நண்பர்களே எல்லா விடயங்களும் எல்லோருக்கும் தெரிவதில்லை . நமக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு தெரியபடுத்த வேண்டும் . நமக்கு தெரியாததை மற்றவர்களிடம் கேட்டோ , தெரிந்தோ கொள்ள வேண்டும் . இது என்னுடைய பொலிசி. இது எல்லோருக்கும் நல்லது . நாமும் தெரியாத விடயங்களை தெரிந்து கொள்ளலாம் . கணனியில் எத்தனையோ விடயங்கள் இருக்கிறது . தொழில்நுட்ப அறிவு எல்லோருக்கும் இருப்பதில்லை . எத்தனையோ பேருக்கு கணணியை இயக்க தெரியும் . அதில் எதாவது பிழை என்றால் என்னவென்று பார்க்க தெரியாது . அது நமக்கும் தான் .
கணனியில் வைரஸ் பிரச்சனை என்றால் , பைல்கள் ஓபன் ஆகாமல் விட்டால் , கணணி ஒப்பின் ஆகி நின்று நின்று வந்தால் என்ன செய்வது என்று கூட தெரியாது . இதனால் கூடுதலாக பாதிக்கப்படுவது சகோதரர்கள் வீட்டில் இல்லாத சோதரிகள் தான் . ஏன் என்றால் ஒரு ஆண் பிள்ளை இருந்தால் கணணியை அதை அமத்தியோ , செய்தோ ஏதோ செய்வான் . தனது நண்பர்களிடம் கேட்டு பிழைகள் இருந்தால் திருத்துவான் . நண்பர்களை கொண்டு திருத்தி தருவான் .
கூடுதலான ஆண்பிள்ளைகளுக்கு இலகுவான காரியம் கணணியை போர்மட் (Format) செய்வது . கூடுதலாக எல்லோருக்கும் தெரிந்து இருக்கும் . ஆனால் பெண்பிள்ளைகளுக்கு கூடுதலாக தெரியாது . அவர்கள் கடைகளில் , போர்மட் (Format) செய்யும் இடங்களுக்கு சென்று தான் கணணியை திருத்த வேண்டும் . அல்லது தமது ஆண் நண்பர்களை வீட்டுக்கு கூப்பிட்டு தான் கணணியை திருத்தவோ, போர்மட் (Format) செய்யவோ முடியும் .
கடைகளில் எல்லாம் போர்மட் (Format) செய்து கொடுப்பதற்க்கு 500/= கொடுக்க வேண்டும் . வீட்டுக்கு வந்து திருத்தி கொடுத்தால் 2000/= கொடுக்க வேண்டும் என்றால் பாருங்களேன் . நண்பர்களே எல்லோருக்கும் பயன்படும்படியாக இருக்கும் . கணணியை எவ்வாறு போர்மட் (Format) செய்வது என்று அறிய தாருங்கள் . அது எல்லோருக்கும் பயனுள்ளதாக அமையும் .
எப்படி என்று எனக்கும் தெரியாது . சின்ன விஷயம் என்று சொல்கிறார்கள் . ஆனால் எம்மை போன்ற , பெண் பிள்ளைகளுக்கு கொஞ்சம் அறியத்தாருங்கள் . அதை ஒரு பதிவாகவும் இடவேண்டும் . எல்லோரும் பயன் பட வேண்டும் என்பதும் எனது அவா . அல்லது உங்கள் நண்பர்கள் யாரேனும் கணணியை போர்மட் (Format) செய்வது எவ்வாறு என்று பதிவு இட்டு இருந்தால் அதன் லிங்கை எனக்கு தெரிய படுத்தவும் .
அன்பு உள்ளங்கள் , நண்பர்கள் எங்களுக்கும் உதவி செய்யுங்கப்பா ................
ம்ம்மம்மம்ம்ம்ம் நண்பேண்டா.............................
10 comments:
நமக்கு தெரியாதவற்றை கேட்ப்பதில் எந்த தவறுமில்லை.. எனக்கு ஓரளவு தெரியும்.. நண்பர்களிடம் முழுமையா கேட்டு உங்களுக்கு கண்டிப்பாக தெரியப்படுத்துகிறேன்..
மாதா மாதம் நானெ என் கணணியை பார்மேட் செய்து வருகிறேன். அதில் ஒன்னும் கம்ப சூத்திரம் கிடையாது. எளிமையானதுதான். அதற்கு ஆபரேட்டிங் சிஸ்டம் சிடி, மதர் போர்டு டிரைவர் சிடி அல்லது அதற்குறிய வி.ஜி.ஏ - ஆடியோ டிரைவர் வேண்டும் இவை இருந்தால் பார்மேட் செய்யலாம். உத்தேசமாக பார்மேட் செய்து எல்லா சாப்ட்வேரையும் லோடு செய்ய 2 மணி நேரம் ஆகும். விரைவில் என் வலைப்பக்கத்தில் பதிவிடுகிறேன்.
Try this Link
http://www.youtube.com/watch?v=kIhVlz6v0Js
நமக்கு தெரியாதவற்றை கேட்ப்பதில் எந்த தவறுமில்லை.. ஆனால் இதை கமென்ட் மூலமோ மெயில் மூலமோ விளக்குவது கொஞ்சம் கடினம்..
நண்பர் கொடுத்தலிங்க் சரியே..
http://www.youtube.com/watch?v=kIhVlz6v0Js
நீங்கள் எனக்கு கூறினாலும் சரி . அப்படி இல்லாவிடில் நீங்கள் அதை ஒரு பதிவாக போடுங்கள் .
எல்லோருக்கும் பயன்படும் தானே .
நன்றி வெறும்பய
பதிவு இடுங்கள் சீக்கிரம். ஆவலாக உள்ளேன் .
நன்றி நடராஜன் ஐயா அவர்களே
நன்றி அலாவுதீன்
பார்த்தேன்
கமென்ட் மூலமோ , மெயில் மூலமோ மேலோட்டமாக தான் கூறலாம் என்று எனக்கு தெரியும் . அதே உங்களில் யாராவருக்கு தெரிந்தால் அதனை ஒரு பதிவாக இடுங்கள் . அது எல்லோருக்கும் பிரயோசனமாக இருக்கும் . நண்பரின் லிங்க் பார்த்தேன் .
நன்றி சக்தி
எனக்கும் கொஞ்சம் தெரியும். பதிவிலோ, மின்னஞ்சலிலோ தெரிவிக்க முயல்கிறேன்.
நன்றி குமார் .
இவை ஏதாவது இல்லாவிட்டால் உங்களது பதிவில் எழுதுங்கள்
Post a Comment