Thursday, January 13, 2011

பெண் கறுப்பு என்றால் வேண்டாம்

http://3.bp.blogspot.com/_XV47AIrzET4/SkrxungQzqI/AAAAAAAAAc8/Ktcnq0tS_kY/s400/black_woman_fly_girl_closeup_pearls.jpg

இயற்கையின் படைப்பில் வெள்ளை நிறமானவர்கள் , கறுப்பு நிறமானவர்கள் என்று இந்த பூவுலகில் பிறக்கிறார்கள் . வளர்கிறார்கள் . அவர்கள் படித்து முடிக்கும் வரைக்கும் ஒரு பிரச்சனையும் வராது கறுப்பு நிறம் , வெள்ளை நிறம் என்று . கல்யாண வயதை அடைந்ததும் ஆஆ .........அந்த பெண்ணா அது கறுப்பு . பக்கத்து வீட்டுக்கு எதிர் வீட்டில் நல்ல சிவந்த வெள்ளை நிறமான பெண் இருக்கு என்பார்கள் . என்னடா உலகம் இது .
http://www.girlzfashion.com/images//1-dress2.jpg
இதெல்லாம் நம்முடைய தமிழர் கலாசாரத்தில் அதிகம் பார்க்கப்படுகிறது . பெண் அழகிய , சிவந்த , வெள்ளையான , ஒல்லியான பெண்ணாக வேண்டுமாம் . மாப்பிளை எப்படி இருந்தாலும் பிரச்சனை இல்லை . ஏன் இப்படி ? கறுப்பான, குண்டான பெண்கள் இந்த உலகில் வாழ்வதில்லையா? அவர்கள் என்ன செய்வது . 
http://3.bp.blogspot.com/_KTZK6n4_P4Y/Sbu_oPvJVSI/AAAAAAAAAeE/Z2GGJMgzJPU/s400/naomi.jpg
முன்னைய காலகட்டத்தில் எல்லாம் கறுப்பான பெண்கள் வாழ்ந்ததில்லையா ? என்னை பொறுத்தவரையில் இறைவனின் படைப்பில் கால், கை ஊனம் இல்லாமல் இருந்தால் சரி . கறுப்பு , வெள்ளை எல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை . கறுப்பானவர்கள் எம்மை முட்டினாலோ, தொட்டாலோ எமக்கு கறுப்பு ஒட்டி கொள்ளுமா ? அல்லது கறுப்பானவர்களை கண்டால் யாரேனும் தள்ளி விடுகிறார்களா ? இல்லையே . ஏன் இந்த நிலைமை .

ஒருவருக்கு நல்ல குணமும் , மனமும் இருந்தால் போதும் . ஆணோ பெண்ணோ ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து , இன்ப துன்பங்களை பகிர்ந்து கொண்டு , சந்தோசமாக இல்லறத்தில் வாழ வேண்டும் . அதுதான் வாழ்க்கைக்கு தேவையே தவிர கறுப்பு , வெள்ளை தேவை இல்லை . ஆண் கறுப்பாக, குண்டாக இருந்தால் என்ன தலைமயிர் எல்லாம் கொட்டி மொட்டையாக இருந்தால் என்ன அது ஒரு பிரச்சனையே இல்லையாம் . பெண் சிவந்த நிறமாக அழகாக இருக்க வேண்டுமாம் .

