப்படி வந்திட்டார் , இப்படி முன்னேறி விட்டார் , கார் வாங்கிவிட்டார் , பைக் பாங்கி விட்டார் என்று மற்றவர்களையோ , அயலவர்களையோ , உறவினர்களையோ பார்த்து பொறாமை பட கூடாது . சிலர் எதற்க்கு எடுத்தாலும் மற்றவர்களை பார்த்து பொறமை படுவதிலையே குறியாக இருப்பார்களே தவிர தாம் முன்னேற , தாம் எப்படி முன்னேறலாம் என்பதுக்கு என்ன வழி என்று சிந்திக்க மாட்டார்கள் .
http://sivers.org/images/people-per-week.gif
அவன் வெளிநாடு போய் நன்றாக உழைக்கிறான் , வீடு வாங்கிவிட்டான் என்றெல்லாம் பொறாமை படுகிறார்கள் . நாமும் எமது பிள்ளையை படிக்க வைத்து அவனுக்கு நல்ல வேலை கிடைத்து சம்பாதித்து நாம் கார் , வீடு என்பன வாங்க வேண்டும் என்று நினைக்க வேண்டும் . அவன் வெளிநாட்டில் உழைக்கிறான், சம்பாதிக்கின்றான் , வாங்குகிறான் . அதை நினைத்து நீங்கள் பொறாமை பட்டு என்ன நடக்க போகிறது . ஒரு வேளை சோறு அவனா போடப்போகிறான் . இல்லையே .

எனவே , நான் சொவது என்ன வென்றால் எதிலும் போட்டி இருக்கலாம் . கீரை கடைக்கும் எதிர்க்கடை வேண்டும் என்று சும்மாவா சொன்னார்கள் ? . பொறாமை பட கூடாது . எல்லோரும் சந்தோசமாக இருக்கலாம் . மற்றவனை பற்றி பொறாமை படாதவிடத்தில் ...........................



4 comments:

S Maharajan said...

அருமையான விளக்கவுரை
பவி!!!!!!!

குறையொன்றுமில்லை. said...

நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

Pavi said...

நன்றி மகாராஜன்

Pavi said...

நன்றி லக்ஷ்மி அம்மா அவர்களே