அந்த வகையில் காலத்தால் அழியாத திருவள்ளுவரின் திருக்குறளும் ஒன்றாகும் . உலகப்பொதுமறை என்று அழைக்கப்படும் திருக்குறளை திருவள்ளுவர் எழுதிஉள்ளார் . உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும்.
எல்லா இலக்கியங்களில் இருந்து வேறுபட்டு தன்னிகராக திகழ்கிறது திருக்குறள். இரண்டு வரிகளில் அமைந்து இருந்தாலும் விளக்கமான கருத்துக்களை எமக்கு எடுத்து இயம்புகிறது . இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழும் புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழத் தேவையான மாறா அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்கும் பேரழகுடைய இலக்கியப் படைப்பு.
எல்லோரும் திருக்குறளை படிக்க வேண்டும். அதன் கருத்துகளை அறிந்து வைத்திருக்க வேண்டும் . பாடசாலைகளில் கூட திருக்குறள் மனன போட்டிகள் நடத்தப்படுகிறன . மாணவர்கள் திருக்குறளை படிப்பது மட்டும் அல்லாமல் அதற்கான பொருளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் . பரிமேலழகர் உரைதான் சிறந்ததாக கருதப்படுகிறது .
உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை. கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும் அழைக்கப்படுகிறது.
பாயிரம்" என்னும் பகுதியுடன் முதலில் "அறத்துப்பால்" வருகிறது. அதிலும் முதலில் காணப்படுவது , "கடவுள் வாழ்த்து" என்னும் அதிகாரம். தொடர்ந்து, "வான் சிறப்பு", "நீத்தார் பெருமை", "அறன் வலியுறுத்தல்" ஆகிய அதிகாரங்கள். அடுத்துவரும் "இல்லறவியல்" என்னும் இயலில் 25 அதிகாரங்கள்; அடுத்துள்ள துறவறவியலில் 13 அதிகாரங்களுடன் முதற்பாலாகிய அறத்துப்பால் பகுதி முடிவுறுகிறது. அடுத்து வரும் பொருட்பாலில் அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் ஆகிய இயல்கள் இருக்கின்றன. அரசு இயலில் 25 அதிகாரங்கள் உள்ளன. அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும், ஒழிபு இயலில் 13 அதிகாரங்களும் உள்ளன.
"மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின் " என்ற குறளில் அவர் சொல்ல வருவது யாதெனில் தமிழர் பண்பாட்டில் தலைசிறந்தது மானம். மானம் என்பது ஒருவன் தன் நிலையிலிருந்து தாழாதிருப்பது; தாழ்வு வரும் போது உயிர்வாழாதிருப்பது. தமிழர் மானமிழந்து உயிர் வாழ விரும்பமாட்டார்.கவரிமானானது தனது உடம்பில் இருந்து ஒரு மயிர் கீழே விழுந்தாலும் உயிர் வாழ மாட்டாது . அதுபோலதான் மானமுள்ளவனும் இருப்பான் என்கிறார் .
கடைசிப்பாலாகிய "இன்பத்துப்பால்" அல்லது "காமத்துப்பாலி"ல் இரண்டு இயல்கள்; களவியலில் 7 அதிகாரங்களும், கற்பியலில் 18 அதிகாரங்களும் உள்ளன. ஆகமொத்தம் 7 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள். திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் திருவள்ளுவர் பாடியுள்ளார். ஆனால் இவற்றில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன.
இன்னொரு குறள்.
"அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர் அன்பு உடையார்
என்பும் உரியர் பிறக்கு" அன்பு இல்லாதவர் எல்லாம் தமக்கே என்றே வாழ்வர் ஆனால் அன்பு உள்ளவரோ உடலுக்கு உரித்தாய் உள்ள எலும்பைப் போல தம்மை எல்லா உயிருக்கும் உரியர் என்று எண்ணி மனிதர்களாய் வாழ்வர்.
என்பும் உரியர் பிறக்கு" அன்பு இல்லாதவர் எல்லாம் தமக்கே என்றே வாழ்வர் ஆனால் அன்பு உள்ளவரோ உடலுக்கு உரித்தாய் உள்ள எலும்பைப் போல தம்மை எல்லா உயிருக்கும் உரியர் என்று எண்ணி மனிதர்களாய் வாழ்வர்.
"ஒழுக்கம் விழுப்பம் தரலாம் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்"ஒருவர் எத்துணை உயர் அறிவு பெற்றிருப்பினும், மக்கட் பண்பு உடையவராக வாழ்ந்தாலே அவருக்குச் சிறப்புத் தருவதாகும். அன்றேல் (இல்லையேல்), அவர் ஆறறிவு படைத்தவராயினும், ஓரறிவுள்ள மரத்துக்கு ஒப்பாக கருதப்படுவர்.
உயிரினும் ஓம்பப் படும்"ஒருவர் எத்துணை உயர் அறிவு பெற்றிருப்பினும், மக்கட் பண்பு உடையவராக வாழ்ந்தாலே அவருக்குச் சிறப்புத் தருவதாகும். அன்றேல் (இல்லையேல்), அவர் ஆறறிவு படைத்தவராயினும், ஓரறிவுள்ள மரத்துக்கு ஒப்பாக கருதப்படுவர்.
திருக்குறளில் இப்படி பல குறள்கள் உண்டு. நமக்கு அவை நல்ல கருத்துகளையும் நம் வாழ்வுக்கு ஏற்ற அரிய கருத்துகளையும் முன் வைக்கின்றன . திருக்குறளை எல்லோரும் படித்து பயன் பெறுவோமாக .
7 comments:
Thirukkural kuriththu arumaiyana pakirvu pavi...
padangalum kural vilakkamum arumai.
நன்றி குமார் .
திருவள்ளுவரை எல்லோருக்கும் தெரிய வேண்டும் தானே
அதுதான் படங்களும் சேர்த்தேன் .
நன்றி நீங்கள் தான் இன்று முதல் கருத்தை தெரிவித்த அதிஸ்டசாலி
உலகப் பொதுமறை குறித்த அழகான இடுகை. கவிஞர் வாலியின் “வள்ளுவம்” வாசித்துப் பாருங்கள். அறத்துப்பாலுக்கு வசன கவிதையில் உரையெழுதியிருக்கிறார். அற்புதமான தமிழ்.
ஸ்ரீ....
உண்மை தான் பவி
"கற்க கசடற கற்ற-பின்
நிற்க அதற்கு தக"
நன்றி ஸ்ரீ
நன்றி மகாராஜன்
இந்த இடுகையையும் கொஞ்சம் பாருங்கள் நண்பர்களே!!! http://tamilvegan.blogspot.in/2011/12/blog-post.html
Post a Comment