ஒன்று சொல்லவா அழகு என்பது நிலையானது இல்லை .ஆடம்பரம் என்பது கொஞ்ச நாட்களுக்கு தான் . அழகு நமக்கு சோறு போடுமா ? ஒரு அழகான சிவந்த பெண்ணை கல்யாணம் செய்து கொள்கிறீர்கள் . சிறிது காலத்துக்கு பின் ஒரு விபத்தில் முகத்தில் எண்ணை பட்டு முகம் விகாரமாகவோ, அல்லது ஏதாவது நடந்து முகம் கறுப்பாகவோ மாறி விட்டது . என்ன செய்வீர்கள் ??? அந்த பெண்ணை விவாகரத்து பண்ணி விடுவீர்களா ?
http://www.instant-ramen.net/wp-content/uploads/2009/04/meow_ii_by_blackmage9.jpg
ஒரு பொன்மொழி சொல்கிறேன் . " நீ அழகான பெண்ணை திருமணம் செய்தால் தினம் தினம் கவலை , ஒரு சாதாரண பெண்ணை திருமணம் செய்தால் நாள்தோறும் மகிழ்ச்சி ". அதாவது அழகிய பெண்ணை திருமணம் செய்தால் எவன் கடுத்துகிறானோ, எவனுடனும் அவள் சென்று விடுவாளோ என்ற பயமும் , சந்தேகமும் ஆண்மகனுக்கு இருக்கும் . அதே ஒரு சாதாரண பெண் என்றால் எந்த கவலையும் இல்லாமல் நீங்கள் இருக்கலாம் , சந்தேகமும் படத்தேவை இல்லை . வாழ்க்கையும் இன்பமாக அமையும் . ஒருவரின் தொந்தரவும் இருக்காது . 

ஒரு ஆணோ, பெண்ணோ யாராகிலும் தமது நிறம், குணம் , மனம் என்பவற்றுக்கு ஏற்றாற்போல் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டுமே தவிர பதவி , பணம் , அழகு என்பவற்றை பார்த்து உடனே மயங்கி விடக்கூடாது . நிதானமாக யோசித்து நமது குடும்பத்துக்கு ஏற்ற பெண்ணா, ஆணா என முதலில் சிந்திக்க வேண்டும் . ஆடம்பரமான பெண்ணை திருமணம் செய்தால் நீங்கள் உளைப்பதெல்லாம் அவளுடைய ஆடம்பர செலவுக்கு காணாது . உங்கள் கதை அம்போ தான் . அதே ஒரு நடுத்தர பெண் என்றால் வரவுக்கு ஏற்ற செலவு செய்து மீதி பணத்தை சேமிக்கவும் செய்வாள் .
http://lh4.ggpht.com/_oHF-qUKh09c/S2F5OMRm1QI/AAAAAAAAnRs/PWBHL5TlE4s/janani-iyer-malayalam-5.jpg
கறுப்பு , வெள்ளை என்று நிறத்தை பார்த்து எடை போடாதீர்கள் . அவர்களின் குணத்தை , மனத்தை பாருங்கள் . அதுதான் முக்கியம் . இதிலும் நான் சொல்வது எல்லா ஆண்களையும் குறிப்பிடவில்லை . எவ்வளவோ ஆண்கள் தங்களையும் விட கறுப்பான பெண்களை திருமணம் செய்து சந்தோசமாக இருக்கிறார்கள் .  சில குறிப்பிட்ட சில ஆண்கள் தான் இப்படி வெள்ளை நிறமான பெண்கள் வேண்டும் என்று அடம்பிடிக்கிறார்கள் . என்ன காரணமோ..........

4 comments:

மு.ஜபருல்லாஹ் said...

பலரது உள்மன அழுக்கை கழுவிட முயற்சித்திருக்கிறீர்கள்.பாராட்டுக்கள் சகோதரி

தமிழ்ச்சரம் said...

பதிவு அருமை.... தோலின் நிறம், ஒருபோதும் ஒரு மணத்தை நிர்ணயிக்கக் கூடாது. ஆனால் தங்கள் பதிவிலேயே வெள்ளை நிறம் அழகு என்று நீங்கள் கூறுவதை மாற்றி எழுதவும், வெள்ளை கறுப்பு இரண்டும் அழகு தான். இதனால் தான் என்னவோ, முகத்தைக் காணமலே இஸ்லாத்தில் மணம் செய்யும் வழக்கு வந்ததோ என்னவோ?

பி.கு: வெள்ளத்தில் மிதக்கும் தமிழ் கிராமங்கள் : உதவ முன்வாருங்கள்

Pavi said...

நன்றி ஜபரு அவர்களே .
ம்ம்ம்ம்ம்ம் உண்மைதான் சகோதரா

Pavi said...

அழகு என்பது அவரவர் பார்வையை பொறுத்தது .
வெள்ளைதான் அழகு என்று நான் கூறவரவில்லை . கறுப்பானவர்களும் அழகுதான் .
நன்றி தமிழ்சரம்.