Friday, September 24, 2010

நான் அதிசயித்த கோவில்களில் ஒன்று தஞ்சை பெரிய கோவில்இந்துக்கள் அனைவரும் கோவில்களுக்கு சென்று இறைவனை வழிபடுகிறோம் . எமது மனச்சுமைகளை இறக்கி வைத்து இறைவனிடம் எமது வேண்டுதல்களை வேண்டி வழிபடுகிறோம். எமது மனம் அப்போதுதான் இலேசாகிறது . மனதில் உள்ள தீய எண்ணங்கள் எல்லாம் போகின்றன . மனம் அமைதி அடைகிறது .

நான் பார்த்து அதிசயித்த கோவில்களில் ஒன்று தஞ்சை பெரும் கோவில் தான் . எல்லோரும் இந்தியாவுக்கு சென்றால் பல கோவில்களுக்கு சென்று வருவார்கள் . எனக்கும் அந்த பாக்கியம் கிடைத்தது . அதில் எனக்கும் இவ்வருடம் ஆயிரம் ஆண்டுகளை கொண்டாடும் தஞ்சை பெரும் கோவிலுக்கு சென்று வர சந்தர்ப்பம் கிடைத்ததுக்கு மிகவும் எனக்கு ஆனந்தம் . அளவில்லா மகிழ்ச்சியும் கூட .
http://img.dinamalar.com/data/images_news/tblfpnnews_34886896611.jpg
இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டிய கோவில் இவ்வளவு கரும்கட்களை கொண்டு இப்படி அழகாக கட்டி இருக்கிறார்களே. அப்போதெல்லாம் நவீன தொழில் நுட்பங்களோ , சாதனங்களோ இல்லாமல் இவ்வளவு கலையம்சம் கொண்டு அமைந்த இந்த கோவிலின் சிறப்பு பிரமிக்கத்தக்கது .


தமிழக வரலாற்றில், பொற்காலம் எனப் போற்றப்படும் சோழர் வரலாற்றில், மாமன்னன் ராஜராஜசோழன் சிறப்பிடம் பெற்று விளங்குகிறான். இரண்டாம் பராந்தகன் என்ற சுந்தர சோழனுக்கும், வானவன் மாதேவிக்கும் பிறந்த மைந்தன் அவன்.அருள்மொழிவர்மன் என்பது இவனது இயற்பெயர். கேரளாந்தகன், சிங்களாந்தகன், மும்முடிசோழன், சிவபாதசேகரன், திருமுறை கண்ட சோழன், சத்திரிய சிகாமணி, ராஜாஸ்ரயன் என்ற, பல சிறப்புப் பெயர்களைக் கொண்டு விளங்கினான்.
 http://www.indiapicks.com/annapurna/M_Tanjore_Bragatheeswarar.jpg
பிற்காலச் சோழர்களில் மிகப் புகழ் பெற்றவனும், தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு சோழப் பேரரசைக் கட்டியெழுப்பியவனும் ஆகிய இராஜராஜசோழன் தோற்றுவித்த ராஜராஜேச்சுரம் எனும் பெரிய கோயிலுக்கு இவ்வாண்டு ஆயிரமாண்டு நிறைவடைகிறது.

தஞ்சைப் பெரிய கோவிலில் சதயத்திருவிழா, 12 நாட்கள் சிறப்பாக நடந்ததை, அக்கோவில் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இந்நாட்களில் இறைவனுக்கு அபிஷேகம் செய்யும்போது, அபிஷேக நீரில் ஏலக்காய், செண்பக மொட்டுகள் போடப்பட்டு, மிகுந்த நறுமணத்துடன் அபிஷேகம் செய்யப்பட்டது.ராஜராஜ சோழனால் பலத் திருக்கோவில்கள் கட்டப் பெற்றன. அவற்றில், தஞ்சைப் பெரிய கோவில் தலைச்சிறந்த, ஒப்பற்ற கோவிலாகத் திகழ்கிறது. கட்டடக் கலை, சிற்பக் கலை, செப்புத் திருமேனிகள் வார்ப்புக்கலை, ஓவியக் கலை, கல்வெட்டுகள் கூறும் செய்திகள் ஆகிய அனைத்துக்கும் சிறப்பிடமாகத் திகழ்கிறது.
http://sagotharan.files.wordpress.com/2010/02/img_raja.jpg
எனவே, இக்கோவிலை ஓர் ஒப்பற்ற கலை வரலாற்றுக் களஞ்சியம் எனக் கூறுவதில் மிகையில்லை!பிரகதீசுவரர் கோவில் என்று இன்று அழைக்கப்பட்டாலும், "இராஜராஜீச்சுரம்' என்றும், "ஸ்ரீஇராஜராஜீசுவர முடையார் கோவில்' எனவும் கல்வெட்டுகளில் உள்ளதைக் காணலாம்.

