இலங்கையில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது . வீடுகளை இழந்து , சொத்துகளை இழந்து மக்கள் இருக்க இடமின்றி வெள்ளப்பெருக்கால் அவதி உற்ற வண்ணம் உள்ளன . மட்டக்களப்பு மாவட்டத்தின் 90 வீதமான பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கின்றன. மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். கடும் மழையால் இந்த மாவட்டமே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது . இந்த வருடம் பிறந்து அந்த மக்கள் நிம்மதியாக இருந்து வசிக்க முடியாமல் போய் விட்டது .
அம்பாறை , திருகோணமலை , பொலன்னறுவை போன்ற பல இடங்களிலும் மழை பெய்தும் , நெல் வயல்கள் அழிந்தும் போய் விட்டன . உள்ளூர் வீதிகளில் 4முதல் 5 அடிக்கு மேல் வெள்ளம் பாய்ந்து கொண்டிருப்பதால் மக்கள் போக்குவரத்துச் செய்யமுடியாமலும் அவசர கருமங்களை குறிப்பாக வைத்தியசாலைகளுக்கு நோயாளர்களைக் கொண்டு செல்வதற்கும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். மண்சரிவுகளும் ஆங்காங்கே இடம்பெறுகின்றன. சிலர் வெள்ளத்துக்குள் அடித்தும், மண்சரிவுகளில் அகப்பட்டும் கொல்லப்பட்டுள்ளனர் .
ஆறுகள், குளங்கள் நிரம்பி வழிந்து வெள்ளம் கிராமங்களுக்குள் மேலும் புக உள்ளதால் வெள்ள நீர் மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் மட்டக்களப்பு வாவி பெருக்கெடுத்துள்ளதால் அம்பாறை மாவட்டத்தின் எல்லைக்கிரமங்களான துறை நீலாவணை போன்ற தமிழ்க் கிராமங்களும் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.இதேவேளை, இந்த மாவட்டத்தின் கல்லோயா வீரக்கொடவாவியில் நீர்ப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அந்த வாவி உடைப்பு எடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
சந்தோசமாக தைப்பொங்கல் கூட கொண்டாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது மக்களுக்கு . உணவுகள், தண்ணீர் போத்தல்கள் எல்லாம் மக்களுக்கு அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள் உதவி செய்து கொடுக்கின்ற போதும் எல்லோருக்கும் போதிய அளவு கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது . எல்லோருக்கும் விநியோகிக்க வெள்ள பெருக்கால் எல்லா இடங்களிலும் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது . வாவிகள் எல்லாவற்றினதும் வான்கதவுகள் திறந்து விடப்பட்டு உள்ளன . அடித்து ஆள்ளிக்கொண்டு செல்கிறது வெள்ளம் .
இந்த ஆண்டின் ஆரம்பத்திலே மக்கள் துன்பப்படுகின்றனர் . உடுக்க உடைகள் இல்லாத நிலைமை . அன்றாட கருமங்களை செய்ய முடியாத நிலைமை போன்றன ஏற்பட்டு உள்ளன . வெள்ளநீர் வற்றியதும் தோற்று நோய்கள் வராமல் இருக்க வேண்டும் . எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும் .
6 comments:
வெள்ளப் பெருக்கால் கஷ்டப்படும் மக்களின் துயரம் தீர பிரார்த்திக்கிறேன்.
அந்த துயர் மனிதைகளை இயற்கை ஏந்தான் இப்படி வாட்டுதோ?
அவர்களின் துயரம் வடிந்து நல்வாழ்வுவாழ கடவுலை வேண்டுகிறேன்.
என் பிரார்த்தனைகள்
நன்றி குமார்
இறைவனும் துன்பத்துக்கு மேல் துன்பத்தை கொடுக்கிறார் போலும்.
நன்றி கருணாகரசு அவர்களே
நன்றி கோநா
Post a Comment