""பாண்டிய குலாசனி வளநாட்டு தஞ்சாவூர் கூற்றுத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீஸ்வரமுடையார்,'' என்று, இப்பெரும் கோவிலைக் கட்டியதை பெருமிதத்தோடு ராஜராஜன் கூறுகின்றான். அடித்தளம் முதல் சிகரம் வரை கற்களைக் கொண்டு கட்டப்பட்டதால் இக்கோவில், "கற்றளி' என அழைக்கப்படுகிறது.
http://2.bp.blogspot.com/__nvgWNxO7j8/S63MjLmG04I/AAAAAAAAAvk/c6ajgO9RnTc/s320/tanjore+trip+2+006.jpg திருநாவுக்கரசருக்குப் பின்னர், தஞ்சையைப் பாட்டில் வைத்தவர், பூதத்தாழ்வார். அவரைத் தொடர்ந்து திருமங்கைஆழ்வார். நாயன்மாரும், ஆழ்வார்களும் கருதி வந்து தொழுத சைவ-வைணவக் கோயில்கள் தஞ்சையில் இருந்திருக்கின்றன. 

மன்னனின் பெயராலேயே ராஜ ராஜேச்சுரம் என்று வழங்கிய கோயில், பிரஹத் ஈஸ்வரம் என்று வடமொழிப் பெயராலும், பெரிய கோவில் என்று மக்களாலும் வழங்கப் பெறுகிறது. 

 
கருவறைக்கு மேலே உள்ள விமானம், 13 தளங்களையும், 216 அடி உயரமும் கொண்டு கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. உயர்ந்து காணப்படும் விமானம், "தட்சிணமேரு' எனச் சிறப்பித்து அழைக்கப்படுகிறது.
இக்கோவிலின் கிழக்குப் பக்கத்தில், இரண்டு கோபுரங்கள் காணப்படுகின்றன. முதல் கோபுரம், "கேரளாந்தகன் திருவாயில்' என்றும்; இரண்டாவது கோபுரம், "ராஜராஜன் திருவாயில்' என்றும் பெயரிட்டு குறிப்பிடப்படுவது சிறப்பு.

ராஜராஜன் திருவாயிலில், அடித்தளத்தில் சண்டீசர் கதை, கண்ணப்ப நாயனார் வரலாறு, காமதகனம், வள்ளித் திருமணம் போன்றவை தொடர் சிற்பங்களாகவும், மேற்குப் பகுதியில் காணப்படும் பெரிய துவாரபாலகர் சிற்பங்களும் நம் கண்களை  கவர்கின்றன.
கோவிலின் திருச்சுற்றுமாளிகையில், 36 பரிவார கோவில்கள் காணப்படுவதும் சிறப்பாகும்.
http://2.bp.blogspot.com/_Za3-ZDfiOMs/SKKaAt2D--I/AAAAAAAABs4/J_i_7deoPko/s400/rsinsouth-indian-temple-complex-tamil-nadu0000235010_resized.JPG
இறைவன் எழுந்தருளியிருக்கும் கருவறை அமைப்பு தனிச் சிறப்பானது. கருவறை ஒரு திருச்சுற்று உடையதாக விளங்குகிறது. இவ்வகையான கோவில் அமைப்பை, "சாந்தாரக் கட்டடக் கலை' அமைப்பு எனக் கூறுவர்.இத்திருச்சுற்றில் தெற்கில் அகோர சிவர், மேற்கில் தத்புருஷர், வடக்கில் வாமதேவர் என்று தெய்வ வடிவங்கள் அமைக்கப் பெற்று, சிவபெருமான் சதாசிவ மூர்த்தியாகக் காட்சி தரும் அற்புத கோவில் இது!
இறைவனுக்கு மேலே உள்ள விமானத்தின் உட்கூடு, வெற்றிடமாக, "கதலிகா கர்ணம்' என்ற கட்டடக் கலை அமைப்பில் அமைந்துள்ளது சிறப்பு. கருவறை இரண்டு தளம் உடையதாக விளங்குகிறது. மேற்தளத்தில் சிவபெருமானே ஆடவல்லனாக, நடமாடும் சிற்பங்கள் காணப்படுகின்றன. 

இத்தகைய சிறப்பு வாய்ந்த தஞ்சைப் பெரிய கோவில் நிறுவப்பட்டு, 1,000 ஆண்டுகள் நிறைவடைகின்றன. எம் இனத்துக்கும் பெருமை சேர்க்கிறது . இந்து மதத்துக்கும் பெருமை சேர்க்கிறது .
7 comments:

ஸ்ரீ.... said...

எவ்வளவு எழுதினாலும் தஞ்சைக் கோயிலின் பெருமைகளை முழுமையாகச் சொல்லிவிட இயலாது. உங்கள் இடுகை அருமை.

ஸ்ரீ....

r.v.saravanan said...

நல்ல இடுகை பவி பாராட்டுக்கள் என் தளத்திலும் தஞ்சை பெரிய கோயில் பற்றி இடுகையிட்டுள்ளேன்

r.v.saravanan said...

நல்ல இடுகை பவி பாராட்டுக்கள் என் தளத்திலும் தஞ்சை பெரிய கோயில் பற்றி இடுகையிட்டுள்ளேன்

Pavi said...

நீங்கள் சொல்வது சரிதான் ஸ்ரீ
நன்றி ஸ்ரீ

Pavi said...

ம்ம்ம்ம் பார்த்தேன்
நன்றி சரவணன்

சே.குமார் said...

நல்ல இடுகை பவி பாராட்டுக்கள்

Pavi said...

நன்றி குமார்